நேற்று திரள் அமைப்பு நடத்திய உரையாடலில் “இலக்கியத்தில் அரசியல்” எனும் தலைப்பில் எனது பேச்சு நல்ல கவனத்தையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இத்தனைக்கும் நிறைய பேர் கவனிக்க மாட்டார்கள் என நான் கருதும் அளவுக்கு ஒரு இலக்கிய கோட்பாட்டு விவாதமாகவே அது இருந்தது. ஆனால் நம்மவர்களுக்கு புதிய விசயங்களை அறிய ஆர்வம் எப்போதும் குன்றுவதில்லை எனும் என் நம்பிக்கை வலுப்பெற்றிருக்கிறது.
“நன்றி அபிலாஷ். ஒரு சிறப்பான உரையினை வழங்கியிருந்தீர்கள். அமைப்பில் உள்ள தோழர்களும் உங்கள் பேச்சினைக் குறித்து பாராட்டு தெரிவித்தார்கள். இன்றய கலந்துரையாடல் குறித்தும் எல்லோருக்கும் நல்ல திருப்தி. அத்துடன் அமைப்பினர் ஒரு You Tube Channel இனை தொடக்கி பல உரைகளை (நூல் விமர்சனங்கள், அறிமுகங்கள் ) காணொளிகளாக இணைக்கும் எண்ணமும் உண்டு. தொடர்ந்தும் எம்மோடு இணைந்து பயணிப்பீர்கள் என்று நம்புகிறேன். மீண்டும், நன்றி அபிலாஷ்.. தொடர்ந்தும் பேசுவோம்.”
- ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான வாசன்
என் உரையை கேட்க விரும்புவோர் இந்த பேஸ்புக் லிங்கை பயன்படுத்துங்கள்:
https://www.facebook.com/thiraluv/videos/254022438951222
