என் மூதாதை , இமயத்து பனியினாலான ஒருவன் , சமர்கந்தில் இருந்து காஷ்மீருக்கு வந்தான் , கடல் சமாதிகளில் சேகரித்த தன் குடும்ப சொத்தான திமிங்கல எலும்புகளை பையில் சுமந்து கொண்டு . அவன் முதுகெலும்பு பனிக்கட்டி ஆறுகளில் இருந்து செதுக்கப்பட்டது , அவன் மூச்சு ஆர்க்டிக் துருவத்திலிருந்து புறப்பட்டது , ஆகையால் தன்னைத் தழுவும் பெண்களை உறையச் செய்தான் . அவன் மனைவி கல் போன்ற நீராக உருகினாள் , அவளது முதுமை ஒரு தெள்ளிய நீராவியாதல் ஆனது .