நாங்கள் டீக்கடையில் இருந்தோம். விஜய்க்கும் போதை மருந்து குழுவுக்குமான தொடர்பு, அவரது வீட்டில் நடக்கும் விருந்துகள் குறித்த செய்திகளை ஆளுங்கட்சி சார்பு யுடியூபர்களும் பத்திரிகையாளர்கள் ஏன் கசிய விடுகிறார்கள் என நண்பர் ஒருவர் கேட்டார். அப்போது எங்கள் உரையாடலைக் கேட்ட டீ மாஸ்டர் சொன்னார், "அவரைப் பார்த்து ஆளும் அரசு பயப்படுகிறது". அவர் ஒரு விஜய் அண்ணா விசிறி. ஆனால் எனக்கு இது விஜய் மீதான அரசியல் வன்மத்தில் நடக்கிறது என நினைக்கவில்லை. மாறாக, திமுக அரசு விஜய் மீது கைவைக்காது என்றே நினைக்கிறேன். வரும் தேர்தலில் அவருக்கு பாஜக கொடுத்துள்ள அசைன்மெண்ட் திமுக அரசை ஊழல் அரசு எனக் கடுமையாக விமர்சிப்பது. அதை சற்று விஜய் இனி மட்டுப்படுத்துவார். ஒரு பக்கம் பாஜகவின் அமலாக்கத்துறை, இன்னொரு பக்கம் இவர்களின் போதை ஒழிப்பு நடவடிக்கை. அமலாக்கத்துறை நடவடிக்கையை விட இது விஜய்யின் பிம்பத்தை மோசமாகப் பாதிக்கும். ஆகையால் இந்தப் பிரச்சினையை இவர்களுடன் இத்துடன் விட்டுவிடுவார்கள், அவரும் தம் கூரம்புகளை மலரம்புகளாக மாற்றிக்கொள்ளும்படி தனக்கு பிரச்சார உரை எழுதும் உதவியாளர்களிடம் சொல்வார்.
திமுக அரசு எதிரணியின் துணைப்படையினருக்கு (ஒ.பி.எஸ்-பூவை மூர்த்தியார் ஆட்கடத்தல் வழக்கு, அதிமுக இணையப் பிரிவினர் போதை மருந்து, விஜய் போதை மருந்து சர்ச்சை) ஒவ்வொருவராக குற்ற விசாரணை மூலமாக செக் வைக்கிறார்கள். தேர்தல் வரும்போது அதிமுக-பாஜக கூட்டணியை பலவீனமாக்குவதே அவர்களின் நோக்கம் என நினைக்கிறேன். என்ன பிரச்சினை என்றால் அது அப்பட்டமாக எல்லாருமே புலப்படுகிறது