அன்பு நண்பர்களே, வாசகர்களே (இருவருமே ஒன்று தான் என்றாலும்)
இன்று மாலை 4 மணிக்கு என்னுடைய புதிய நாவல் தொடர் “ஒரு முடிவற்ற துப்பறியும் கதை” BYNGE செயலியில் கால்தடம் பதிக்கிறது. ஒவ்வொரு வாரமும் சில அத்தியாயங்கள் விதம் வெளியாகும். நான் புனைவாக எழுதும் முதல் தொடர் இது. உங்களுடைய மகத்தான ஆதரவைத் தந்து தொடர்ந்து இதை விவாதித்து, பரிந்துரைகளை எனக்குத் தந்து இம்முயற்சியை செறிவாக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
ஒவ்வொரு படைப்பும் வாசகன் கையில் எடுக்கும் போது மட்டுமே நிறைவு பெறுகிறது. இப்படைப்பும் அவ்வாறு முழுமை பெறும் என நம்புகிறேன்.
