Skip to main content

2020ஆம் ஆண்டிற்கான விளக்கு விருதுகள்

 2020 ஆம் ஆண்டுக்கான விளக்கு விருதைப் பெறும் சுகிர்தராணி மற்றும் ஸ்டாலின் ராஜாங்கத்துக்கு வாழ்த்துக்கள். 

சுகிர்தராணி மிகத்திறமையான ஒரு கவிஞர். சரளமான மொழிநடை, வலுவான சமூக உணர்வு கொண்டவர். உபமனமும் சமூக மனமும் கைகோர்க்கும் உடல்மொழியால் எழுதுபவர். நமது சங்க இலக்கிய மரபையும் சமூக விடுதலை மரபையும் தன் நவீன கவிதை வடிவில் பின் தொடர்பவர். அண்மையில் அவருடைய கவிதை ஒன்று தில்லி பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டதை ஒட்டி ஒரு காணொலி உரையாடல் நடந்தது. அதில் அவர் பேசியதைக் கேட்ட போது எவ்வளவு கூர்மையான பார்வையும் ஆழமான அறிவும் படைத்தவர் அவர் எனக் கண்டுகொண்டேன்.


ஸ்டாலின் ராஜாங்கம் நாம் இந்திய அளவில் கொண்டாடத்தக்க சமூக வரலாற்றியலாளர், ஆராய்ச்சியாளர், கூர்மையான மதி படைத்தவர், தமிழ் சாதிகள், சமுகம், அரசியல், சினிமா குறித்து ஆழமான கட்டுரைகளை யாரும் முன்பு யோசிக்காத கோண்த்தில் அணுகி எழுதி வருபவர். சமகால கட்டுரையாளர்களில் ஸ்டாலின் தன்னிகரற்றவர். ஸ்டாலின் என் இனிய நண்பரும் கூட. எப்போதும் ஒருவித அங்கதத்துடன் பட்டாசு வெடிப்பது போல பேசக் கூடியவர். அவர் அருகே இருப்பதே ஒரு மகிழ்ச்சியான கொண்டாட்டமான அனுபவமாக இருக்கும்.


இருவரையும் கௌரவிப்பதன் வழி விளக்கு விருது மேலும் ஒளிர்கிறது!

Comments