"விக்கிரமாதித்தா, என் நாவலை எடிட் செய்ய நேரம் போதவில்லை. 20% முடித்துவிட்டேன். புத்தக விழா வேறு வருகிறது. அவசரம்! பதிப்பாளர் வேறு கேட்டுக்கொண்டிருக்கிறார். அனுப்பட்டுமா?"
"வேதாளமே, கேள். ஒரு நாவலை முடித்து ஓரிரு ஆண்டுகளாவது திரும்பத் திரும்ப படித்து திருத்தி எழுதிவிட்டு பதிப்பிப்பதும், முடிந்தால் அடுத்த ஆறு மாதங்கள் அதை புரொமோட் செய்ய எடுத்துக்கொள்வதும் நல்லது. நான் என்னுடைய நாவலை இரண்டாண்டுகளாக எடிட் செய்து வருகிறேன். இந்த ஆண்டு கொண்டு வருவேனா எனத் தெரியவில்லை. ஆனால் எழுத்தாளருக்கு பொறுமை முக்கியம். வாசகருக்கு நாம் நியாயம் செய்ய வேண்டும். நமது நாவல் ஒருவேளை நூறு ஆண்டுகள் கழித்தும் படிக்கப்படும் எனில் அது எவ்வளவு முக்கியம்! அதற்கு சற்று பொறுமை காக்கலாம் தானே? நூறாண்டுகளுக்குப் பிறகு ஆவியாக வந்து திருத்த இயலாது தானே?"