//குறிப்பிட்ட இந்திய மொழிகளில் வெளியாகும் தலைசிறந்த இலக்கிய படைப்புகளுக்கு, தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் தேசிய அளவிலான விருதுகள் வழங்கப்படும்.முதற்கட்டமாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, வங்காளம், மராட்டிய மொழிகளில் வெளியாகும் தலைசிறந்த படைப்புகளுக்கு, ஆண்டுதோறும், 'செம்மொழி இலக்கிய விருது' என்ற பெயரில் அந்த விருது வழங்கப்படும்.விருதுடன், தலா 5 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும். படைப்புகளின் இலக்கிய தரத்தையும், வெளிப்படையான தேர்வு முறையையும் உறுதிசெய்யும் விதமாக, புகழ்பெற்ற எழுத்தாளர்கள், விருதாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும். - முதல்வர் ஸ்டாலின்//
நல்ல முன்னெடுப்பு. ஆனால் செம்மொழி அடையாளம் இதன் தேசிய, உலகளாவிய விரிவை அனுமதிக்காமல் குறுக்கி விடுகிறது. இந்திய அளவிலான இலக்கிய விருதென்றோ சர்வதேச விருதென்றோ முன்வைத்திருக்கலாம். இன்னும் பெரிய அளவில் தாக்கம் இருக்கும். சொல்லப்போனால் தேசிய விருதுடன் நின்று விடாமல் நாம் சர்வதேச விருதுகளை உருவாக்க வேண்டும். செம்மொழி போன்ற அரசியல் கட்டமைப்புகளை மீற வேண்டும். ஏனென்றால் எந்த சர்வதேச விருதுக்கும் இத்தன்மை இராது. நோபல், புக்கர் எனப் பார்த்தால் புரியும்.
ஆனால் ஸ்டாலின் அவர்களின் அரசு இந்த விருது நிகழ்வை பிரம்மாண்டமாக நடத்தும் என்பதில் ஐயமில்லை.