”இந்த செக்ஸ் சொறி மாதிரி. சொறிய சொறிய சொகமா இருக்கும். ஆனா புண்ணான பெறவு வலிக்கும், ரத்தம் வரும். லவ் பன்ணும்போது செக்ஸுக்கு கொஞ்சமாவது நியாயம் இருக்கும். ஒரு கட்டுப்பாடு வரும். ஆனா கண்ட பொண்ணுங்க பின்னாடி போய் உரசுறது ஒரு வியாதி. ஒரு புண்”
*
“புண்ணுக்கு ஏன் மருந்து போடணும்? சொறிஞ்சு சொறிஞ்சு சுகம் காணலாமே? ஏன்னா சொறிஞ்சா சொகமாத்தான் இருக்கும், ஆனா கடைசியில வலிக்குமில்லா, அதுக்குத்தான், நிரந்தரமா ஒரு திருப்தியோட நிம்மதியோட இருக்கணுனா செக்ஸை பிழிந்து வெளியே போடணும்”
*
“செக்ஸை கடந்து போறது ஈஸி”
“அதெப்படி ஈஸி?”
“நிறைய பேரு பண்ணிக் காட்டி இருக்காங்க. காந்தி ஒரு எக்ஸாம்பிள். அவரு தொடர்ந்து கையடிக்காமலே பொண்ணுங்ககிட்ட போகாமலே இருந்திருக்காரு.”
“அதெப்படி? உடம்பே வெடிக்கிற மாதிரி இருக்குமே”
“இருக்கும். ஆனா அந்த எனர்ஜிதான் பெரிய எனர்ஜி. செக்ஸில் நாம வீணடிக்காத எனர்ஜியை சரியான வேற விசயங்களில பயன்படுத்தலாம். இல்லாட்டி சும்மாவே இருக்கலாம். மனசு சுத்தமா இருக்கும்.”
“அதெப்படி இருக்கும்?”
“செக்ஸ் அழுத்தம் இல்லாடி நீ எதையும் சாதிக்க வேண்டியதில்ல. உன் தோற்றம், அந்தஸ்து பத்தி கவலை இல்ல. உன் இஷ்டத்துக்கு வாழலாம். யோசிச்சுப் பாரேன், எந்தப் பொண்ணு பத்தியும் யோசிக்காம வாழ்ந்தா எவ்வளவு ஃப்ரீயா இருக்கும்.”
*
“நாம பார்க்கிற சினிமா, கேட்கிற கதை, பார்க்கிற ஓவியங்கள், அப்புறம் பொண்ணுங்க தங்களை அலங்கரிச்சுக் காட்டிக்கிற விதம் இதுதான் செக்ஸி, அழகுன்னு நமக்கு ஒரு அபிப்ராயத்தை உண்டாக்குது. ஆனா அது செயற்கையா உருவான ஒரு பிம்பம். யோசிச்சு பாரேன், தொப்புள்னா என்ன? ஒரு சின்னக் குழி, அதைப் பார்த்தா நமக்கு ஏன் ஆசை வரணும். அம்மாவோட முலையைப் பார்த்தா ஆசை வருமா?
“இல்ல”
“எதைப் பார்த்தா ஆசை வரணும்னு நாமதான் தீர்மானிக்கிறோம். சிலருக்கு பொம்பளைக்க கால் முடிய பார்த்தாலே நட்டுக்கும். அது செக்ஸி, அது ஏதோ பிரமாதமான ஒண்ணுன்னு அவன் மனசுக்குள்ள பதிஞ்சு போச்சு. இதெல்லாம் நாமளே உருவாக்கிறது”
*
“சந்தோஷம்னா என்ன?”
“ஜாலியா பிடிச்சதை பண்ணிட்டு இருக்கிறது”
“இல்ல. ஜாலியா என்னதான் பண்ணினாலும் அது முடியும்போது அதிருப்தியா இருக்கும். அதனால்தான் குடிக்கிறவன் குடிச்சிக்கிட்டே இருக்கான். பொண்ணு பிடிக்கறவன் ஒவ்வொரு பொண்ணா தேடி அலஞ்சிக்கிட்டே இருக்கான். சந்தோஷம்னா ரொம்ப முக்கியமான வேலைகளை மட்டும் பண்றது.”
*
“நாத்திகமும் ஒரு மதம் போலத்தான். என்ன, கடவுளுக்கு பதில் தர்க்கம்”
“பிறகு எதுதான் சரி?”
“கடவுள் இல்லையென்பதை ஏற்றுக்கொள்ள நாத்திவாதிகளுக்கு உள்ளுக்குள் சிரமமாய் இருக்கிறது. அதனால் தர்க்கம் மூலம் இன்னொரு கடவுளை சிருஷ்டிக்கிறார்கள்.”
*
“நம்ம யங் ரைட்டர்ஸ்ட ஒரு பிரச்சனை சார். நல்லா இஅல்லேன்னாலும் ஏத்துக்க மாட்டாங்க. நல்லா இருக்குன்னாலும் நம்ப மாட்டாங்க. ஆனால் நிறைய படிக்கிறவங்க, எழுதித் தேர்ச்சி பெற்றவங்களைவிட எழுத்தனுபவமோ வாசிப்போ இல்லாதவங்ககிட்ட இருந்துதான் சிறந்த படைப்புகள் வர வாய்ப்பதிகம்”
*
“நாம முழு இருட்டில் உட்கார்ந்திட்டு இருக்கும்போது என்ன நினைப்போம்? நம்மள சுத்தி இருட்டு மட்டும்தான் இருக்குதுன்னு. இருட்டுதான் ஒரே நிஜம்னு தோனும். ஆனா அது உண்மையா? ஸ்விட்ச்சை போட்டா உடனே வெளிச்சம் வந்திடும். அதுவரை தெரியாத பொருட்கள் கண்ணுக்குத் தெரியும். அதுவரை நாம நினைச்சிக்கிட்டிருந்தது உண்மையான உலகம் இல்லைன்னு புரியும். அதுவரைக்கும் பொய்யையே உண்மைன்னு நினைச்சுக்கிட்டு இருந்தோமுன்னு புரியும்.”