ஒரு கான்ஸ்டபிள் தேநீர்க் கடைக்குள் அவசரமாக நுழைந்து டீ மாஸ்டரிடம் தோளைத் தொட்டு பிரியமாக சிரிக்க சிரிக்க எதையோ கேட்கிறார். உடல்மொழியில் ஒரு குழைவு. அப்படியே ஒரு கையால் அன்றைய கலக்ஷனை வாங்கி பாக்கெட்டில் போட்டுக்கொண்டு மற்றொரு கையால் துடைத்துக் கொண்டு பைக்கில் ஏறி சிரித்தபடி கிளம்புகிறார். அங்கு அமர்ந்திருக்கும் வாடிக்கையாளர்களைப் பற்றி கவலையில்லை. அவரது மனிதநேயமும் பண்பும் என்னை வெகுவாக ஈர்த்தது. ஊழல் என்றவுடன், ரூபாய் நோட்டுகளைப் பார்த்தவுடன் வருகிற குற்றவுணர்வுடன் ஒரு சகோதரத்துவம், அன்பு, சமத்துவமும் கூடவே வந்துவிடுகிறது. தான் அந்த மிகப்பெரிய அரசு எந்திரத்தின் பகுதியெனினும் தானும் பணத்தின் தேவையுள்ள ஒரு சாதாரண மனிதன் எனும் உணர்வு. ஊழல் அதிகார வர்க்கத்தை சாமானியன் ஆக்குகிறது.
புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share