“பாஷா” ரஜினியும், “எஜமான்” ரஜினியும் ஒரே ரஜினி தான் - அவர்கள் இடையே நிறைய நுட்பமான வேறுபாடுகள் இருக்கும், ஆனால் பார்வையாளர்களில் எல்லாரையும் திருப்திப்படுத்தும் மாறுபட்ட குணநலன்களும் இருக்கும். இந்த முரண் இயல்புகள் உறுத்தாமல் இருக்க, ரஜினி அப்பாத்திரத்துக்கு என நடையின் வேகத்தில், பார்வையில், சைகைகளின் வீச்சு மற்றும் வேகத்தில் நுட்பமான வேறுபாடுகளைக் கொண்டு வருவார். அதற்கு மேல் முயன்று ஒரு பாத்திரமாகவே ஆக முயல மாட்டார்; ரஜினி தன் ‘நடிப்பை’ நடிப்பாக அல்ல ஒவ்வொரு சந்தர்பத்துக்கும் வினையாற்றுகிற ஒன்றாகப் பார்க்கிறார். இதற்கும் மேலாக அவரது ஸ்டைல், சின்னச் சின்ன சேட்டைகள், நட்சத்திர பிம்பம் கட்டியமைக்கப்படுவதால் அவரது சன்னமான நடிப்பு வெளிப்பாடுகளை நாம் கவனிக்காமல் விட்டுவிடுகிறோம்.
கிண்டிலில் "ரஜினிகாந்த்" நூலை வாங்க https://www.amazon.in/dp/B0GDGQ2YQH?fbclid=IwY2xjawPn21dleHRuA2FlbQIxMQBicmlkETFnNkdnMTE1bmVDaHJUbUtTc3J0YwZhcHBfaWQQMjIyMDM5MTc4ODIwMDg5MgABHsjGj6zfIg4207UJ3iEOj9DtejPeqRNUjptrKoyquP9RJ18C0qnMkqOeNzss_aem_zjwowo0tzM_mYQ8Jh7zI5g