கடந்த 14 ஆண்டுகளாக மனுஷ்யபுத்திரனை நான் காணச்செல்லும் போதெல்லாம் இலக்கிய வாசிப்பு குறித்தும், கவிதையியல் குறித்தும் செறிவான பேச்சுக்கள் அவருடன் நிகழும். அவற்றை பதிவு செய்ததில்லை. யாருடனும் அதிகம் பகிர்ந்ததில்லை. ஆனால் நேற்று முதன்முதலாக அவரை கவிதையியல் குறித்து பேட்டியாகவே எடுத்து எடிட் செய்து யுடியூபில் வெளியிட்டேன். வம்புதும்பு, அரட்டை ஏதுமில்லாத, கவிதையை எழுதுவது, படிப்பது சம்மந்தமான மூன்றே கேள்விகள், உபகேள்விகள், விரிவான பதில்கள் என வித்தியாசமான ஒரு பேட்டி. கவிதைக்குள் ஆன்மீகம் செயல்படும் விதம் துவங்கி கவிஞனின் தன்னிலை என்பது வரை பேசி இருக்கிறோம்.
பார்த்து விட்டு உங்கள் எதிர்வினைகளை, எண்ணங்களைச் சொல்லுங்கள்.