ஒரு கதை நுணுக்கமாய் கற்பனையுடன் வாசிக்கையில் அது மேலும் வளர்கிறது. நண்பர் ராஜாவின் விமர்சனம் அத்தகையது. படியுங்கள்... ”மாடிப்படிகள்” மிக அழகான கதை. நேரடியான கதை போலத் தோன்றினாலும், பல அடுக்குகள் கொண்ட கதையாகப் பட்டது. இளவயதில் பெண்கள் இவரிடம் கூச்சமின்றி தம் அந்தரங்கங்களைச் சொல்ல என்ன காரணம்? அவர்களும், ஆணாதிக்கம் நிறைந்த சமுதாயத்தில், இன்னொரு வகையில் உதாசீனப்படுத்தப் படுபவர்கள் தாமே. அந்தப் புரிதலில் விளைந்த தோழமையா, அல்லது, பிற சம வயது ஆண்களிடம் பழகும் போது கொள்ளும் பதற்றம் இன்றிப் பழகும் வாய்ப்பு இருப்பதாலா? அதே போல், இரண்டாம் முறையாக லதாவைப் பார்க்கும் போது, மிகக் கவனமாக, "இன்னும் குள்ளமாகத் தெரிந்தாள்", எனக் குறிப்பிட்டு இருக்கிறீர்கள். முதல் முறை கல்லூரிக்கு செல்லும் போது பார்க்கும் போது, லதாவை மனத் தடுமாற்றத்துடன், கீழிருந்து மேல் நோக்கிப் பார்க்கிறான். வாழ்க்கையில் பல வெற்றிகளை அடைந்து, அனுபவம் நிறைந்த போது லதாவைப் பார்க்கும் போது, அவன் லதாவை தனக்கு சரிசமமான அளவில் பார்க்கிறான். அப்போது லதா, அவன் மனதளவில் இருந்த லதாவ...