என் வகுப்பில் பாத்திர அமைப்புக்கும் பாத்திர இயல்புக்குமான வித்தியாசம் என்னவென்று விளக்கிக் கொண்டிருந்தேன். ஒருவர் வேலையில்லாத இளைஞர், இன்ன வயதுக்காரர், இன்ன வர்க்கம், சாதி, மதத்தை சேர்ந்தவர், இன்னவிதமான குடும்பப் பின்னணியைக் கொண்டவர், இப்படியான தோற்றம் கொண்டவர் எல்லாம் அவரது பாத்திர அமைப்புக்கு பொருந்தும். இதை ஒரு பாத்திரத்தின் வெளிக்கூடு என்று சொல்லலாம். இவற்றை பரிசீலித்தாலே கதை சட்டென நம் கதையில் வந்து விழுந்துவிடும். என்னிடம் வகுப்பில் ஏதாவது ஒரு தேசலான ஒற்றை வரியை தம் நாவலுக்காக கொண்டு வருவோரிடம் மேற்சொன்ன கேள்விகளை நான் கேட்டதும் ரத்தமும் சதையுமான ஒரு பாத்திரம் கண்முன் தோன்றுவதைப் பார்த்திருக்கிறேன்.
புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share
