முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மொண்டெய்ன் - ஒழுங்கின் கொடுங்கோன்மை


 

மொண்டெய்ன் தனது On Experience எனும் கட்டுரையில் வழக்கறிஞர்கள் பிரச்சினைகளை உருவாக்கி அவற்றுக்கு மத்தியஸ்தம் பண்ணிவைத்து சம்பாதிப்பவர்கள், அதனாலே காலனிகளைத் தேடிச் செல்லும் குழுவினரிடம் மன்னர் பெர்டினெண்ட் வழக்கறிஞர்களை மட்டும் அழைத்துச் செல்லக்கூடாது எனச் சொன்னதாகக் குறிப்பிடுகிறார். அது இந்த காலத்துக்கு வெகுப்பொருத்தமாக உள்ளது. இன்று ஒரே வித்தியாசம் வழக்கறிஞர்கள், நீதிமன்றத்துக்கு இணையாக தேர்தல் ஆணையமும் தவறு செய்யாத மக்களை பிரஜைகள் அல்லரென்றும், ஆவணங்கள் இல்லாதவர்கள் என்றும் தம் இஷ்டத்துக்கு பாவித்து அவர்களை "நீங்களே உங்களை அப்பழுக்கற்றவர்கள் என ஆவணங்களைத் தாக்கல் செய்து நிரூபியுங்கள்" என்கிறது. அரசு கண்ணை மூடித்திறக்கும் முன் ஒரு சட்டத்திருத்தம் பண்ணி பெருங்குழப்பத்தில் மக்களை ஆழ்த்துகிறது; மக்கள் இடையே சச்சரசவும் குழப்பமும் தோன்ற அதைத் தீர்ப்பதாகச் சொல்லி தன்னை தலைமையாக நிறுவுகிறது. தானே ஏற்படுத்திய வரிகளைத் தானே குறைத்து தன்னைப் பாராட்டிக் கொள்கிறது. தான் திணித்த எதேச்சதிகாரச் சட்டத்தை தானே மட்டுப்படுத்தியோ தற்காலிகமாக நிறுத்திவைத்தோ அதை மனிதநேயமும் என்றும் பண்பென்றும் சுயமாகப் பாராட்டிக் கொள்கிறது. எண்ணற்ற சிக்கல்களை தனது அனுதினமும் தோற்றுவிக்கப்படும் விதிமுறைகளால் உருவாக்கி மக்களைக் கடும்பதற்றத்தில் வைக்கிறது.


ஒரு அறையில் உட்கார்ந்து சட்டங்களைப் பிறப்பிப்பவர்கள், அவற்றைப் பின்பற்ற விதிமுறைகளை உருவாக்குபவர்கள், அதைவைத்து பணமும் அதிகாரமும் சம்பாதிப்பவர்கள், தரவுகளைக் கொண்டு மக்களைக் கண்காணித்துக் கட்டுப்படுத்துபவர்கள் இன்று பெருகிவிட்டார்கள். அல்லது அவர்களின் அதிகாரம் பெருகிவிட்டது. வாழ்க்கையை மிகவும் சிக்கலானதாக, துன்பமானதாக இவர்கள் மாற்றுகிறார்கள். அதேநேரம் தம் உடலுழைப்பால் மாற்றங்களைக் கொண்டு வருவோர், பிறருக்கு உதவுவோர், படைப்பூக்கத்துடன் செயல்படுவோர் மக்களுக்கு நன்மை பயப்பவர்களாக உள்ளர். படித்தவர்களையும் ஒழுக்கமானவர்களையும் விட படிக்காதவர்களும் ஒழுங்கற்றவர்களும் நல்லவர்களாகவும் நியாயமானவர்களாகவும் தெரிகிறார்கள். அந்தளவுக்கு கல்வியும் அறிவும் கண்காணிப்பும் அதிகாரமும் கைகோர்த்து அதிகாரத்துவத்துவத்தின், நிர்வாகக் கட்டுப்பாடுகளின் பெயரில் மக்களைத் துன்புறுத்தும் காலத்தில் வாழ்கிறோம். மோடியின் ஆட்சியில் நாடே ஒரு பெரும் நீதிமன்றமாகவும் அதிகார மையங்கள் வக்கீல் அலுலவகங்களாகவும் மாறிவிட்டது.

"King Ferdinand, sending colonies to the Indies, wisely provided that they should not carry along with them any students of the long-robe, for fear lest suits should get footing in that new world, as being a science in its own nature, the mother of altercation and division."

எதையும் அப்பழுக்கற்றதாக, ஒழுங்கானதாக, பிசிறற்றதாக, குற்றமற்றதாக மாற்ற நினைக்கும்போதே பெருங்குழப்பமும் பிரச்சினைகளும் குற்றங்களும் நாட்டில் பெருகுவதாக மாண்டெய்ன் சொல்வது குறிப்பிடத்தக்கது. மேலும் இயல்பான படைப்பூக்கமான வாழ்க்கையென்பது சரியான வரையறைக்குள் வராததே. அதுவே தன்னளவில் அழகானதாகவும் நியாயமாகவும் உள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...