என் வாசிப்பு நாய் வாயை வைத்ததைப் போன்றது. தினமும் ஏதாவது ஒரு புதுப்புத்தகத்தில் சில பக்கங்கள் மேய்ந்து விட்டு அதை மறந்து வேறொரு விசயத்துக்குள் போய் விடுவேன். இவ்வருடமும் அப்படித்தான். Storytel ஆப் ஒரு பெரிய கொடுப்பினை - இரவு சில மணிநேரங்களில் அதில் ஒலிப்புத்தகங்களைக் கேட்டு விட்டு தூங்கி விடுவேன். அந்த புத்தகங்களிலும் நான்கைந்து மட்டுமே முழுதாய் முடித்திருப்பேன். நேற்று மைக் பிரெயர்லியின் Art of Captaincy நூலில் சில அத்தியாயங்களைக் கேட்டேன். அதற்கு முந்தின நாள் சக் பலானுயிக்கின் Snuff. அதற்கு முந்தின தினம் வி.எஸ் நைப்பாலில் Enigma of Arrival. அதற்கு முந்தின நாட்கள் “ஜெ.ஜெ சில குறிப்புகள்” நாவலை 80% கேட்டு முடித்தேன். (அரவிந்தனின் வாசிப்பில் ஏதோ அவரே காதுக்குள் வந்து கதை சொல்வதைப் போல வித்தியாசமான அனுபவம்.) அதற்கு முந்தின நாட்கள் “பசித்த மானிடம்”, “ஆகாயத் தாமரை” ஆகிய நாவல்களை பாதி கேட்டேன். நேற்று ஒரு கட்டுரைக்காக டெலூஸைப் புரட்டியதில் இன்று திடீரென இமானுவல் கேன்ட் பற்றி படிக்க ஆசை வந்து ஒரு ஒலிப்புத்தகத்தை திறந்து கேட்டுக் கொண்டிருந்தேன். இப்படியே தாவிக்கொண்டிருப்பேன். புத்தகங்களை...