முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிக்பாஸில் இருந்து கொண்டு முற்போக்கு பேசும் அபத்தம்

“ஊடகமே செய்தி” என்பது ஊடகவியல் ஆய்வாளர் மெக்லூஹலின் முக்கியமான கூற்று. அவர் சொல்ல வந்ததென்ன? டிவி ஊடகம் வந்த பின் மக்கள் இந்த உலகைப் பார்க்கும்விதமே மாறிவிட்டது, ஒரு செயல்-அதன் எதிர்வினை என்று அல்லாமல் ஒரு பிம்பம், அதனிடத்தில் மற்றொரு பிம்பம் என உலகம் மாறிவிட்டது என்கிறார். டிவியும், இன்று இணையமும் வந்த பின்னர் சொற்கள் கனமிழந்து விட்டது, கருத்துக்கள் சாரமற்று விட்டது இப்படித்தான். அந்த ஊடகம் எப்படி நம்மைக் கையாள வேண்டும் என நினைக்கிறதோ அதனுள் போகும் போது நாமும் அவ்வாறே ஆகிறோம். பிக்பாஸில் “எல்லாரும் இங்கே சமம்” என்று கூறிவிட்டு அதே நபர் “பிக்பாஸ் தேங்க்யூ” என்று சொல்லும் போது, அந்த சமத்துவமே கேலிக்கூத்தாகிறது. எல்லாரும் சமம் என்றால் பிக்பாஸ் என ஒருவர் எப்படி இருக்க முடியும்?  பிக்பாஸின் விளையாட்டுகள் எனப்படும் ஒடுக்குமுறை பொழுதுபோக்கின் பகுதியாக ஒருவர் பாதி மீசையை எடுக்கிறார், ஒருவர் முகத்தில் கரியைப் பூசிக் கொள்ளுகிறார் என்றால் அங்கு அவர் அதன் அடிமைத்தனத்தைப் புரிந்து கொள்ள முடியாதபடி அதனுடன் கட்டுண்டிருக்கிறார் எனப் பொருள். அதைப் பார்த்துக்கொண்டிருக்கும் நமக்கும் அது அடிமைத்தனம் எனத் தோன்றாது. ஏனென்றால் அவர்களும் நாமும் அப்போது அந்த ஊடகத்தின் அங்கமாகி விட்டோம். அப்படி நாம் ஆவதே அந்த ஊடகம் சொல்லும் செய்தி.

இன்னும் சொல்லப்போனால் ஊடகத்துக்கு என ஒரு தனி சேதியே கிடையாது, பிக்பாஸிலும் கருத்துக்கள் இல்லை, அந்த நிகழத்துதலின் பகுதியான வசனங்கள் மட்டுமே அவை. அதுவே ஊடகமே செய்தி என்பது.

விக்ரமன் எடுக்கிற முற்போக்கான அணுகுமுறைகளே முக்கியம், அவர் எங்கே சொல்கிறார் என்பதல்ல என்று யோசிக்கும் நண்பர்கள் மெக்லூஹன் சொல்வதை கவனிக்க வேண்டும். பிக்பாஸ் எனும் ஊடகத்தினுள் இருந்து கொண்டு நீங்கள் ‘நல்ல’ கருத்துக்களை சொல்லும் போது அக்கருத்துக்கள் உருமாறுகின்றன - பொருளற்றவையாக, விளையாட்டுத்தனமாக, மேலோட்டமானவையாக மாறுகின்றன.

பிக்பாஸில் கலந்து கொண்டு ஒரு ஊடகத்தை, வடிவத்தை சரியாக பயன்படுத்தி மாற்றத்தைக் கொண்டு வருகிறோம் என்பது சப்பைக்கட்டு, ஒரு அப்பட்டமான பொய் என்பதை இப்படி சுலபத்தில் புரிந்து கொள்ளலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...