Skip to main content

Posts

Showing posts from January, 2024

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

அதுவா முக்கியம்?

பாரிஸ் ரெவ்யூ பேட்டி ஒன்றில் வில்லியம் ஸ்டைரனிடம் அவர் படித்த பல்கலையில் ஒரு மாணவராக பங்கெடுத்த புனைவு எழுதும் கலை வகுப்பைப் பற்றிக் கேட்கிறார்கள். அந்த வகுப்பில் தான் தனக்கு நாவல் எழுதும் ஆர்வம் மேலெடுத்து தீவிரமாக எழுத வந்ததாக குறிப்பிடுகிறார். கூடவே இன்னொரு விசயத்தையும் சொல்கிறார் - அமெரிக்காவில் புனைவுக் கலையை கற்பிக்கும் வகுப்புகள் அதிகம். கூடவே வேறு நுண்கலைகளையும் இலக்கிய நூல் வாசிப்பு, கொஞ்சம் கோட்பாடு என கலந்து ஒரு பட்டயப் படிப்பாகவே நடக்கும். ஆண்டு தோறும் பல்லாயிரம் மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெறுவார்கள். இவர்களில் எத்தனை பேர் எழுத்தாளர்களாகி நிலைப்பெறுவார்கள்? மிகச்சிலர் தாம். மிச்ச பேர்? அவர்கள் அத்திறனைக் கொண்டு வேறு துறைகளில் நுழையலாம். ஆனால் முக்கியமான கேள்வி வேறு: எழுதுவதற்கான திறமை தான் ஒருவருடைய வெற்றியைத் தீர்மானிக்கிறதா அல்லது பயிற்சியும் அறிவுமா? ஸ்டைரன் இயல்பான திறமையே அடிப்படையான காரணி என்கிறார். ஒரு புனைவுக் கலை ஆசிரியரின் உண்மையான பணி உமியை அரிசியில் இருந்து பிரிப்பது, தவறான ஆட்களை ஊக்கப்படுத்தி நேரத்தை வீணடிக்காமல் இருப்பது தான் என்றும் சொல்கிறார். இதைக் கேட்க ...

"நாவல் எழுதக் கற்றுக் கொள்ளுங்கள்" 2024 வகுப்புகள்

"நாவல் எழுதக் கற்றுக் கொள்ளுங்கள்" ஆன்லைன் வகுப்புகள் பிப்ரவரி மாதத்தில் இருந்து ஆரம்பிக்க உள்ளன. வார இறுதியில் மூன்று மணிநேரங்கள் மொத்தமாக 24 மணிநேரங்கள். ஆர்வமுள்ளோர், புதிதாக நாவல் எழுத திட்டமிட்டு ஆனால் எழுதாமல் வைத்திருப்போர் தொடர்பு கொள்ள 9790929153 மற்றும் abilashchandran70@gmail.com

வர மாட்டேன்

இந்த ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வர மாட்டேன். காரணம் பணம் இல்லை. நாய்களைப் பார்த்துக் கொள்ளும் இடத்திற்கான இரு நாள் செலவு, எனக்கும் பல்லவிக்கும் பயணச் செலவு, சென்னையில் தங்கும் விடுதி செலவு எனப் போட்டுப் பார்த்தால் பட்ஜெட் எகிறுகிறது. அப்பணத்தில் 40 புத்தகங்களுக்கு மேல் இணையத்தில் வாங்கலாம். நல்லதாகப் பார்த்து பத்து சட்டைகள் எடுக்கலாம். ரொம்ப நாளாக பத்து கிலோ  டம்பல்ஸ் வாங்க யோசித்துக் கொண்டிருக்கிறேன். அதை வாங்கலாம். அல்லது ஒன்றுமே வாங்காமல் வங்கிக்கடனில் ஒரு சிறுபகுதியைக் கட்டிவிடலாம். அடுத்த ஆண்டுக்கான ஏதாவது ஒரு சேமிப்பில் போடலாம்.  என்ன ஸ்டாலில் அமர்ந்து வாசகர்களை சந்திப்பதை, கையெழுத்திட்டுக் கொடுப்பதை, சக படைப்பாளிகளை, நண்பர்களை அட நீங்களா என சுழல்வட்டபாதையைப் போன்ற அரங்குகளில் சந்தித்து விளையாட்டான மகிழ்ச்சியுடன் கைகுலுக்குவதை, அணைப்பதை மிஸ் பண்ணுவேன். ஸ்டால் அலமாரிகளில் புத்தகங்கள் காப்பகத்து முதியோரைப் போல, மலைவாசஸ்தல மரங்களைப் போல என்னைப் பார்த்திருக்க அவற்றிடம் போய் திறந்து பார்த்து நலம் விசாரிப்பதை மிஸ் பண்ணுவேன். கடற்கரையை, உப்புக்காற்றை, அந்த சாலைகளை, வெய...

மனிதனான தேவன்

பொதுவாக தமிழ் நவீன கவிஞர்களுக்கு என்று ஒரு தனித்த உலகம் இருக்கும் . அந்த உலகுக்கு என்றே குறிப்பான உருவகங்கள் , நிலவெளி , பாத்திரங்கள் , கவிதைசொல்லி , சொல்லாட்சி என இருக்கும் . தேவதேவனுக்கும் இது உண்டு . ஜெயமோகன் இதைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார் - பறவை , மரம் , வீடு , வானம் ஆகிய உருவகங்களை அவர் ஒரு படிநிலையாக , தொடர் உருவகங்களாகக் கண்டு விளக்கியது தமிழ் நவீன கவிதை விமர்சனத்தில் தேவதேவனைப் புரிந்துகொள்ள மிகவும் உதவியது . ஆனால் தேவதேவனுக்கு இந்த உருவகங்கள் எங்கிருந்து வந்தன , அவர் எவருடைய தொடர்ச்சி என ஜெயமோகன் பேசியதில்லை . தேவதேவனின் தனித்துவமான , அதே சமயம் மரபார்ந்த இருத்தலை அறிந்துகொள்ள அதுவும் அவசியம் தான் .  முதலில் தேவதேவனின் தனித்துவம் .  தேவதேவனிடம் சில அ - நவீனத்துவ லட்சணங்கள் உண்டு . அவர் கட்டுறுதியான சுருக்கமான கவிதைகளை அதிகமாக எழுதுவதில்லை . ஒரு பெரிய அகத்தோற்றத்தை கவிதை வழியாக கைப்பிடிக்குள் வரும்படி அவர் எடுத்து தருவதில்லை . அவர் அறைக்குள் இருந்தபடி ஜன்னல் வழியாக வெளியே நோக்கிய தோ...