"நாவல் எழுதும் கலை" நூலை நம் காலத்தின் மகத்தான நாவலாசிரியர் ஜெயமோகனுக்கு சமர்ப்பித்திருக்கிறேன்.
ஜெயமோகனின் இலக்கிய, பண்பாட்டு கருத்துக்களுடன் நான் உடன்படுவதில்லை. ஆனால் ஒரு கலைஞனாக அவரது அர்ப்பணிப்பு, உழைப்பு, திறமை நிகரற்றது.இந்நூலில் பல இடங்களில் அவரது நாவல்களை உதாரணமாக குறிப்பிட்டிருக்கிறேன். என் நாவல் வகுப்பிலும் மாணவர்கள் அவ்வப்போது அவரது எழுத்துக் கலைப் பற்றின கருத்துக்களை குறிப்பிட்டு கேள்வி எழுப்புவார்கள். அவர்களுக்கு அளித்த பதில்களையும் இந்நூலில் இணைத்துள்ளேன்.
அதனால் ஆசானே இந்நூலின் சமர்ப்பணத்திற்கு ஏற்றவர்.