மெஸெஞ்சரில் ஸ்பேம் எனும் பகுப்பு உள்ளதை இன்றுதான் தற்செயலாகக் கண்டேன். உள்ளே போய்ப் பார்த்தால் 9 ஆண்டுகள் பழைய செய்திகள் இருக்கின்றன. முடிந்தவரை பதில் அனுப்பினேன். அதில் அண்மையில் ஒருவர் அனுப்பிய சேதி என்னை வெகுவாக கவர்ந்தது.
அவர் ஒரு கேள்வியை எழுப்பி இருந்தார். "என்னை விட்டுப் போன என் பழைய காதலி இப்போது என்னிடம் திரும்ப வருவதாக சொல்கிறார். நான் என்ன முடிவெடுக்கட்டும்?" இது மிக நல்லதொரு கேள்வி என நினைத்து தாமதமாக இருந்தாலும் பரவாயில்லை என்று சொன்னேன்: "அவரது நோக்கமென்ன என்று அறிந்து முடிவெடுங்கள்." அவர் உடனே எனக்கு நன்றி தெரிவித்துவிட்டு "அண்ணா பதில் கிடைத்துவிட்டது, ஆனால் நான் கேட்ட கேள்வி அழிந்துவிட்டது. அது என்னவெனத் தெரிந்து கொள்ள வேண்டும். ப்ளீஸ் சொல்லுங்கள்." என்றார். எனக்கு அவரை மிகவும் பிடித்துப் போயிற்று.
ஒரு சிரிப்பானைப் போட்டுவிட்டு நகர்ந்து கொண்டேன். அசல் பின்நவீன வாழ்க்கை என்றால் இதுதான்.