இலக்கிய உலகில் சிலர் நம்மைப் பாராட்டும்போது நாம் வருந்த வேண்டும் - நாம் ரொம்ப நைசாகிவிட்டோம். நம்மால் அவர்களுக்கோ பிறருக்கோ 'தொந்தர்வில்லை', அனுசரித்துப் போகிறோம் எனும்போதே பாராட்டுவார்கள். அது நம் அழிவின் துவக்கம்.
நமது எழுத்து எதோ ஒரு விதத்தில் வெகுஜனப் பண்பாட்டின் மையத்துக்குப் போய்விட்ட கருத்தியலுடன் இணங்கினால், அது என்னதான் எதிர்ப்பண்பாடாகக் கருதப்பட்டாலும், நாம் உடனடியாக ஏற்கப்படுவோம். அதுவும் நம் அழிவின் துவக்கம்தான்.