Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

நாவல் எழுதும் கலை - ஒரு எளிய சுருக்கமான அறிமுகம்

நேற்றைய வெபினாரில் நான் பயன்படுத்திய குறிப்புகளை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். நான் பட்டியல்களில் நம்பிக்கையற்றவன், ஆனால் இந்த உரையாடலுக்கு சில எழுத்தாளர்களை பட்டியலிட அவசியமானது, மற்றபடி இதை ஒரு மதிப்பீடாக யாரும் பார்க்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்:


நாவல் என்னும் எழுத்து வடிவம் ஐரோப்பாவில் அநேகமாய் பதினேழாம் நூற்றாண்டில் தோன்றுகிறது

  • அச்சு ஊடகத்தின் அறிமுகம் மற்றும் வளர்ச்சியால்
  • நாளிதழ்களின் பெருக்கத்தால் தோன்றின சிறுகதைகள்
  • நாவலில் அபுனைவுக்கான இடம் 
  • தனிமனித வரலாறுகள், டைரிக்குறிப்புகள் நாவலானது
  • தனிமனிதனின் பயணங்கள் நாவலாவது, அதன் வழி ஒரு மொழியின் இலக்கியம், நம்பிக்கைகள் பகடி செய்யப்படுவது - 1605, 1615இல் பிரசுரிக்கப்பட்ட டான் குவிக்ஸாட் ஒரு நல்ல உதாரணம்
  • செர்வாண்டஸின் டான் குவிக்ஸாட் - முதல் நவீன நாவல்
  • இங்கிலாந்தில் முதல் நவீன நாவல் டானியல் டீபோ எழுதிய ராபின்சன் குரூசோ (1719)
    • 1716இல் எழுதப்பட்ட Gulliver’s Travels
    • சாமுவல் ரிச்சர்ட்சனின் பமீலா (1740)
    • ஹென்ரி பீல்டிங்கின் The History of Tom Jones (1749)
  • அடுத்து 18ஆம் நூற்றாண்டில் கற்பனாவாத காலம் துவங்குகிறது
    • 19ஆம் நூற்றாண்டில் Gothic நாவல்கள் - மேரி ஷெல்லியின் பிராங்கென்ஸ்டைன் (1818) - விஞ்ஞானப் புனைவின் துவக்கம்
    • ஜேன் ஆஸ்டினின் எதார்த்த குடும்ப நாவல்கள் - குடும்பத்துடன் சமூகப் போக்குகளை, பெண் உளவியலை இணைத்துப் பேசும் முயற்சி - Pride and Prejudice (1813), Sense and Sensibility (1811)
  • 19ஆம் நூற்றாண்டின் பிற்காலம் - விக்டோரிய யுகம்
    • சமூக நாவல்களின் காலம் - நாவலுக்கான சந்தை விரிவடைகிறது - தொடர்கதையாக நாவல் பிரசுரமாகிறது - நாவலாசிரியனாவது ஒரு தொழிலாகிறது - சார்லஸ் டிக்கென்ஸ் - நாவல் வழி சமூக விமர்சனம் மற்றும் சீர்திருத்தம் - ஏழைகளின் துயர கதை, அவர்கள் போராடி மேற்தட்டை அடையும் கதை, ஏழை வர்க்கத்தின் பால் இரக்கம் ஏற்படுத்தும் எழுத்து - Oliver Twist (1831), Great Expectations (1861)
    • அடுத்து முக்கியமான நாவலாசிரியர் பகடி எழுத்தாளர் வில்லியம் தாக்கரே (Vanity Fair) 
    • Emily Bronte (Wuthering Heights), Charlotte Bronte (Jane Eyre) - நாவலை இலக்கிய வாசிப்பு நோக்கி இழுத்த படைப்புகள் - மனம் சார்ந்த நெருக்கடிகளுக்கு, காதலுக்கு, அன்புக்கு, செண்டிமெண்டலான தொனிக்கு, பெண்களின் சிக்கல்களுக்கு அதிக இடமளித்த எழுத்து
    • தாமஸ் ஹார்டி - மிகையான நாடகீய கற்பனாவாத கிராமீய நாவல்கள் - நகரமயமாக்கலால், மனித வஞ்சகத்தால் எளிய மனிதர்கள் அடையும் துயரம், அவர்கள் இயற்கையிடம் தஞ்சமடைந்து மீள் முயல்வது, விதி அவர்களை அறுதியாக வீழ்ச்சியை நோக்கி இட்டு செல்வது - இருத்தலியல் தன்மை கொண்ட ரொமாண்டிக் நாவல்கள் - Tess of the D’urbervilles (1891)
    • வில்கி காலின்ஸின் எழுதிய முதல் துப்பறியும் நாவல் - The Moonstone (1868)
  • இருபதாம் நூற்றாண்டு:
    • இன்றைய எழுத்தில் அதிகம் தாக்கம் செலுத்தும் நவீனத்துவ நாவல்கள்
    • ஜேம்ஸ் ஜாய்ஸ் - Ulysses (1922) - stream of consciousness (தமிழில் நகுலன்) - நவீனத்துவ இயக்கத்தின் சாரத்தை, அனைத்து இயல்புகளையும் தாங்கிய நாவல் 
    • வெர்ஜீனியா வூல்ப் - Mrs Dalloway (1925)
    • டி.எச் லாரன்ஸ் - நவீனத்துவத்துக்கும் கற்பனாவாத்துக்குமான பிள்ளை - இயற்கை - ஆண்மை - பாலின்பம் - உள்வியல் - பிராயிட் - Sons and Lovers (1920)
    • ஜார்ஜ் ஆர்வல் - Animal Farm (1945) - சமூகப் பகடி; எதேச்சதிகார எதிர்ப்பு; இதைப் போன்ற மற்றொரு நாவல் வில்லியம் கோல்டிங்கின் Lord of the Flies 
  • அமெரிக்க நாவல்கள்
    • நதேனியல் ஹாதோர்ன் - The Scarlet Letter (1850)
    • ஹெர்மன் மெல்வில் - Moby-Dick (1851)
    • மார்க் ட்வெயின் - அமெரிக்க நாவல் கலையின் முதல் மேதை - அமெரிக்க வாழ்க்கையின் அடிப்படையான உளவியலை முதலில் சித்தரித்தவர் - Huckleberry Finn - அனைத்து நவீன அமெரிக்க நாவல்களின் துவக்கமும் இந்த நாவலில் இருந்தே என்றார் ஹெமிங்வே; Tom Sawyer - மற்றொரு முக்கிய நாவல்.
    • ஸ்காட் பிட்ஸ்ஜெரால்ட் - The Great Gatsby
    • ஜெ.டி சாலிங்கர் - The Catcher in the Rye
    • எர்னஸ்ட் ஹெமிங்வே - அமெரிக்க நாவல் இலக்கியத்தின் இரண்டாவது மேதை - The Oldman and the Sea (1952), Farewell to Arms (1929), The Sun Also Rises (1926)
    • இருபதாம் நூற்றாண்டில் நாம் நாவல் மிகச்சுருக்கமாக கராறாக எழுதப்படுவதையும், ஜேம்ஸ் ஜாய்ஸ் செய்ததைப் போல ஒரு காவிய வடிவம் பெறுவதையும் பார்க்கிறோம் - குறியீடு, செறிவு, கச்சிதம் முக்கியமாகிறது.
    • முக்கிய பிரஞ்சு நாவல்கள் - ஆல்பர்ட் காமுவின் The Stranger, Plague - பிளாபெர்ட்டின் Madame Bovary - அலெக்ஸாண்டர் டூமோவின் The Count of Monte Cristo, ஆண்டோயின் டி செயிண்டின் குட்டி இளவரசன் - மார்க்செல் ப்ரூஸ்டின் In Search of Lost Time
    • முக்கிய ரஷ்ய நாவல்கள் - நாவலின் கலையை அறிய ரஷ்ய நாவல்களைப் படிப்பதன் அவசியம் - நாவலில் ஆகப்பெரிய மேதைகள் தோன்றியது ரஷ்ய மண்ணில் தான் - தல்ஸ்தாயின் போரும் வாழ்வும் மற்றும் அன்னா கரெனினா; தஸ்தாவஸ்கியின் Brothers Karamazov, Crime and Punishment 
    • பின்நவீன நாவல் - நவீன நாவலின் அத்தனை இயல்புகளையும் தலைகீழாக்குகிறது - நேர்கோட்டுக் கதைகூறலை நேரியலற்ற (non-linear) கதைகூறலாக்குகிறது - எதார்த்ததின் இடத்தில் மாய எதார்த்தத்தை கொண்டு வருகிறது - சீரியஸ் எழுத்து, வணிக எழுத்து ஆகியவற்றின் வரலாற்று எல்லைகளை, கவிதை, வரலாறு, பகடி, விளையாட்டு, ஜோக், உண்மை, பொய் போன்றவற்றின் இடையே உள்ள வடிவ எல்லைகளை கலைத்து இல்லாமல் ஆக்க முயல்கிறது.
    • நவீன நாவல் 20ஆம் நூற்ராண்டு எந்திரமயமாதலின் குழந்தை என்றால் பின்நவீன நாவல் நவதாராளவாதத்தின், அதிகார குவிப்புக்கு எதிரான போக்குகளின் குழந்தை. உறுதியாக ஒன்றில் காலூன்றி நிற்க முடியாத தவிப்பே நவீன நாவல் என்றால் எதனுடன் மையமாக கட்டப்படாமல் அலைவதன் அழகியலை, சுதந்திரத்தைக் கொண்டாடுவது, பிரதியெடுப்பதைக் கொண்டாடுவது பின்நவீன எழுத்து. நவீன எழுத்து கண்ணாடி முன் நிற்கும் ஆள் என்றால் பின்நவீன எழுத்து கண்ணாடியில் அவரது பிரதிபலிப்பு, தான் பிரதிபலிப்பு என்பதில் குதூகலமடையும் எழுத்து.
    • முக்கியமான பின்நவீன நாவல்கள்
      • Naked Lunch - William Burroughs
      • On the Road - Jack Kerouac 
      • Catch-22 - Joseph Heller
      • A Clockwork Orange - Anthony Burgess
      • The One Hundred Years of Solitude - Marquez 
      • In Cold Blood - Truman Capote
      • Slaughter-house Five - Kurt Vonnegut
      • Gravity’s Rainbow - Thomas Pynchon
      • If On a Winter’s Night a Traveller - Italo Calvino
      • The Name of the Rose - Umberto Eco
      • Haroun and the Sea of Stories - Salman Rushdie
      • Pedro Paramo (probably the most important postmodern novel in terms of experimental narration) - Juan Rulfo
      • 2666 - Roberto Belano
      • The Blind Assassin - Margaret Atwood
      • Wind-up Bird Chronicle, Kafka on the Shore - Murakami
    • தமிழின் முதல் நாவல் - பிரதாப முதலியார் சரித்திரம் (1857) - வேதநாயகம் பிள்ளை
    • இந்திய நாவல்கள் காலனியவாதத் தாக்கத்தினால் தோன்றியவை
    • நவீன நாவல் என்பது நமது இயல்பான வடிவம் அல்ல - ஆனால் நாம் அதில பெருமளவு வெற்றியும் பெற்றிருக்கிறோம் - சு.ராவின்ஜெ.ஜெ சில குறிப்புகள்’, தி.ஜாவின்மோகமுள்’, ஜெயமோகனின்காடு’, பூமணியின்வெக்கை’, அசோகமித்திரனின்தண்ணீர்மற்றும்பதினெட்டாவது அட்சக்கோடு
    • புனைவைப் பொறுத்தமட்டில் நவீனத்துவமும் பின்நவீனத்துவமும் தமிழில் சிறுகதையிலேயே அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது, மிகப்பெரிய சாதனைகளை அவ்வடிவிலேயே நாம் செய்துள்ளோம்.
    • பின்நவீன இலக்கியம் இங்கு பெருமளவில் அலையாகத் தோன்றியது தொண்ணூறுகளில்
    • பின்நவீனப் புனைவில் எஸ்.ரா, கோணங்கி, நகுலன், சாரு நிவேதிதா, பிரேம் ரமேஷ், ஜெயமோகன், பா. வெங்கடேசன், ஜெ.பி சாணக்யா, தேவி பாரதி ஆகியோர் முக்கியமானவர்கள்.
    • பின்நவீன நாவல்களில் நகுலனின்நவீனன் டைரி’, எஸ்.ராவின்நெடுங்குருதி’, ஜெயமோகனின்விஷ்ணுபுரம்’, பா. வெங்கடேசனின்பாகீரதியின் மதியம்’, சாருவின்எக்ஸிஸ்டென்ஷியலிசமும் பேன்ஸிபனியனும்ஆகியவை முக்கியமானவை.
    • தமிழ் நாவல்களில் சிறந்தவற்றின் பட்டியல் நெடியது - இங்கு எனக்கு மிக முக்கியம் எனத் தோன்றுபவற்றை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன்.
    • ஒரு வாசகன் இலக்கிய நாவல், வணிக நாவல் என வகை பிரிக்காமல் அனைத்து வகை எழுத்துக்களையும் கவனித்து ரசித்துப் படிப்பது அவசியம் - அது பின்நவீனப் படைப்பாளியாக பரிமளிக்க அவசியம்.
      • வணிக எழுத்தில் பாலகுமாரனின்மெர்க்குரிப் பூக்கள்’, சாண்டில்யனின்மன்னன் மகள்’, கல்கியின்பொன்னியின் செல்வன்’, சுஜாதாவின்என் இனிய இயந்திரா’, ‘கனவுத்தொழிற்சாலை’ (சுஜாதாவின்ஜன்னல் மலர்கிட்டத்தட்ட ஒரு நவீன நாவலின் வடிவ ஒழுங்கைக் கொண்டதுமுக்கியம்.


Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...