நிழல் பொம்மை நாவலின் நாயகனான ரகுவின் உடலை எழுத எனது நண்பர் ஒருவரே ஆரம்பத் தூண்டுதல். அவருடன் பழகும்போது நான் - என் வழக்கப்படி - என்னையறியாமலே உற்றுகவனித்து வந்தேன். அதேநேரம் ரகுவின் பாத்திரத்தை எழுதும்போது அவரது வாழ்க்கையில், ஆளுமையிலிருந்து எதையும் இதில் பயன்படுத்தக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். நாவலை முடித்தபின்னர் அவரிடம் இதைத் தெரிவித்து “இவர் நீங்களல்லர்” என்றும் தெரிவித்தேன். அவர் எதிர்காலத்தில் இதன் மொழியாக்கத்தைப் படித்தோ இதைப்பற்றிக் கேள்விப்பட்டோ என்னைத் தவறாக கருதக்கூடாது என்பதே என் கவலையாக இருந்தது. ஏனென்றால் யாரையும் பார்த்து பதிவு செய்வது படைப்பாக்கம் அல்ல. என்னையும் தான். ஒரு மாற்றுத்திறனாளியின் உடலை உருவகமாக பயன்படுத்துவது தவிர்க்க முடியாத விபத்தாக இலக்கியத்தில் நிகழ்ந்து முடிந்துவிடுகிறது. அதில் எனக்கு உடன்பாடில்லை என்பதால் என்னுடைய முதல் நாவலான “கால்களில்” நான் அதைக் கவனமாகத் தவிர்த்தேன். இந்நாவலில் அவ்வாறு தொனிக்காமல் இருக்கும் நோக்கத்திலேயே தன்னிலையில் எழுதினேன். ரகுவின் பார்வையிலிருந்து வாசகர்கள் உலகை நோக்கவேண்டும், தமக்குள் அவனைப் போன்ற ஒருவரும் உள்ளதை உணரவேண்டும் என்பதே என் கனவாக இருந்தது.