ஒரு அறிவிப்பு
நண்பர்களே, சற்று வருத்தத்துடனே இந்த அறிவிப்பை செய்கிறேன். பொழில் மன்றம் சார்பில் வரும் நவம்பர் மாத நடத்தவிருந்த தமிழின் மகத்தான எழுத்தாளுமை எஸ்.ராமகிருஷ்ணனுக்கான ஒருநாள் கருத்தரங்கை மாறுபட்ட விதத்தில் அடுத்த ஆண்டு நடத்த வேண்டும் எனும் காரணத்தால் தள்ளி வைக்கிறோம். அடுத்த ஆண்டு இதை ஒரு இருமொழி கருத்தரங்காக மேலும் பிரம்மாண்டமாக நடத்த திட்டம். அது குறித்த அறிவிப்புகளை விரைவில் செய்கிறோம். இக்கருத்தரங்கில் கலந்து கொள்ளும் பொருட்டு பெங்களூருக்கு வர திட்டமிட்டிருந்தவர்களிடமும், இதில் பேச ஒத்துக் கொண்டிருந்த எழுத்தாள நண்பர்களிடமும், எஸ்.ராமகிருஷ்ணனிடம் தனிப்பட்ட முறையிலும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
ஆர். அபிலாஷ்