ஒரு புனைவில் வரும் பாத்திரம் தத்ரூபமாக மாற எழுத்தாளர் அதன் பின்னணியை மட்டும் மாற்றினால் போதாது, விருப்பத்தையும் சற்றே மாற்ற வேண்டும். தேவை அப்படியே இருக்கலாம். வேலை தேடிச் செல்பவரின் தன்னறிதலே தேவை, ஆனால் விருப்பம் என்பது வேலையில் முன்னேற்றம், நிறைய பணம் சம்பாதிப்பது, நீதியைப் பெறுவது, உயிரைக் காப்பாற்றுவது, காதலை அடைவது, சூழ்ச்சியில் இருந்து தன்னையோ பிறரையோ பாதுகாப்பது, இயற்கை சீற்றத்தில் இருந்து தப்பிப்பது என எண்ணற்ற வகைகளில் இருக்கலாம். அது ஒரு கொலை செய்வது, நல்ல சாப்பாடு சாப்பிடுவது, உடலுறவுக்காக ஒரு இடம் தேடுவது என மிக சாதாரணமாக கூட இருக்கலாம். இந்த பட்டியல் மிக நீண்டது. ஒவ்வொரு நோக்கத்தினுள்ளும் பல மாறுபாடுகள் இருக்க முடியும். நோக்கத்துடன் பொருந்தக் கூடிய வாழ்க்கைப்பின்னணி, வர்க்கம், சாதி, மதம், வயது ஆகியவற்றை திட்டமிட்டு அமைக்க வேண்டும். அப்போதே முப்பரிமாணத் தன்மை கதைக்கு கிடைக்கும்.
புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share
