எனக்கு மிகவும் பிடித்த திரைப்பாடகர் யார்?
அது அவ்வப்போதைக்கு மாறும். இப்போது நான் மிகவும் ரசிப்பது தியாகராஜ பாகவதரை. "தீனகருணாகரனே", " சிவபெருமான் துணை", "வள்ளலைப் பாடும்" இப்படி பல தேன் சொட்டும் பாடல்கள். எவ்வளவு அழகாகப் பாடுகிறார் என ஒவ்வொரு முறையும் வியக்கிறேன். சொல்லப்போனால் இன்றைய திரையிசைப் பாடகர்கள் யாரையும் பாகவதருடன் ஒப்பிட முடியாது. இன்னொன்று இன்றைய திரைப்பாடகர்கள் நிறைய பேர் பாடகர்கள் அல்ல, தாளத்திற்கு ஏற்ப பேசுபவர்கள்.
இன்னொன்று தோன்றியது: கடனில் வீட்டையும் சொத்துக்களையும் இழந்து கோயில் வாசலில் கண்ணற்றவனாக பாடி செத்தாலும் பாகவதரின் பாடல்கள் இத்தனை ஆண்டுகள் ஆகியும் சாகவில்லையே. இன்றும் ஒருவன் காலையில் அவர் பாடல்களை சொக்கிப் போய் கேட்கிறேனே!
ஆனால் இந்த சாகாவரத்தினால் ஒரு கலைஞனுக்கு என்ன லாபம்?