"பெண்களுக்கு பேச்சு என்பது கண்ணாடிமுன் நிற்பதுபோல என்று அவளுடன் பேசும்போது தோன்றும். கண்ணாடி அவளைச் சுருதி சுத்தமாகப் பிரதிபலித்தாகவேண்டும், அவ்வளவுதான். அவள் யாழ்ப்பாணத்தில் அவளுடைய இறந்தகாலத்தைப் பற்றியே பேச விரும்பினாள். அவளுடைய பள்ளி நாள்கள், தோழிகள், பார்த்த சினிமாக்கள், சண்டைகள்... அவள் பேசிய அனைத்தையும் சில சொற்றொடர்களாகச் சுருக்கிவிடமுடியும் என்று தோன்றியது. ‘நான் அழகானவள். நான் நல்லவள். எனக்கு ஒன்றுமே தெரியாது, நான் ஒரு சிறுமி.’ அந்தப் பாவனையை உண்மையான அங்கீகாரத்துடன் கேட்டிருக்கும் இரு கண்களும் அங்கீகரிக்கும் இரு கண்களும்தான் நான் அவளுக்கு"
சார்லஸ், "உலோகம்" (ஜெயமோகன்)
புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share