அபிலாஷ் எழுதிய ‘ரசிகன்’ நாவலின் 3வது பகுதியின் 6ஆம் அத்தியாயத்தை மட்டுமே ஒரு குறும்படமாக எடுக்கலாம்.
கதாநாயகனான சாதிக்கின் முன்னாள் காதலியான பிரவீணாவின் வீட்டில் கதைசொல்லியான சங்கர் சில நாட்கள் தங்க நேர்கிறது.
பிரவீணாவும் சங்கரும் மொட்டை மாடியில் மது அருந்துகின்றனர். மாடிச்சுவரின் விளிம்பில் பிரவீணாவின் பாதி பிருஷ்டம் பாதி பிதுங்கி இருந்தது. அவள் மதுக்கோப்பையைத் தன் தொடைகளுக்கு இடையே வைத்து வெல்லத் தேய்க்கத் தொடங்குகிறாள். இதைக் கண்டு சாதிக் அவளைக் கண்டிக்கிறான். தன் செயலியை எண்ணி அவமானத்தில் கூசிப் போய் சங்கரிடம் மன்னிப்பு கேட்கிறாள் பிரவீணா.
“விடு இப்படி ஒரு சம்பவம் நடந்ததையே ரெண்டு பேரும் மறந்திடுவோம்” எனக் கடந்துபோகிறான் சங்கர்.
“என்னை நினைச்சா எனக்கே கேவலமா இருக்கு. என்னை யாருக்கும் பிடிக்காது. எனக்கு ஃப்ரெண்ட்ஸ் இல்லை. சாதிக்கும் என்னைவிட்டுப் போய்ட்டான்” என அவனிடம் புலம்பினாள்.
“எனக்கு உங்களை ரொம்பப் பிடிக்கும்” எனச் சொல்லி பிரவீணாவை ஆறுதல் படுத்துகிறான். பிறகு அந்தப் பேச்சிலிருந்து திசைதிருப்புவதற்காக அவளின் குடும்பம் பற்றிக் கேட்கிறான்.
அதற்குப் பிரவீணா, “சின்ன வயசுல என்னை சித்தப்பாதான் எடுத்து வளர்த்தாரு. அஞ்சு வயசு வரை ஒரு அனாதை ஆஸ்ரமத்தில் இருந்தேன். அவரு என் சித்தப்பாவான்னே தெரியல. அப்படித்தான் கூப்பிடச் சொன்னாங்க. வீட்டில மழை அதிகமா கொட்டுறப்போதான் நான் அதிகம் அடி வாங்குவேன். நான் ஏதாவது தப்பு பண்ணினா என்னைக் கூப்பிட்டு வெச்சு என் அம்மா ஒரு தேவடியான்னு திரும்பத் திரும்பச் சொல்லுவாரு. என்னைக் குட்டித் தேவடியான்னு கூப்பிடுவாரு. என்னைக் கிள்ளி அழ வைப்பாரு. நான் அழுறதைப் பார்க்க அவருக்குப் பிடிக்கும். என்னை இழுத்து சூடு வைப்பாரு. மழைல நிறைய நாள் முட்டி போட்டு நின்னிருக்கேன். அப்புறம் மெல்ல மெல்ல அதை நான் உள்ளுக்குள்ளே ரசிக்க ஆரம்பிச்சேன். அவரு திட்டணுமுன்னே ஏதாவது பண்ணுவேன். வயசுக்கு வந்த பிறகு ஒருநாள் என்னை என் அறைக்குள்ள தள்ளி பலாத்காரம் பண்ணினார். பிறகு எப்போலாம் என்னை நோக்கி கத்துறாரோ அப்போலாம் நான் உள்ளுக்குள்ள் ஈரமாயிடுவேன். என் கைகள் நடுங்கும். உடம்பு சூடாகும். நான் அறைக்குப் போய் தனியா அவருக்காகக் காத்திருப்பேன். நான் அனுமதிச்சாலும்கூட அவர் நான் அழணுமுன்னு விரும்புவார். அதுக்காக என்னை அடிப்பார். என் அம்மாவைப் பத்தி மோசமா பேசுவார். நான் அழுவேன். அழ அழ இன்னும் அதிகமா எக்ஸைட் ஆவேன். என் உடம்பு அவருக்காக ஏங்கும். ஒருநாள் அவர் என்னை பலாத்காரம் பண்றதை சித்தி பார்த்துட்டு, எதுவும் பேசாம என்னை ஹோம்ல கொண்டுபோய் சேர்த்துட்டாங்க” என்றாள்.
அவளின் இந்தத் துயரத்திலிருந்து திசைதிருப்புவதற்காக, “சாதிக்கை எப்படி மீட் பண்ணுனீங்க?” எனக் கேட்கிறான் சங்கர். சாதிக்குடனான காதலைப் பற்றிச் சொல்லி முடித்ததும் சங்கரிடம், “உனக்கு நெஜமாவே என்னைப் பிடிக்குமா? நான் நல்ல பொண்ணுன்னு நினைக்கிறீயா?” எனக் கேட்கிறாள்.
“ஆமா”
“அப்போ எனக்கொரு கிஸ் கொடு. வெறுப்பே இல்லாம கோவமே இல்லாம ஒரு கிஸ்” அவள் தன் கன்னத்தை நீட்டினாள்.
அவன் மென்மையாய் அவளை முத்தினான். அவள் மகிழ்ச்சியானாள்.
இந்த அத்தியாயத்தில் அபிலாஷ் எழுதிய இறுதி வரி மிக அபாரமானது. அந்த வரியைப் படித்ததும் அடுத்த சில மணி நேரத்திற்கு நாவலை மேற்கொண்டு படிக்க இயலாமல் மூடிவைத்தேன். உடனடியாக தோழி ஒருத்தியை அழைத்து மொத்த அத்தியாயத்தையும் படித்துக் காட்டினேன். அந்த இறுதி வரி: