நீண்ட காலத்துக்குப் பிறகு - 7 ஆண்டுகள் - நீயா நானா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டேன். ஒரு அட்டகாசமான தலைப்பு: மனைவியின் அம்மா குடும்ப காரியங்களில் தேவையில்லாமல் தலையிடுவதால் கணவன் மனைவி இடையே ஏற்படும் குழப்பங்கள், பிரச்சினைகள். நான் பேசியது வெகுவாகப் பிடித்துப் போய் எனக்கு சிறப்புப் பரிசு கொடுத்தார்கள். நீயா நானாவில் மிக அரிதாகத் தான் சிறப்பு விருந்தினருக்கு பரிசளிப்பார்கள். நேற்று அப்படி ஒரு அதிசயம் எனக்கு நடந்தது.
அப்படி என்னதான் பேசினேன் என்றால் நிகழ்ச்சி வரும் போது பாருங்கள்!
