மும்மொழியோ நால்மொழியோ எதிர்காலத்தில் மொழி அறிவுக்கான தேவை வெகுவாகக் குறைந்துவிடும், இப்போதே பன்மொழி அறிவு படைத்தவர்களுக்கு AIயால் வேலை இல்லாமல் போகிறது என்று அயல்மொழி கற்பிக்கும் நிபுணரான நண்பரொருவர் என்னிடம் சொன்னார். பள்ளிகளிலும் ஒரு சில ஆண்டுகளுக்கு மேல் எந்த மொழியையும் கற்பிக்க மாட்டார்கள் என நினைக்கிறேன். இன்று நீங்கள் இணையம், ஊடகம் வழியாக பல மொழிகளை விரைவில் கற்றுக்கொள்ளலாம். அதாவது அடிப்படையான பேச்சு மொழியை. எழுதுவதற்கு, மொழிபெயர்க்க சாட்ஜிபிடி இருக்கிறது.
இந்தி வேண்டுமா, தமிழ், ஆங்கிலமா எனும் விவாதமே அர்த்தமற்றது.