நிதீஷ்குமார் ரெட்டியின் மட்டையாட்டம் அம்பத்தி ராயுடுவின் ஆட்டத்தை நினைவுபடுத்துகிறது. அதே பாணியில் உயரத்தூக்கிப் பிடித்த மட்டையை மணிக்கட்டின் சுழற்சியால் மேலிருந்து கீழே கொண்டு வந்து கால்பக்கமாக பந்தை விரட்டுகிறார். குச்சிகளுக்கு குறுக்காக பந்தை விளாசும்போது நளினமான விறகுவெட்டுவதைப் போலிருக்கிறது. குச்சிகளை விட்டு பந்தை ஆவேசமாக கவருக்கு மேல் விரட்டும்போது மணிக்கட்டில் இருந்து வரும் ஆற்றல். யாயுடுவை விட அரைக்குழிப் பந்தை நன்றாக அடிக்கிறார். ஹூக்கும் நன்றாக அடித்தால் இன்னும் சிறந்த மட்டையாளர் ஆகிடுவார். ஆந்திராக்காரர்களும் ஹைதராபாதிகளும் அடிப்படையில் ஸ்டைலிஸ்டுகள்!
புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share