இந்நூலைப் பொதுவான வாசிப்பு, இலக்கியம் சார்ந்த வாசிப்பு, தத்துவம் சார்ந்த வாசிப்பு, உளவியல் சார்ந்த வாசிப்பு, புத்தகத் தேர்வு என ஐந்து பகுதிகளாகப் பிரித்திருக்கிறேன். பொதுவான வாசிப்பு பகுதியில் வாசிப்பு குறித்து பரவலாய் எழுப்பட்டும் கேள்விகளுக்கு என் தரப்பு பதில்களைத் தந்துள்ளேன், பல சிக்கல்கள் குறித்த என் பார்வையை பதிவு செய்திருக்கிறேன், ஏன் மக்கள் கழிப்பறையில் உட்கார்ந்து படிக்க விரும்புகிறார்கள் போன்ற வினோதமான உளவியல் கோணங்களையும் அலசியிருக்கிறேன். இலக்கிய வாசிப்பு பகுதியில் இலக்கிய வாசிப்பு இன்று எப்படி உருமாறி உள்ளது, இன்று ஒரு இலக்கிய வாசகனுக்கு எழும் சிக்கல்களை எப்படி தெளிவுபடுத்திக் கொள்வது எனப் பேசியிருக்கிறேன். தத்துவ, உளவியல் பகுதிகளில் இந்த இரு துறை சார்ந்த நூல்களை எப்படி வாசிப்பது என்பதைப் பற்றி பேசியிருக்கிறேன்.
https://www.amazon.in/dp/B0GF7G4JHX
