முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

“90களின் தமிழ் சினிமா” பேட்டி (7)



Related image

(எனது 90களின் தமிழ் சினிமா” நூலை ஒட்டி World of Appu இணையதளத்தில் வெளியான பேட்டி இது.)

14. முற்போக்கான மாநிலமாக அறியப்படும் கேரளாவிலும் கூட சாதிய அபிமானத்துடன் திரைப்படங்கள் வெளிவந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். பெயருக்குப் பின்னால் சாதியின் பெயரைச் சேர்த்துக் கொள்ளும் பழக்கம் இன்னும் அங்கு ஒழியவில்லை. எனில், கதாநாயகர்களுக்குச் சாதிய அடையாளங்களுடன் பெயர் வைப்பது தவிர்க்க முடியாதது அல்லவா? இதை எப்படிப் புரிந்து கொள்வது?

ஆர். அபிலாஷ்: கேரளாவில் சாதி படிநிலை பெருமளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டு அது இயல்புத்தன்மை கொண்டதால் ஏற்பட்ட நிலை அது. அங்கு ஒருவரை சாதிப்பெயரால் அழைப்பது இழிவு அல்ல. ஆனாலும் ஈழவ மக்களின் அரசியல் எழுச்சி அங்கு சாதி குறித்த பிரக்ஞையை ஏற்படுத்தி உள்ளது. ராஜீவ் ரவியின்கம்மட்டிப் பாடம்ஒரு நல்ல உதாரணம்.
எது எப்படியோ, சாதியை குறிப்பிடாமல் இருப்பது சாதியை ஒழிப்பது ஆகாது. சாதியை பல விதங்களில் இந்திய சமூகம் சார்ந்திருக்கிறது. நமது குடும்பம், நிலவுடைமை, பெண்களின் மீதான சமூக கட்டுப்பாடு, நமது சுய அடையாளம், அரசியலில் நமது செல்வாக்கு என பல (சமூகக் கேடான) விசயங்கள் சாதியை நம்பி இருக்கின்றன. நீங்கள் சாதிக்கு வெளியே இருந்தால் திருமணம் செய்ய முடியுமா சொல்லுங்கள்? என்னதான் புரட்சித் திருமணம் செய்தாலும் மீள மீள சாதிக்குள் விழுந்தே ஆக வேண்டும்அப்படியான சூழல்கள் சந்தர்பங்கள் வாழ்வில் தோன்றியபடியே இருக்கும்.
ஆகையால், நாம் சாதியை மூடி மறைக்காமல் அது குறித்து சினிமாவில் இன்னும் திறந்த மனத்துடன் பேச வேண்டும் என்பதே என் விருப்பம். உதாரணமாய், “காதல்போன்ற படங்களில் இன்னும் நேரடியாய் சாதி கலவரங்கள், வன்முறை, ஒடுக்குமுறையை குறிப்பிட்டு விவாதிக்கக் கூடிய சூழல் இங்கு தோன்ற வேண்டும். ஒரு விசயத்தை பேசாமல் இருக்கையில் தாம் குரோதம் நொதித்து வன்முறை வளர்ந்து சமூகப் பிரச்சனைகள் வெடிக்கின்றன. ஆனால் பேச பேச நாம் ஒரு புரிந்துணர்வை எட்டி விட முடியும். இமையத்தின்பெத்தவன்கதை ஒரு அருமையான உதாரணம். நமது தணிக்கைத் துறை இவ்விசயத்தில் இன்னும் முற்போக்காய் இருக்க வேண்டும்.
15. மலையாள சினிமாவில் சமீப ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள புதிய அலைக்குப் பிறகான திரைப்படங்களின் போக்கு எப்படி இருக்கிறது?
ஆர். அபிலாஷ்: ஆமாம், வித்தியாசமான மண்ணின் மணம் கொண்ட புது நுண்ணுணர்வை வெளிப்படுத்தும் படங்கள் மலையாளத்தில் தற்போது வருகின்றன. பகத் பாஸில், நிவின் பாலி போன்ற நடிக்கத் தெரிந்த நட்சத்திரங்கள் இந்த புது வரவுகளின் மையத்தில் இருக்கிறார்கள். மோகன்லால், மம்முட்டியை தாண்டி நல்ல சினிமா உருவாக முடியும் என மலையாளிகள் தமக்குத் தாமே நிரூபிக்கிறார்கள்.
 மலையாள சினிமாவின் இந்த அலை என்னை ஆச்சரியப்படுத்தியது. ஏனெனில் சில வருடங்களுக்கு முன்பு வரை படுமட்டமான படங்களின் தொடர் வருகை, மோகன்லால் போன்ற நட்சத்திரங்களின் படங்களே தோல்வி அடைவது, தமிழ் படங்கள் அங்கே வெளியாகி அமோகமாய் ஓடுவது என மலையாள சினிமா உலகமே கிட்டத்தட்ட தரைமட்டமாகும் நிலைமை ஏற்பட்டது. ஆனால் எதிர்பாரா விதத்தில் மலையாள சினிமா மீண்டும் வந்துள்ளது. மோகன்லால்புலிமுருகன்எனும் பெரிய வெற்றிப் படம் கொடுத்தார். இன்னொரு பக்கம் ராஜீவ் ரவி, திலீஷ் போத்தன், ஆஷிக் அபு, சமீர் தஹீர், ரதீஷ் அம்பத் என மாற்றுப்பட / இடைநிலை இயக்குநர்களும் வெற்றி பெறுகிறார்கள். ஆரோக்கியமான சூழல் அங்கு திரும்பி விட்டது.
இங்கு இரண்டு விசயங்களைக் குறிப்பிட வேண்டும்.
1)   என்னதான் வித்தியாசமான அபாரமான படங்களைக் கொடுத்தாலும் மலையாள சினிமாவுக்கு என்று இன்னமும் திரைமொழி உருவாகி வரவில்லை. ராஜீவ் ரவி போன்றோரின் படங்கள் மட்டுமே விதிவிலக்கு. தொழில்நுட்ப ரீதியாக நாம் அவர்களை விட வெகுவாக மேலே இருக்கிறோம்.

2) குறைந்த பட்ஜெட் படங்களை எடுப்பது அவர்களுக்கு எப்போதுமே 
வலிமை. அவர்களால் பரீட்சார்த்த முயற்சிகளை எளிதில் செய்து பார்க்க இயல்கிறது.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...