ஸ்ரீசாந்தின் மீதான தடை விரைவில் முடிவுக்கு வருகிறது. அடுத்த வருடம் அவர் ரஞ்சி ஆடுவார் என தெரிகிறது. அவரது ரசிகனாக இத்தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. முகமது அமீரைப் போல் ஸ்ரீயும் மீண்டு வந்து அபாரமாக வீச வேண்டும். அந்த அபாரமான ரன் அப்பை, அந்த ஸ்விங்கை, அந்த வெற்றிக் களிப்பை நான் மீண்டும் பார்க்க வேண்டும்.
அவர் பண்ணிய குற்றத்துக்கு இப்படியான ஒரு மறுவாய்ப்பு நியாயமா? ஏன் கூடாது? சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டு வந்து ஆடவில்லை?சூதாடிய இந்தியா சிமெண்ட்ஸை, அதன் நிர்வாகத்தை நிரந்தரமாகவா தடை பண்ணினோம்? கார்ப்பரேட்டுக்கு ஒரு நீதி, தனிநபருக்கு மற்றொன்றா?
குற்றங்கள் மன்னிக்கத்தகுந்தவை. மனம் தளராது போராடி மீளும் கறைபடிந்த மனிதர்கள் அரவணைத்து ஏற்றுக் கொள்ளத் தக்கவர்கள். ஸ்ரீசாந்தை ஒவ்வொரு நிஜ கிரிக்கெட் ரசிகனும் வரவேற்பான்!