பொதுமக்களின் உலகில் இலக்கியம், சாஸ்திரிய இசை, தத்துவம், அறிவுத்துறைகளின் நிழல் கூட விழுவதில்லை. விழுந்தால் தானே பார்வை ஏற்பட்டு கருத்து சொல்ல? பார்வையற்றவர்களின் உலகில் நிர்வாணமாக ஒருவர் குறுக்குமறுக்காக நடந்துகொண்டே 'ஐயோ என் நிர்வாணத்தைப் பார்த்திட்டாங்க... என்ன நினைப்பாங்களோ?' என அசூயைப் படுவதைப் போன்றது இங்கு கலைஞனாக இயங்குவது.
இதன் ஒரே அனுகூலம் நீங்கள் எவ்வளவு வேண்டுமெனினும் அம்மணமாக இருக்கலாம்!