கேள்வி: சும்மா ஒரு சந்தேகம் - ராகுல் காந்தி கேரளாவுக்குப் போனால் கோட்டக்கலில் எம்.டியை அவர் வீட்டில் போய் சந்திப்பார். ஆனால் ராகுல் தமிழ்நாட்டுக்கு வந்தால் எதாவது எழுத்தாளரை தேடிப் போய் சந்திப்பாரா?
பதில்: எம்.டியின் சமூக மதிப்பு அங்கு எக்கச்சக்கம். அவரை சந்திப்பது ராகுலின் நன்மதிப்பை மேலும் உயர்த்தும். தமிழகத்தில் எழுத்தாளரை எவனுக்கும் தெரியாது. அதனால் ராகுலும் சந்தித்து பரிசு வாங்க மாட்டார். அப்படியே ராகுலை சந்திக்க வேண்டினாலும் அவர் பாத யாத்திரை போகும்போது பின்னாடியே கத்திக்கொண்டு ஓடி கூட்டதை மீறி அவரை சந்தித்து நூலைக் கொடுக்க வேண்டும்.
