தான் பிரின்ஸ்டனில் படைப்பிலக்கியம் சொல்லித் தந்தபோது மாணவர்களிடம் சொல்லியதாக முக்கியமான அறிவுரையை சிமமண்டா அடிச்சி குறிப்பிடுவார்: எழுத்தை அற்புதமாக மாற்றுவது அறிவோ தொழில்நுட்மோ அல்ல, உணர்வுவயப்பட்ட உண்மை.
அது என்ன உணர்வுவயப்பட்ட உண்மை? நம் பண்பாட்டில் அது சத்தியம், அறம் என்று அழைக்கிறார்கள். பாரதி அக்னிச் சுடர் என்றார். அந்த உண்மையை ஒருவர் புத்தகங்களில் இருந்தோ அனுபவத்தில் இருந்தோ ஒருவேளை கற்றுக்கொள்ள முடியாது போகும். ஏனென்றால் அது நம் மொழிக்குள், நம் உணர்வுக் குழப்பங்களுக்குள் புதைந்திருக்கும். அதை வெளிக்கொணர ஒரு படைப்பிலியக்கிய ஆசிரியர் தேவை. நீங்கள் எழுத முயலும் படைப்பாளியாக இருக்கும்பட்சத்தில் என் "நாவல் எழுதக் கற்றுக் கொள்ளுங்கள்" வகுப்பில் இணையுங்கள்.
விருப்பமுள்ளோர் ஜூலை-ஆகஸ்ட் மாதங்கள் நடக்கிற ஆன்லைன் வகுப்பில் சேருங்கள். கூடுதல் விபரங்களுக்கு 9790929153 எண்ணிலோ மெஸெஞ்சரிலோ தொடர்புகொள்ளுங்கள். abilashchandran70@gmail.comக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.
