Skip to main content

Posts

Showing posts from October, 2009

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

"சச்சின் அவுட் சரிதான்": ஆஸ்திரேலிய நடுவர் டேரில் ஹார்ப்பர் பேட்டி

1999-இல் மெக்ரேத்தின் பவுன்சருக்கு குனிந்து அடிவாங்கிய டெண்டுல்கருக்கு அவுட் வேறு வழங்கி இந்தியர்களின் கரிப்பையும் சாபத்தையும் தாராளமாக பெற்ற, 2009-ல் ஆட்டவீரர்கள் மூன்றாவது நடுவருக்கு முறையிடும் சோதனை முறை செயல்படுத்தப்பட்ட போது சர்வதேச அளவில் கண்டனம் பெற்ற ஆஸ்திரேலிய நடுவர் டேரில் ஹார்ப்பரில் நுண்ணிய நகைச்சுவையும், வக்கணையும் கொண்ட பேட்டி. பேட்டியாளர் cricinfo.com-இன் நாகராஜ் கோல்புடி. தேர்ந்தெடுத்த பகுதிகளை மட்டும் தமிழாக்கி உள்ளேன் நாகராஜ்: மட்டையாளரின் ஷாட்களால் என்றாவது வாங்கியது உண்டா? ஹார்ப்பர்: பெற்றதிலேயே மோசமான அடி மேற்கிந்திய தீவுகளில் சனத் ஜெயசூர்யாவின் ஸ்கொயர் கட். பாப்பிங் கிரீஸ் ரன் அவுட்டுக்கான டீ.வி படப்பிடிப்பு கருவிகள் ஒரு பக்கம் மட்டுமே இருந்ததால் அவற்றுக்கு இடமளிக்க நடுவர்கள் ஆஃப் பக்கத்தில் நின்று கொண்டிருந்தோம். அந்த மூர்க்கமான ஷாட்டிலிருந்து விலக எனக்கு எந்த வழியும் இல்லை; நேராக அது என் நடுமார்பில் மோதியது. ஒற்றை ஓட்டம் ஒடின பின்னர் மட்டையாளர்கள் என்னிடம் வந்தனர்; ஜெயசூர்யா என்னிடம் சொன்னதெல்லாம், “உங்களால் எனக்கு 4 ஓட்டங்கள் போச்சு”. நான் சொன்னேன், “உனக்கு ஒர...

கதை சொல்ல வாழ்கிறேன்: காப்ரியல் கார்சியா மார்க்வெஸ் (அத்தியாயம் 5)

" இரண்டும் ஒன்றுதான் என்கிறார் உன் அப்பா" , அவள் சொன்னாள். அது பொய்யென்று அறிந்த நான் சொன்னேன்: " அவரும் வயலின் வாசிப்பதற்காக படிப்பை விட்டவர் தானே"

இந்திய அணி அறிவிப்பு: ஸ்ரீகாந்தின் மேலும் சில சொதப்பல்கள்

ஆஸி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. திராவிட், யூசுப், ஆர்.பி சிங், கார்த்திக், அபிஷேக் நாயர் நீக்கம், யுவ்ராஜ், சேவாக் திரும்பல், வேக வீச்சாளர் சுதீப் தியாகி தேர்வு ஆகியன முழுக்க எதிர்பார்த்தபடிதான் உள்ளன. பயிற்சியாளர்கள் ரோபின் மற்றும் பிரசாத் ஆகியோரை நீக்கினது ஒரு சிறு அதிர்ச்சிதான். நீக்கலும் தேர்வும் பொதுமக்கள் மற்றும் மீடியாவை விட எதிரணியினரை கலங்கடிக்கும் படியாக இருக்க வேண்டும். இந்த விதத்தில் தான் ஸ்ரீகாந்த தலைமையிலான தேர்வுக்குழு தோற்றுப் போயுள்ளது. ஒரே அணியை மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்க தேர்வாளர்கள் எதற்கு? “கடந்த இரு ஆண்டுகளாக இந்த தேர்வுக்குழு ஒரே அணியைத் தான் திரும்பத் திரும்ப சிறு மாற்றங்களுடன் தேர்கிறார்கள். தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளில் புது வீரர்கள் வந்துள்ளது போல் இந்தியாவில் எந்த புதுமுகத்தை இவர்கள் அறிமுகப்படுத்தி உள்ளார்கள்?” என்று சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் போது ரவி சாஸ்திரி தேர்வாளர்களின் தயக்கத்தையும், சமயோசிதமின்மையையும் கடுமையாக விமர்சித்தார். ஸ்ரீகாந்த் தலைமை ஏற்ற போது அவருக்கு பெரிய தலைவலி ஒன்றுமில்லை. அதை அவர் விரும்புபவரும் அல்ல. தேர...

அடுத்த வாரிசு: அனிருத்தா ஸ்ரீகாந்த

பிள்ளைகளின் நலத்துக்காக தாய்தந்தையர் பதினாறு அடி பாய்வது பாராட்டத்தக்கதுதான். இப்படியாக உள்ளூர் போட்டிகளில் 25 சராசரியில் 660 ஓட்டங்கள் மட்டுமே எடுத்திருந்தாலும் தற்போது நடந்து முடிந்த சேலஞ்சர் தொடர் போட்டிகளில் கிரீன் அணிக்கு தேர்வு செய்யப்பட்ட இந்திய கிரிக்கெட் தேர்வு வாரியத் தலைவரின் மகன் ஸ்ரீகாந்த் அனிருத்தா ஒரே எவ்வு எவ்வி பதினேழாவது படியில் நிற்கிறார். 2007 சேலஞ்சர் தொடரின் போதும் இவர் தேர்வு செய்யப்பட்டு மொத்தம் 13 ஓட்டங்கள் எடுத்தார். சுயநலத்தை கூச்சமின்றி வெளிப்படுத்த நிறைய மனத்தெம்பு வேண்டும். அப்பாக்களுக்கு இது இயல்பாகவே ஏற்படுகிறது. ஸ்ரீகாந்துக்கு சொல்லவே வேண்டாம். ரோஹன் கவாஸ்கர் விசயத்தில் சன்னி மீது அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனாலும் ரோஹனுக்கு போதுமான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்றே கருதுகிறேன்; கவாஸ்கர் சீக்கா அளவுக்கு அதிரடிக்காரர் அல்ல. போன ஐ.பி.எல்லின் போது அசரூதீன் தனது பையன் அஷாதுதீனை கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணியில் போஷிக்கும் படி கங்குலிடம் ஒப்படைத்தார்.இத்தனைக்கும் அஷாதுதீன் சில 2 நாள் லீக் டிவிஷன் போட்டிகளில் மட்டுமே ஆடியிருந்தார். அவருடன் தேர்வ...

கதை சொல்ல வாழ்கிறேன்: காப்ரியல் கார்சியா மார்க்வெஸ் (அத்தியாயம் 4)

மனச்சமநிலையோடு அந்த கொடுமையான பயணத்தை அவள் தாங்குவதைக் கண்டு , இத்தனை வேகமாயும் தேர்ச்சியுடனும் வறுமையின் அநியாயங்களை எப்படி அவளால் கீழ்ப்படுத்திட முடிந்தது என நானே கேட்டேன். அந்த அதிபயங்கர இரவு அவளது உச்சகட்ட பொறுமையையும் சோதித்தது.

காமம் - பொய் - வீடியோ சுருள்

சாய் பாபாவின் திகிடுதித்தங்களை விளக்கி அவருடன் ஒருகாலத்தில் நெருங்கிப் பழகின ஜி.ஆர் பாபு எழுதின இந்த அதிர்ச்சியூட்டும் கட்டுரையை மூன்று வருடங்களுக்கு முன் தமிழாக்கி புதிய காற்றில் பிரசுரித்தேன். இரண்டு பிரதிகளாக வெளியாயின. முதல் பகுதியின் மென்பிரதி கிடைக்கவில்லை. அதனால் இரண்டாம் பகுதியை மட்டும் இங்கே தருகிறேன். முதற்பகுதி இல்லாமலும் புரியும். முக்கியமான கட்டுரை. வெளிறிப்போன முகத்துடன், வெளிநாட்டவர் ஒருவர் வந்து பாபவை ஏற்றுக் கொண்டு விட்டால், பின் ஐயப்பட ஒன்றுமில்லை. தேசிய வானொலியும், தொலைக்காட்சியும் பாபாவுக்காக பிரச்சாரம் செய்கின்றன. பத்திரிகையாளர்கள் ஏமாளிகளாகவோ, விலைக்கு வாங்கப்பட்டவர்களாகவோ உள்ளனர். “அங்கே ஒரு நெக்லஸ் தோன்றக் கடவாக” ஆனால் ஒரு விசுவாசியின் சந்தேகத்திற்கு கண் கூடாகவே தீவனமிடுவது டெக்கான் குரோனிக்கல். 1992, நவம்பர் 23 அன்று சத்யசாயி பாபாவுக்கு வழங்கிய நூதன பிறந்த நாள் பரிசாகும். அதி எண்ணிக்கையில் விற்பனையாகும் ஐதராபாத்தைச் சார்ந்த இந்த ஆங்கில நாளிதழ் ஒரு பகுத்தறிவுவாதியின் கனவு என்று மட்டுமே வர்ணிக்கத்தக்க ஒன்றை பிரசுரித்தது. இந்திய பிரதமர் திரு.பி.வி.நரசிம்மராவின் மு...

ஆர்கன் பாமுக் - முரண் ஆளுமைகளின் எழுத்தாளன்

இரண்டு வருடஙகளுக்கு முன் புதிய காற்றில் நான் எழுதிய கட்டுரை. “நம்மால் நம் கடந்த காலத்தைப் பற்றி பேச இயல வேண்டும்... 30,000 கெர்டுகளும், 1.5மில்லியன் அர்மேனியர்களும் இந்த தேசத்தில் கொன்று குவிக்கப்பட்டனர், அதைப் பற்றிப் பேச யாருக்கும் நெஞ்சுரம் இல்லை”. 2006-ஆம் ஆண்டின் நோபல் பரிசை சமீபத்தில் வென்ற துருக்கிய நாவலாசிரியர் ஆர்கன் பாமுக் 2005 பிப்ரவரியில் ஸ்விஸ்ஸர்லாந்து பத்திரிகை ஒன்றில் கூறிய இக்கருத்து துருக்கிய அரசியல் கலாச்சாரத் தளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பாமுக்கின் குற்றச்சாட்டு அனடோலியாவில் 1915-1917 காலகட்டத்தில் ஒட்டோமான் துருக்கியர்கள் 1.5 மில்லியன் ஆர்மேனியர்களை திட்டமிட்டு இனப்படுகொலை செய்தனர் என்பதே. இந்த இனப்படுகொலை பெரும்பாலும் துருக்கிய அரசால் இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டது என்கிறார். இந்த படுகொலை பற்றி பேசினாலே துருக்கிய அரசு பதற்றமடைந்து விடும். ஐரோப்பிய யூனியனில் அங்கத்தினராக சர்வதேச அரசியல் தளத்தில் பல்கலாச்சார ஊடாடலை ஏற்றுக் கொள்ளும் தேசமாகவும், அமைதி விரும்பியாகவும் (பாகிஸ்தானைப் போல்) தன்னைக் காட்டிக் கொள்ளும் கட்டாயம் துருக்கிக்கு. 1980 மற்றும் 1...

ஸுஹ்ராவின் நகங்கள்:பஷீரின் இளம்பருவத்து தோழி விமர்சனம்

வருடஙகளுக்கு முன் பஷீரின் இளம்பருவத்து தோழி நாவலுக்கு புதிய காற்றில் நான் எழுதிய விமர்சனம். ஸீஹ்ரா ஒரு ஏழை பாக்கு வியாபாரியின் மகள். துறுதுறுப்பான, தைரியசாலியான சிறுமி. மஜீத் ஒரு பணக்கார மரவியாபாரியின் மகன். கனவுகள் நிரம்பிய, சாகசங்கள் புரிய விரும்பும் கொஞ்சம் மக்கான சிறுவன். மஜீத்தும் ஸுஹ்ராவும் மாம்பழங்களை பறிக்கும் போட்டியில் எதிரிகளாக ஆரம்பித்து, பின் மஜீத் தன் பழங்களை அவளுக்காக தியாகம் செய்திட நண்பர்களாகின்றனர். பிறகு கண்தெரியா நியதி ஒன்றின்படி காதலர்களாகின்றனர். ஸுஹ்ராவும் மஜீத்தும் பள்ளி கடைசி வகுப்பில் தேர்வடைகிறார்கள். ஸுஹ்ராவின் வாப்பாவின் மரணம் உயர்நிலைப்பள்ளியில் மேற்கொண்டு படிக்க வேண்டும் என்ற ஸுஹ்ராவின் ஆசை நிறைவேறாமல் போகிறது. அவளும், உம்மாவும், தங்கைகளும் ஒற்றை அறையிலான சிறிய வீடு மட்டும் கொண்ட ஏழை அனாதைகள் ஆகின்றனர். மஜீத்தை அவனுடைய பணக்கார அப்பா நகரத்திலுள்ள பள்ளிக்கூடத்தில் சேர்க்கிறார். அவன் புதுச்சட்டை வேட்டி, தொப்பி, குடை சகிதம் பள்ளிக்கு செல்கிறான். மஜீத் யார் கருத்தையும் மதிக்காத “சர்வாதிகாரியான” அப்பாவுடன் சண்டையிட்டு வீட்டிலிருந்து வெளியேறுகிறான். நகரம் சென்...

அடுத்த ஞாயிற்றுக்கிழமை: ஆர்.கே.நாராயண்

ஒவ்வொருவரும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கும் நாள் ஞாயிற்றுக் கிழமை. நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதை உணரும் முன்னே திடீரென ஆவியாகி விடும் நாள் அது. எதிர்பார்ப்பின் உவகைகளுடன் கூடிய சனிக்கிழமை மாலையின் உணர்வையும், திங்கள் பற்றிய எண்ணங்களால் கறைபட்ட ஞாயிறு மாலை உணர்வையும் எல்லோரும் அறிவோம். என்ன ஆகிறது அந்நாளுக்கு? பற்பல விஷயங்கள் திணிக்கப்படுகிற நாள் அது - வெளியே அழைத்துச் செல்வதாய் குழந்தைகளுக்கு கொடுத்த வாக்குறுதிகள், சாமான் வாங்க சிறிது நேரம் கடைக்கு அழைத்துச் செல்வதாய் சொன்ன வாக்குறுதி, இது போன்ற மென்மேலும் வாக்குறுதிகள், வாக்குறுதிகள். இருபத்தி நாலு மணிநேரத்தை நாற்பத்தி எட்டாய் நீட்டுவதை விட வேறு வழியில்லை. இதை ஒருவர் கண்டுணரும் முன் முற்பகல் முடிந்து விடும். காலையில் கொஞ்சம் தாமதமாய் படுக்கையிலிருந்து எழலாம் என்று முடிவு செய்வோம். ஆனால் ஞாயிற்றுக் கிழமை ஆகையால் சற்று முன்னதாகவே ஆரம்பித்துவிடும் கூச்சல் நம்மை சிரமத்துடன் தானாக எழுந்து விடச் செய்யும். ஒரு மணிநேரம் முன்னதாகவே வானொலிப் பெட்டியை இயக்க அந்நாளுக்காகவே காத்திருந்த அண்டை வீட்டு வானொலி ஆர்வலர், இயந்திர பாகங்கள் விண்டு த...

"யாரது பேசுவது?"

இன்றிரவு நிலவின் கீழ் நூலில் என் முன்னுரை இந்த ஹைக்கூக்கள் மொழியாக்கத்தின் ஆதியில் ஸ்காட்லாந்துக் கவிஞர் ஆலன் ஸ்பென்ஸ் மட்டுமே இருந்தார். பிறகு 2003-ஆண்டின் ஓர் பனி இரவும்; சில்வண்டுகள் நிலவொளி சூழ்ந்த கல்லூரி விடுதியின் இடுங்கின அறையும். கட்டுப்பாடின்றி, காலம் போவது அறியாமல், வரிசை கிரமமற்று பின்னெப்போதும் வாய்க்காத மனஒருமையுடன் ... ஸ்பென்ஸின் "இதயத்தின் பருவங்கள்" தொகுப்பிலிருந்து எனக்குப் பிடித்த 40 கவிதைகளை தமிழில் எழுதினேன். விடிகாலைதான் நிறுத்தினேன். கண் எரிந்தது. உடல் சூடு தலையில் ஆவியாகியது. ஒருக்களித்த கதவைத் திறந்து வெளிவந்தேன். வராந்தா. தரையில் தேங்கின பௌர்ணமி வெளிச்சம். கால்வைக்க கூசியது. திண்டு ஓரம் ஒரு தவிட்டு நிறக் குருவி வந்தமர்ந்து எதிரில் தோட்டத்தை கவனித்தது. என் நிழல் நீட்சி குருவி மீது கவிழ்ந்தது. குருவி அதை பொருட்படுத்தவில்லை. என் பிளாக்கில் உள்ள பூட்டியிருந்த அறைகள் சிலவற்றில் மட்டும் வியாதிஸ்தன் போல் ரேடியோ கசிந்தது. அலாரங்கள் சிணுங்கி ஓய்ந்தன. தோட்ட நடுவில் இருந்த சிறு குளக்கரையில் சென்று அமர்ந்து கால்களை ஊறப்போட்டேன். எனக்குள்ளிருந்து மற்றொரு மனம் ...

வலைப்பூவை ஒரு மாதம அப்டேட் செய்யாதது ஏன்?

கடந்த ஒரு மாதமாக வலைப்பூவை புதுப்பிக்க இல்லை. டாட்டா இண்டிகாம் இணைய சேவையை துண்டித்து விட்டு பி.எஸ்.என்.எல் முயன்றேன். அவர்கள் இந்த ஒருமாதமாக என்னை வெறுப்பேற்றி இன்றுதான் இணைப்பு தந்தார்கள். அது போக சிலபல எளிய விபத்துக்களில் வேறு மாட்டிக் கொண்டேன். ஒரு விடிகாலையில் நான் எழுதுவது டி.வி பார்ப்பது என்று இரவை ஓட்டி விட்டு தூங்குவதற்காக சென்ற போது விழுந்து விட்டேன். வழுக்கியோ தடுக்கியோ மோதியோ அல்ல. நான் காலில் அணியும் காலிப்பர் எனும் கருவி நான் நடக்கும் போது தன்னிச்சையாக மடிந்தது. முட்டியில் ரத்தக்கசிவு, கால் சுண்டு விரலில் எலும்பு முறிவு. மருத்துவமனை நான் சென்றிருந்த போது களைகட்டியது. பக்கத்தில் சங்கீதக்கச்சேரி. உள்ளே இந்தியா--பாக் கிரிக்கெட் ஓடியது. எலும்பு மருத்துவர் செல்போனில் வைத்தியம் பார்த்தபடியே என் காலைத் திருகிப் பார்த்தார். அவர் டேன் பிரவுனின் தீவிர விசிறி. வேறு நிறைய குப்பை புத்தகங்கள் படித்து வருவதாகவும் சொன்னார். மூன்று வாரங்கள் கட்டாய படுக்கை-ஓய்வு. அடுத்த வாரத்துடன் முடிகிறது. இரண்டாவது வார ஞாயிறு ஒன்றில் தூக்கக் கலக்கத்தில் ஆவி பறக்கும் காப்பியை குடிக்க தடுமாறிக் கொண்டிருந்...

நவீன ஹைக்கூ மொழியாக்கத் தொகுப்பு "இன்றிரவு நிலவின் கீழ்" வெளியீட்டு விழாவின் போது ...

வேகப்பந்து வீச்சு: பாரம்பரியமும் மரபியலும்

பலவீனமாக உள்ள இந்திய வேகப்பந்து வீச்சு தற்போதைய ஊடக பரபரப்பாக உள்ளது. இங்கு இந்திய வேகப் பந்துவீச்சின் ஏற்ற இறக்கத்தை ஒரு மீள்பார்வை பார்த்து, வெகப்பந்தை பற்றி பொதுவாக யோசிக்கலாம். இந்தியாவுக்கே என்றுமே பிரமாதமான வேகப் பந்து வீச்சாளர்களின் பாரம்பரியம் இருந்ததில்லை. ஆனாலும் திராவிட் தலைமையின் பிற்பகுதியிலும், கும்பிளே தலைமை கீழும், பின்னர் தோனி தலைமையிலும் ஒரு சிறுமறுமலர்ச்சி ஏற்பட்டது. எப்படி? இங்கிலாந்தின் கவுண்டி கிரிக்கெட் ஆடி தன் ஆட்டத்திறனின் உச்சத்தில் திரும்பின சகீர்கானின் கீழ் புதியவர்களான ஆர்.பி சிங், இஷாந்த், பிரவீண், இர்ஃபான், ஸ்ரீசாந்த போன்றோர் ஒரு சிறப்பான போட்டிச்சூழலில் ஆடினர். பந்து வீச்சுக்கு சாதகமான இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்று வேகப்பந்தாளர்களின் சுவர்கத்திலேயே இந்த இளம் வீச்சாளர்கள் இயங்கினர் என்பதை நாம் கவனிக்க வேண்டும். முடித்து விட்டு இந்தியா திரும்பினவர்கள் இங்கோ, இலங்கை, பாக்கிஸ்தான் போன்ற ஆசிய ஆடுதளங்களிலோ சோபிக்கவில்லை. ஏன்? ஆசியாவில் ஆடுதளங்கள் உறுதியற்றவை, இளகி வெடித்துப் போனவை. புழு அரித்தது போன்ற மைதானத்தின் தரைப்பரப்பில்...

பழையன புகுதலும் புதியன கழிதலும்: இர்பான் பதான் -- திராவிட் விவகாரம் தேர்வா சமரசமா?

ஒவ்வொரு முறை அணி அறிவிக்கும் போதும் தேர்வுக் குழு நம்மை ஆச்சரியப்படுத்த, சில நேரம் சிரிக்க வைக்க, தவறுவதில்லை. இளைஞர்களை ஆதரிக்கிறோம் என இதுவரை சொல்லி வந்த தேர்வுக்குழு இர்பான் பதானை ஊருக்கு அனுப்பி 35 வயதில் டிராவிட்டுக்கு ஒருநாள் கிரிக்கெட் மீண்டும் ஆட டிக்கேட் கொடுத்துள்ளது. இந்நிலையில் தேர்வாளர்களிடம் ஒரு நிலையான தேர்வுத் திட்டம் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுகிறது. ஆனால் அவர்களிடம் எந்த திட்டமும் இல்லை என்பதே உண்மை. சென்னை பிரம்மாரிக்களின் சமையல் போல் சமய சந்தர்ப்பத்திற்கு ஏற்றபடி அவசர கால முடிவுகள் மட்டும் எடுக்கிறார்கள் தேர்வாளர்கள். இந்த விதமான தகிடுதித்த நடவடிக்கைகள் ஸ்ரீகாந்துக்கு சரளமாக வரக்கூடியது என்றாலும், அவரை மட்டுமே நாம் குற்றம் சாட்ட முடியாது. நெருக்கடி நிலையில் ஒரு புது அணித்தலைவர் தேர்வாகும் போதான கட்டாயத்தின் போது மட்டுமே இளைஞர்களை கண்டுபிடித்து ஊக்கமளிப்பது, நிலைமை சீரடைந்ததும், ஸ்திரமான வீரர்களை குளிர்பதனத்தில் பாதுகாப்பதும் இந்தியாவின் நெடுங்கால தேர்வுக் கலாச்சாரம். இக்கலாச்சாரத்தின் கண்ணி மட்டுமே தற்போதைய தேர்வுக்குழு. இளைஞர்களை கலவரப்படுத்தும் ராணுவ வாரியம் வத்...

இந்திய கிரிக்கெட் அணியின் உறுத்தும் முதலிடம்

இலங்கையில் நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி முதல் போட்டியில் தள்ளாட்ட அணி நியுசீலாந்தை வீழ்த்தி ஐ.சி.சி பட்டியலில் முதல் இடத்தை பெற்ற போது இர்விங் வேலசின் "தெ பிரைஸ்" நாவலில் வரும் இங்கிரிட் பாஹ்ல் என்னும் ஒரு பெண் எழுத்தாளரின் சங்கடம் நினைவு வந்தது. எளிய இயற்கை கவிதைகளை மட்டும் பாடி வந்த அவருக்கு முழுக்க அரசியல் காரணங்களால் நோபல் பரிசு வழங்கப்படும்; கவிஞர் (வைரமுத்துவை போலன்றி ) நுண்ணுணர்வு கொண்டவர் தான். ஆனாலும் தனக்கு தகுதி இல்லை என தெரிந்தும் மறுக்கும் திராணி இல்லாமல் பெற்றுக் கொள்கிறார். பிற்பாடு பொருந்தாத மகுடம் அவரை உறுத்துகிறது; யோக்கியதை உள்ள பரிசாளர்களை சந்திக்கும் போது கூசுகிறார். தன்னை அழுத்தும் இந்த பரிசின் கனத்தை எப்படி இறக்கி வைப்பது என்பது தான் அவரது சிக்கல். சனிக்கிழமை இலங்கை அணியிடம் படுகேவலமாக இந்தியா தோற்றது தரப்பட்டியலில் முதல் அணியாக அது இருப்பதன் அபத்தத்தை துல்லியமாக சித்தரித்தது. அரியணையில் புட்டம் நெளிய வைத்தது. தோனி தலைமையிலான இந்திய அணி கடந்த சில வருடங்களில் தொடர்ச்சியாய் பல போட்டிகளில் வென்றிருந்தாலும், நமக்கு நியாயமான இடம் 5 ...

புத்தகப் பெருக்கமும் சதுர்த்தி பொம்மைகளும்

கடந்த மாத இறுதியில் மதுரையில் உயிரோசை புத்தக வெளியீட்டு விழாவில் பேசின தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் பிரசுர சந்தையில் சமீக கால புத்தகப் பெருக்கம் பற்றின ஒரு தீவிரமான கவலையை தமாஷாக அலசினார். பிறகு பேசிய சாரு "தவறான இடத்தில் பேசி விட்டீர்" என்று தருமிக் குடுமியை ஒரு பிடிபிடித்தார். புத்தகங்களின் அதிகப்படியான பிரசுரமும், தலையில் முட்டை ஓடு துண்டுகள் ஒட்டின வாசகர்களின் தீவிர இலக்கியக் களத்தை நோக்கின படையெடுப்பும் ஒரு தொடக்க நிலை ஆபத்து என முந்தைய தலைமுறையின் தெரியப்பட்ட எழுத்தாளர்களில் சிலரோ பலரோ சொல்கிறார்கள் அல்லது உள்ளூர நம்புகிறார்கள அல்லது குறைந்த பட்சம் உத்தேசிக்கிறார்கள். இது வெறுமனே கால இடைவெளி தரும் கவலையோ புதுமை நிராகரிப்போ அல்ல. நாம் கவனமாக அலச வேண்டிய பிரச்சினை. உலகில், குறிப்பாய் மேற்கில், அரை நிமிடத்துக்கு ஒரு புத்தகம் எழுதப்படுகிறது. அரசாங்கங்களாக பார்த்து அகவிலைப்படி, பண்டிகை சிறப்பு நிகழ்ச்சிகள் பார்க்க போனஸ், ஓய்வூதியம் தந்து உலகில் பிரசுரமாகும் புத்தகங்களை தினசரி 8 மணி நேரம் படிப்பதற்கான தொழில் முறை வாசகர்களை நியமித்தால் கூட, ஏற்கனவே எழுதப்பட்ட புத்தகங்களை படித்...