Skip to main content

Posts

Showing posts from July, 2009

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

ஜெயமோகனின் கருடபுராணத் தண்டனை: : ஃபூக்கோவும் அமர்நாத்தின் ஒழுக்கவியலும்

அமர்நாத் என்பவர் ஜெயமோகனின் அரசியலை தாக்கி எழுதின கடிதம் (அல்லது வாசகரை எதிர் நோக்கி எழுதப்பட்ட கட்டுரை) சாருஆன்லைனில் பிரசுரமாகியுள்ளது. சுருக்கமாக, இக்கடிதம் ஜெவின் திரைமறை சதிராட்டங்களை அம்பலப்படுத்த விழைகிறது. இதன் ஒரே சுவாரசியம் இரவு விடுதி துகிலுரிப்பு போல் சிறிது சிறிதாக திரைமறைவு சேதிகளை வெளிப்படுத்துவது தான். படித்து முடித்ததும் அட தெரிந்ததுதானே என்று உங்களுக்குத் தோன்றும். இதற்கான பதிலில் சாரு "நான் கடவுள்" ஆர்யா பாணியில் வெற்றிலை மென்றவாறே முத்தாய்ப்பாக இதையெல்லாம் புட்டு வைக்கத்தான் நான் இருக்கிறேனே, 15 வருடங்களாக மல்லுக்கட்டுகிறேனே, நீயெல்லாம் ஏன் காலத்தை வீணடிக்கிறாய், வா உலக இலக்கியம் பேசுவோம்; கஸான்சாகிஸ், அப்துல் ரகுமான் முனீப்பின் படைப்புகள் பற்றி தரமான உரையாடல் நடத்தலாமே என்று அமர்நாத்தை அறிவுறுத்தி முடிக்கிறார். எனது இந்த பதிவின் நோக்கம் வாசகரை அக்கடிதம் நோக்கித் திருப்புவதோ மேலும் செருப்படி வார்த்தை விளையாட்டை நீட்டிப்பதோ அல்ல. வலுவான விமர்சன அளவுகோல்களோ, தர்க்கப் பின்னணியோ இன்றி இலக்கிய ஆளுமைகள் பரபரப்புக்காக தாக்கப்படுவதை, இந்த தாக்குதல் பின்னுள்ள ஒழுக...

எழுத்து வெறியும் ஒழுக்கு நிலையும்: ஏராளமாய் எழுதுவதன் பின்னணி என்ன?

எழுத்தாளன் குறைவாக, மெலிதான அளவில் தான் எழுத வேண்டும் என்றொரு தரப்பு தமிழில் உள்ளது. ஆயிரங்களில் எழுதப்படுவது நீர்த்துப் போன எழுத்து என்பது இவர்கள் வாதம். ஒரு எழுத்தாளனின் முதல் நூலைப் படித்தால் போதும். பிறகு அவன் எழுதுவதெல்லாம் அதன் மிகையான பிரதிகள் தான் என்றார் சுஜாதா. அதாவது எழுத்தாளனின் சாராம்சமான தரிசனம் அவனால் பிறகு எழுதும் நூல்களில் பல்லாயிரம் பக்கங்களுக்கு மோர்ப் பந்தலாக்கப்படுகிறது. தமிழில் சில வாசக\விமர்சகர்கள் இது வணிக நிர்பந்தம் என்கிறார்கள். தமிழில் ஊடகங்களுக்கு தீப்பசி. இதற்கு எழுத்தாளன் பலியாகக் கூடாது என்கிறார் யுவன் சந்திரசேகர்.  நான் ( "நான் கடவுள்" புகழ்) விக்கிரமாதித்யனை முதலில் நான் சந்தித்தபோது அவர் தமிழில் நிறைய தலையணைகள் வந்திறங்கி உள்ளதாய் லேசாய் கிறங்கின கண்களுடன் விசனித்தார். அது சு.ராவின் "குழந்தைகள் ... " காலம். விக்கிரமாதித்யனின் வயதையும், அவர் ஒரு பிரயாணி என்பதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். மற்றபடி குண்டு நூல்களும் தரும் சிரமங்கள் என்ன? தொடர்ச்சியை தக்கவைத்து படிப்பதில் அன்றாட வாழ்வில் உள்ள சிரமம். தலையணைகளை கோடை விடுமுறைக...

விசுவாச மருத்துவன்: படைப்பியல் சூட்சுமமும் மேட்டுக்குடி பகட்டும்

18-09-08 அன்று மாலை 7 மணிக்கு ஐயர்லாந்து நாடகாசிரியர் பிரையன் பிரையலின் ஆங்கில நாடகம்  விசுவாச மருத்துவன் சென்னை சிவகாமி பேத்தாச்சி ஆடிட்டோரியத்தில் காலி இருக்கைகளிடையே விரவியிருந்த ஒரே மூச்சில் எண்ணி விடக்கூடிய, என்ன ஏதுவென புரியாத பார்வையாளர்களுக்கு முன் நிகழ்த்தப்பட்டது. விசுவாச மருத்துவன் தீவிர நாடக பாணியைச் சேர்ந்தது. ராஷோமோன் பாணியில் சில பொது நிகழ்வுகளை மூன்று நபர்களின் கோணங்களிலிருந்து விவரிக்கிறது---தனிமொழிகளில். மற்றபடியாய் உங்களை ஆகா என்று சொல்லவைக்க திணிக்கப்படும் தொழில்நுட்ப தந்திரங்கள் ஏதுமில்லை.  இந்த மூன்று நபர்கள் (கதாபாத்திரங்கள்):  (1) பிராங்க் தொடுகை மூலம் எந்நோயையும் குணப்படுத்தும், ஆனால் அடிக்கடி கைநழுவிப்போகும், ஆற்றல் கொண்டவன். கர்ணனுக்கு தேவையான நேரத்தில் தேர் புதைவது போல், இவனுக்கு அவசியமான நேரத்தில் தன் குறைமாத குழந்தையை காப்பாற்ற முடியாமல் போகிறது. மாந்திரிகத்தை சாத்தியப்படுத்தும் தன் மனநிலையின் சூட்மத்தை இவன் உணர்வதே நாடகத்தின் உச்சகட்டம்.  (2) கிரேஸ் பிராங்கின் வைப்பாட்டி. பிராங்கால் 'மூளையற்ற விசுவாசி' எனப்படும் இவளுக்கு, சுயசம்பாத்த...

ஆண்டுரோமிடா: விடுதலை நோக்கிய முடிவற்ற எத்தனிப்பு

"என்னை மூணாம் பேருக்குத் தெரியாமல்  தன்னந்தனியாய் அழைத்துப் போய் வெறி தீர சித்திரவதை செய்து கொன்று விடேன். அந்த அளவிலாவது நான் பயன்படட்டும் மரணமும் உன் கைகளாலே உணரப்படட்டும்." (தனியே, பூமா ஈஸ்வரமூர்த்தி; பூமா ஈஸ்வரமூர்த்தி கவிதைகள்)  மரணம் வழியான படைப்பின் திறப்பு பற்றிய ஆங்கில நாடகமான "ஆண்டுரோமிடாவிற்கு வரவேற்கிறேன்"  2008 ஆகஸ்டு 6-அன்று நிகழ்த்தப்பட்டது. தெ ஹிந்து மெட்றோபிளஸ் நாடக விழாவின் போது ஆகஸ்டு 2 முதல் 12 வரை அரங்கேற்றப்பட்ட 12 நாடகங்களில் ஒன்று இது. கடந்த 50 வருடங்களாய் 200 நாடகங்களுக்கு மேல் அரங்கேற்றியுள்ள தெ மெட்ராஸ் பிளேயர்ஸ் எனும் ஆங்கில நாடகக் குழு தான் தயாரிப்பு. அமெரிக்க நாடகாசிரியரான ரான் வைட்டின் இந்நாடகம் மிகச்சிறப்பான முறையில் ஜெ. ராஜீவ் சவுத்திரியால் இயக்கப்பட்டது. மூன்றாவது வருடமான இம்முறை தெ ஹிந்து மெட்றோபிளஸ் நாடக விழாவில் பார்வையாளர்களின் வருகையும், ஈடுபாடும் குறைவாகவே இருந்தது. இது போன்ற ஆங்கில நாடகங்களுக்கு பிராண்டட் சட்டை, ஜெல் போட்டு வாரிய தலை சகிதமாய் பிரசன்னமாகி நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் கும்பல், எஸ். வி. சேகர், கிரேசி மோக...

ஐ.சி.சி பட்டியலில் உடைந்த மூக்குகள்

ஐ.சி.சியின் சமீபத்திய எக்காலத்துக்குமான 100 வீரர்கள் தரவரிசை ஒரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதாய் சொல்ல நான் ஒன்றும் சன் செய்தி வாசிப்பாளன் அல்ல. ஒரு சில பேர் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். ஆனால் அவர்களில் பெரும்பாலோனோர் மைக் விழுங்கின முன்னாள் வீரர்கள். சற்று முன்னால் "முன்னாள்" பதவியை அடைந்த கும்பிளே கொஞ்சம் விலகி நின்று பார்த்து சொல்கிறார்: "தரவரிசைப் பட்டியல்களை பொருட்படுத்த வேண்டாம். யாரும் என்னிடம் இருந்து 600 விக்கெட்டுகளையோ, சச்சினிடமிருந்து 12000 ஓட்டங்களையோ பறித்து விட முடியாது. தற்போது அலச எந்த இந்தியா ஆட்டங்களும் நடக்க இல்லை, அதனாலே மீடியா இதை அவசர அவசரமாக பயன்படுத்தப் பார்க்கிறது". கும்பிளே மற்றுமொரு நல்ல விசயம் செய்கிறார். டீ.வி மைக்கை தவற விட்டு தனது ஈடுபாடான புகைப்படக் கலையை தொடரப் போகிறார். சலித்துப் போய் வரவர டீ.வி வர்ணனையாளர்கள் தங்களைப் பற்றியே பேசிக் கொள்கிறார்கள். இந்த அரட்டை குறட்டை நடுவே சில சமயம் விக்கெட் சரிந்தால் கூட சில நொடிகள் கழித்தே ஆ...ஊ.. என்கிறார்கள். சரி, பட்டியலில் காரசாரமாய் ஏதேனும் உள்ளதா? சச்சின் 16-வது இடத்தில். அவரு...

அரசியல் சதிராட்டத்தில் இடம் மாறும் காவல் பகடைகள்

சென்னை கிறித்துவக் கல்லூரியில் நான் படித்த காலகட்டத்தில் (2002-04) சில மொழி வாரியான கலவரங்கள் நடந்துள்ளன. என் விடுதியில் மூன்று வருடங்களும் இந்து தமிழ்--கிறித்துவ மலையாளிகளிடையே பூசல் இருந்தது. இரண்டு குழுவினரும் ஒருவரை மற்றவர் தீண்டத்தகாதவர்களாய்க் கருதி வந்தனர். இந்தச் சூழலில் கல்லூரி விழா ஒன்றுக்கு பாடகர் ஸ்ரீனிவாஸ் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். அவர் மலையாளி என்று தெரிந்த தமிழினப் போராளிகள் மேடையிலேயே கல் வீசித் தாக்கினர். அவர் ஓடியே போனார். மற்றொரு முறை மேகாலயா, மணிப்பூர் பசங்களும் ('சிங்கி' என்றழைப்போம்) தமிழினப் போராளிகளும் ஹாக்கி மட்டை, கிரிக்கெட் மட்டை சகிதம் மோதினர். கல்லூரி மேலாண்மை அதிகாரப் பகிர்வில் நாடார் கிறித்துவர்கள், வேளாளர்கள், சிறியன், மார்த்தோமா கிறித்துவர்கள் என்று இழுபறி இருந்தது. ஆனால் சாதிக் கலவரங்கள் நடந்ததில்லை. கிறித்துவம் என்ற ஒரே குடையின் கீழ் பெரும்பாலானோர் வருவதால் இந்தச் சச்சரவுகள் புகை வடிவில் மட்டுமே தொடர்ந்தன. சிறுபான்மையினர் ஆகையால் கிறித்துவர்களுக்கு உட்பூசல்களைத் தவிர்க்கும் அவசியமுள்ளது. ஆனால் பெரும்பான்மை இந்துக்களுக்கு உட்பூசல்கள் ...

அப்பாக்களின் ஆட்டம்

முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் அணித் தலைவரான நசீர் ஹுசேனின் அப்பா தன் குழந்தைகளின் வளர்ச்சியை முன்னிட்டு அறுபதுகளில் இந்தியாவை விட்டவர். இவர் வைர, ரத்தின வியாபார பரம்பரையை சேர்ந்தவரல்ல, வெளிநாட்டு தலைமை கிளைக்கு உள்ளூரிலிருந்து போன கணினி பொறியியலாளருமல்ல. கைவசமிருந்த சில்லறைத் திறமைகளை பயன்படுத்தி அன்னிய நாட்டில் வேரூன்ற இந்த குடும்பத்துக்கு ரொம்ப காலம் பிடித்தது. அதனாலே பொருளாதார ஸ்திரமின்மை காரணமாய் வழக்கமாய் இந்திய மத்திய தர குடும்பங்களில் காணப்படும் இறுக்கங்கள், கட்டுப்பாடுகள், பதற்றம் போன்றவற்றை புலம்பெயர்ந்த நசீர் பால்யத்திலே அனுபவித்தார். இது அவரது ஆளுமையை பெருமளவில் பாதித்தது. இத்தகைய சூழலில் வளரும் குழந்தை இருவிதங்களில் எதிர்வினை செய்யும்: (அ) எதிர்மறையாக ஒரு கலகக்காரனாக மாறலாம்; (ஆ) தனித்துவமான ஆளுமை பெற்றோரின் நிழலில் குறுக்கிட, ஒரு பிரதிபிம்பம் போன்ற வாழ்வை வாழலாம். நசீர் ஹுசேன் தன் தந்தையின் நிழலிலிருந்து மிகத் தாமதமாக வெளிப்பட்டதை 'தீயுடன் விளையாடுதல்' என்ற நூலில் பேசுகிறார். இரண்டு வருடங்களுக்கு முன் ஏழு, எட்டு வயது குழந்தைகளுக்கான கோடைப்பருவ கிரிக்கெட் பயிற்சி ...

போலிசெய்தல்-சாதித்தலைவர்-கவிதை

'வாரணம் ஆயிரம்'. அமெரிக்கா. காதலி மேக்னா இறந்த பின் அவளது அறைக்குத் திரும்புகிறான் சூரியா. விபத்துக்கு முன்னான அதே சாயலோடு மாற்றமின்றி அறை. படுக்கையில் துவண்டு கிடக்கும் அவளது சிவப்புச் சட்டையை எடுத்து முகர்ந்து, முகம் புதைத்துத் தேம்பி அழுகிறான். மேக்னாவைத் தேடி ஊர் ஊராக அலைய வேண்டுமெனத் தோன்றுகிறது. ’ஒருவேளை அவள் திடீரென எதிர்ப்பட்டால்?’ ஒரு பள்ளத்தாக்கின் விளிம்பில் நிற்கும்போது அவனுக்குத் தோன்றுகிறது. இல்லாவிட்டாலும் தேடிக் கொண்டே செல்லலாம். திரையை வெறித்து என் மனைவி. கன்னத்தசைகள் துடிக்கின்றன. புருவங்கள் நெரிகின்றன. கண்ணீர் வழிகிறது. வரிசைகளில் அடுக்கடுக்காய் முகங்கள் மத்தியில் நானும் தலை நீட்டி திரையைத் தொடர்கிறேன். மயிர்க்கூச்செறிகிறது. எழுதும்போது மறுபடியும் கரங்களில் புல்லரிப்பு. கற்பனையில் சூரியாவைத் தள்ளி விட்டு நான். நினைவின் அடுக்குகளிலிருந்து நழுவும் இறந்து போன அப்பாவுக்கு ஓய்வு பெற்ற அன்று வழங்கப்பட்ட, அவர் என்று தோளில் இட்டு குத்திட்டமரும் சிவப்பு சால்வை. ஏன் இப்படி ஒரு கூடுதாவல் என ஒரு நொடி தோன்றுகிறது. சுதாரித்து, அழும் மனைவியை முறைக்கிறேன்.  முன்பு கேரளாவில் ...

சுஜாதா பட் கவிதைகள்

குஜராத்தில் பிறந்து இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் நவீன இந்திய கவிதையின் முகமாகத் திகழ்பவர் சுஜாதா பட். பிரியமும், வன்முறையும், இனத்துவேசமும் இவரது நுட்பமான கவிதைகளில் கூர்மையாகவும் அங்கதத்துடனும் எதிர்கொள்ளப் படும் கருக்கள். இவரது மூன்று சிறந்த கவிதைகளை இங்கு தமிழாக்கியுள்ளேன். ஷிரோத்கர் தையல ்  ஷிரோத்கர் தையலை கண்டுபிடித்தவரின்  மகன் நான் பிறப்பதற்கு ஒரு வருடம் முன்  என் அப்பாவுடன் பணி புரிந்தார்  திசு வளர்ப்பு முறை கற்றவாறே  எதோ பயன்படப் போகிறது என்பது போல்  இந்த சிறு விஷயத்தை நினைத்துக் கொண்டேன்  -- தகுந்த காலம் வரும்வரை  உன்னை என்னுள் பத்திரமாய் வைத்திருக்க --  ஷிரோத்கர் தையலை  என் கருவறை வாய்க்குள் தைக்கப் போகும்  மருத்துவர்களை எதிர்பார்த்து  ஆஸ்பத்திரி கட்டிலில் கிடக்கையில்  என் அம்மாவின் அம்மாவுக்கு   கற்பனை செய்து பாருங்கள்  காந்தியடிகளுக்கு அது இருந்திருந்தால் -- ஒருவேளை அந்த தவறான் குரோமோசோம் --  சர்க்கரையை ஊன்ம ஆக்கச்சிதைவு மாறுபாடு செய்ய இயலாமை --  இத்தனை உண்ணாவிரதங்களையும்  ஒருக்காலும் தாங்கியிருக்க மாட்டார் --  உன்னைப் போல்  மௌனமாய் கோமாவுக்குள் சென்றிருப்பா...

இயான் ஹாமில்டன் கவிதைகள்

2001-ஆம் ஆண்டு புற்று நோயால் காலமான ஆங்கிலக்கவிஞர் இயன் ஹாமில்டனுக்கு பத்திரிகை ஆசிரியர், விமர்சகர், கவிஞர், பதிப்பாளர், வாழ்க்கை வரலாற்றாளர் என்று பல்வேறு பரிமாணங்கள் உண்டு. Times Literary Supplement-இன் கவிதை மற்றும் புனைவிலக்கிய ஆசிரியராக குறிப்பிடத்தக்க பணி ஆற்றினார். இவர் நடத்திய New Review எனும் இதழ் ஆங்கிலக் கவிதை உலகில் பெரும் அலைகளை தோற்றுவித்தது. ஹாமில்டனின் 4 முக்கிய கவிதைகளை இங்கு தமிழாக்கம் செய்துள்ளேன்.  வீடு   பருவ நிலை மாறுவதாயில்லை.  எங்கள் தலைகளுக்கு மேல்  ஒன்றின் மேல் மற்றொன்றாய் வீடுகள் சாய்ந்து,  கீழே சரிவாய் கொட்டும் கரும் ஆலங்கட்டி மழையைத் தாங்கும்.  பிரகாசமாய் ஒரு ஜன்னல்.  "அங்கேதான் நான் வாழ்கிறேன்"  அப்பாவின் உறக்கமற்ற கண்  எங்களை நோக்கி எரிந்து கொண்டிருக்கிறது.  உன் முடியில் சிக்கிய பனி என் நாவில் உருகுகிறது.  பிரிவு  உன் அப்பா இப்போது  வடக்கே எங்கோ  வாகனமோட்டி செல்கிறார்.  அவர் கிளம்புவதற்கு முன்  உன் முன்னூறு புத்தகங்களை சேர்ந்து பங்கிட்டீர்.  நீ படித்து கழித்தவற்றை  அவர் எடுத்துக் கொண்டார்  - படிக்க இயலாதவை  என்று நீ ரகசியமாய் முடிவு செய்தவற்றை. ...

ஒளியைக் கேட்பவர்கள்

ஒருமுறை திருவல்லிக்கேணியின் எண்ண்ற்ற நெரிசல் குறுக்கு சந்துகளில் ஒன்றில் மாடு கிளறிக் கொண்டிருந்த ரொம்பி வழிந்த குப்பைத் தொட்டி ஒன்றை எனது எளிய புகைப்படக் கருவியில் கிளிக்கிய போது ஒரு வழிபோக்கர் ரொம்ப ஆர்வமாய் சொன்னார்: "நல்லா எடுங்க சார், பேப்பர்ல போடுங்க". அது ஓனிக்ஸ் விலகி சென்னையே சில தினங்கள் நாறிக்கிடந்த காலம். உயர்தர எஸ்.எல்.ஆர் புகைப்பட கருவி கொண்டு ரொம்ப தீவிரமாக ஒளித்தருணங்கள் தேடித் திரிபவர்களிடமும் "நீங்க பத்திரிகையா?" என்பது வழக்கமாக கேட்கப்படும் தாடை-சொறிக் கேள்வி. நம்மவர்களின் புகைப்பட கலை பற்றின விழிப்புணர்வு இப்படியாக பத்திரிகை, கல்யாண படங்களோடு நிற்கிறது. டி.ஜி.ட்டல் புரட்சியில் புகைப்படம் எடுத்தல் பரவலான ஒரு பொழுதுபோக்காக, எளிய கலை ஈடுபாடாக, தீவிரத் தேடலாக இன்று மாறியுள்ளது. எளிய செல்போன் புகைப்படம் போலன்றி, ஒளி அலகுகளை நுட்பமாக கட்டுப்படுத்துவதன் மூலம் பல கலை சாத்தியங்களை அடைய தேவைப்படும் தொழில் முறை எஸ்.எல்.ஆர் புகைப்படக்கருவியின் விலை கையை கடிக்கும். பலதர லென்ஸ், மோனோபோட் அல்லது டிரைபோட் போன்ற கருவிகள் சேர்த்து புகைப்பட தேடலுக்கான மொத்த ச...

ஆலன் ஸ்பென்ஸ்: படைப்பு வாழ்வும், பிறவும்

ஆலன் ஸ்பென்ஸ் ஸ்காட்லாந்துக்காரர். கவிதை, சிறுகதை, நாவல், நாடகம் மூலம் உலகளவில் கவனம் பெற்று வருகிறார். முதல் கவிதைத் தொகுப்பு ப்பொளப் ( நீருள் விழும் ஓசை) 1970-இல் வெளியானது. அதற்குப் பின் இரு முக்கிய ஹைக்கூ தொகுப்புகள்: இதயத்தின் பருவங்கள் மற்றும் தெளிந்த வெளிச்சம். இவரது சமீபத்திய நாவலான பரிசுத்த நிலத்தில் ஹைக்கூ மற்றும் தாங்கா கவிதைகள் இடம்பெறுகின்றன. இவர் ஸ்காட்லாந்திய கலைக்குழு நூல் விருதை மும்முறை பெற்றுள்ளார். 1995-இல் எஸ்.ஏ.சி அவ்வருட ஸ்காட்லாந்திய எழுத்தாளராய் தேர்ந்தெடுக்கப்பட்டார். கிளன்பிடிக் ஸ்காட்லாந்தின் உயிர்நாடி (படைப்பிலக்கியம்) விருதை 2006-ஆம் ஆண்டு பெற்றார்.  ஆலன் ஸ்பென்சின் எழுத்து தினசரி ஈடுபாடுகளிடையே இருத்தலின் புதிருக்குள் தோன்றும் சிறு வெளிச்சத் தெறிப்புகளை பின் தொடர்வது. உலகம் மனத்தின் பிரதிபலிப்பு என்றார் இம்மானுவல் காண்ட். இதயத்தின் பருவங்கள் தொகுப்பு வசந்தம், இலையுதிர்காலம், பனிக்காலம், கோடை எனும் இயற்கை பருவ படிமங்களில் மனத்தின் சுவடுகளை பின்தொடர்கிறது. வாழ்வின் முரண்கள், மாற்றச் சுழற்சியில் சாஸ்வதம் கண்டறிதல், நுட்பத்தின் எளிமை என இவர் எழுத்து த...

ஆலன் ஸ்பென்சின் இதயத்தின் பருவங்கள்

1. first warmth of spring i feel as if i have been asleep வசந்தத்தின் முதல் கதகதப்பு நான் இதுவரை ஏதோ தூக்கத்தில் இருந்ததைப் போல் உணர்கிறேன் 2. first warmth of spring under cracking ice the jawbone of a dog வசந்தத்தின் முதல் வெதுவெதுப்பு விரிசலிடும் பனிக்கட்டிக்கு கீழ் நாயொன்றின் தாடை எலும்பு 3. crocuses where last week the snow lay thick முந்தைய வாரம் கனத்த பனி கிடந்த இடத்தில் குரோக்கஸ் செடிகள் 4. the spring breeze -- the paper flowers also tremble வசந்த காலத் தென்றல் -- காகிதப் பூக்களும் நடுங்கும் 5. into the sea I launch a peice of driftwood with great ceremony கடலுக்குள் அனுப்பி வைக்கிறேன் மிகுந்த சம்பிரதாயங்களுடன் ஒரு துண்டு மிதக்கும் பலகையை 6. spring rain a yellow oil-drum bobbing down the river வசந்தகால மழை ஒரு மஞ்சள் எண்ணெய் பீப்பாய் மூழ்கி எழுந்தவாறு செல்லும் ஆற்றோடு 7. dog rolling daft on the grass beside the first daffodils of the year புல்லில் அசட்டுத்தனமாய் உருளும் நாய் வருடத்தின் முதல் டாபெடில் பூக்களின் மறுபுறமாய் 8. this spring evening blue estuary light vast empty ...