Skip to main content

Posts

Showing posts from June, 2010

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

திசைகளற்ற வீடு

வாசலின் குறுக்காய் தூங்க பிரியப்படும் பூனை கதவுகளை மூடப் போவதாய் மிரட்டினாலோ பலம் பிரயோகித்தாலோ அன்றி இரு திசைகளில் ஒன்றை தேர்ந்திட விரும்புவதில்லை

வீட்டுக்குள் வரப் பிடிக்காத பூனை

கிளர்த்திய தூசுகளாய் எங்கும் அலைந்து திரியும் பூனை சில நேரங்களில் கேட்டும் கேட்காத மாதிரி பார்த்து பல நேரங்களில் பார்த்தபடி உதாசீனித்து என் கவனம் கிடைக்காத வேளைகளில் வேண்டுதல், கெஞ்சல், தேம்பல், கோபம், சுயவிவாதம், நியாய விசாரணை என ஒவ்வொரு தொனியிலாய் முடிவற்ற அழைப்புகள் செய்து

சிலந்தி

காலணி பளபளப்பு தேய்க்க மறந்த சுருக்கங்கள் சில பல வைட்டமின் நரைமயிர்கள் தயாரித்த வார்த்தைகளை நினைவூட்டியபடி வேலைக்காய் வாசலில்

பள்ளிச்சாலை: குறும்பட விமர்சனம்

படத்தொகுப்பு: அன்பழகன் ஒளிப்பதிவு: முத்து கதை, திரைக்கதை மற்றும் இயக்கம்: செல்வகணேஷ் ”பள்ளிச்சாலை” குழந்தைகளின் களங்கமற்ற உலகை எதார்த்தமாக, ஏறத்தாழ அவர்களது மொழியிலேயே சொல்லி உள்ள படம். படத்தின் கதைக்களன் சற்று வினோதமானது. ஆரம்ப, இறுதிக் காட்சிகளின் சில வினாடிகளை மட்டும் பார்ப்பவர்களை இதை ஒரு பொதிகை டீ.வி வகையறா செய்திப்படம் என்று கருதி விடக் கூடும்.

தாகம் – குறும்பட விமர்சனம்

தமிழ் ஸ்டுடியோ இணைய இதழில் நான் எழுதி வரும் குறும்பட விமர்சன தொடரில் இவ்வாரம் ’தாகம்” எழுத்து, இயக்கம்: மா.யோகநாதன் இசை: பா.சதீஷ் படத்தொகுப்பு: பா.பிரமோத் ஒளிப்பதிவு: சீ.அரவிந்த்குமார் ”தாகம்” ஒரு தேர்தல் பிரச்சார மைக்கை விட சத்தமான படம். மரம் வெட்டுதல் போன்ற இயற்கை அழிப்பு நடவடிக்கைகள் எதிர்காலத்தில் இயற்கை வளங்களை, குறிப்பாக நீர்வளத்தை, கடுமையாக பாதிக்கும் என்று எச்சரிப்பதே இப்படத்தின் இயக்குநர் மா.யோகநாதனின் உத்தேசம். இந்த பரப்புரையில் இயக்குநர் இரு தவறுகள் செய்கிறார்.

சளி உடம்புக்கு நல்லது

சளி தொண்டை வலி நிவாரணத்துக்காக டாக்டர் அறைக்குள் நுழைந்த போது அவர் மடித்து வைத்த நாளிதழ் பக்கங்களை ஓரமாய் திறந்து அவசரமாக நுணுகி பார்த்துக் கொண்டிருந்தார். என் சளி தொந்தரவுகளை திரும்பத் திரும்ப சொன்னதை பொறுமையாக கேட்டவர் இரட்டிப்பு வேகத்தில் மருந்து பரிந்துரையை எழுதினார். “ஒரு வருடமாய் சளியே இல்லை டாக்டர், ஆனால் இந்த ஒரு மாதமாக திரும்பத் திரும்ப ஜலதோசம் பிடித்துக் கொள்கிறது”.

வடக்குமாசி வீதி: பழுக்குகளின் உலகமும் துப்புவாளையும்

தாமரை இதழில் வலைப்பூக்களை அறிமுகப்படுத்தி நான் எழுதி வரும் தொடரில் இம்மாதம் வடக்குமாசி வீதி   ஒவ்வொரு ஊரிலும் அதன் பிரதான கலாச்சார மற்றும் உளவியல் அம்சங்களை வெளிப்படுத்தும் நபர்கள் இருப்பார்கள். பிரமுகர்களை சொல்ல வில்லை. இவர்கள் பெரும்பாலும் உதிரிகளே. உலோபிகள், சோம்பேறிகள், வன்முறையாளர்கள், குடிகாரர்கள், திருடர்கள், அடையாள வெளிப்பாட்டிற்காக கலை, விளையாட்டு போன்றவற்றில் ஒரு சில்லறை அளவில் ஈடுபட்டு வருபவர்கள் ... இப்படி. ஒரு வங்கி குமாஸ்தா அல்லது விவசாயியை விட ஊரில் அதிக பிரபலமானவர்களாக இவர்கள் இருப்பர். அதிகமும் வட்டப் பெயர்களால் அறியப்படுவார்கள். காலப்போக்கில் சிலரது நிஜப்பெயர் மறந்து அடையாளப்பெயர் நிலைக்கும். உதாரணமாக எங்களூரில் சிலர் எவரஸ்டு, சோப்பு என்றெல்லாம் அறியப்பட்டார்கள். ஒரு கட்டத்தில் ஊரின் பல்வேறு மித்துகளில் இவர்களின் கதைகளும் கலந்து விடும். இந்த கதைகள் பலநூறு தடவை வெவ்வேறு சந்தர்பங்களில் பேசப்பட்டு தொடர்ந்து வண்ணம் ஏற்றப்படும். இலக்கியத்தில் ஒரு ஊர் புனையப்படும் போது நிஜவரலாற்றை விட இத்தகைய வினோத உதிரி மனிதர்களே முக்கியமான இடம் பெறுவர். ஜேம்ஸ் ஜாய்ஸில் இருந்து கு...

ஆசியக் கோப்பை: தோல்வியுற்ற பாகிஸ்தானின் முன்னுள்ள சவால்கள்

இந்த ஆசியக் கோப்பை தொடர் பாகிஸ்தானுக்கு ஜுரத்துக்கு பின்னர் வியர்ப்பதை விட முக்கியமானது. இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு கௌரவத்தை காப்பாற்றுவது நோக்கமாக இருக்கும் என்றால் பாகிஸ்தானுக்கு சர்வதேச அரங்கில் தன்னை நிலைநாட்ட இந்த தொடரின் ஆட்டங்கள் பயன்பட வேண்டும். மேலும் குறிப்பாக ஷோயப் அக்தர், ஷோயப் மாலிக், கம்ரான் அக்மல் ஆகிய மூத்த வீரர்கள் பழைய ஆட்டத்திறனுக்கு திரும்ப வேண்டும் என்றும் பாக் மேலாண்மை எதிர்பார்க்கும். அடுத்து மூத்த மற்றும் இளைய வீரர்கள் அப்ரிதியின் கீழ் ஒன்றுபட்டு கொண்டை ஊசியால் பின்புறம் குத்தாமல் செயலூக்கத்துடன் செயல்பட வேண்டும் என்பதும் பாக் ரசிகர்களின் மற்றொரு பிரார்த்தனையாக இருக்கும். ஆசியக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் பாக் அணி சன்னமான வித்தியாசத்தில் தோற்றுள்ளது. இந்த தோல்வியை விட முக்கியமாக, மேற்ச்சொன்ன எதிர்பார்ப்புகள் எந்த அளவுக்கு கனிந்துள்ளன என்பதே சுவாரஸ்யமான பார்வை.

மனிதன் இடத்தை யாரால் பிடிக்க முடியும்? - பிரையன் ஆல்டிஸ்

தாமரை இதழில் வெளியான எனது மொழியாக்க அறிவியல் புனைகதை வானுக்குள் காலை கசிந்தேறியது; கீழுள்ள நிலத்தின் சாம்பல் நிறச் சாயலை அதற்கு நல்கியது. நிலப்பொறுப்பாளி மூவாயிரம் ஏக்கர் நிலமொன்றின் மேல் மண்ணை புரட்டிப் போட்டு முடித்தது. கடைசி பத்தியை திருப்பின உடன் அது நெடுஞ்சாலையில் ஏறி தன் பணியை திரும்பி நோக்கியது. நல்ல வேலை. நிலம் தான் மோசம். உலகம் பூரா உள்ள மண்ணைப் போல் இதுவும் அதிகப்படி விளைச்சலால் மாசுபட்டது. நியாயப்படி இது தற்போது சற்று காலம் தரிசாக கிடக்க வேண்டும், ஆனால் நிலப்பொறுப்பாளிக்கு வேறு உத்தரவுகள் இருந்தன.

இலங்கையிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை

உயிரோசையில் வெளியாகியுள்ள என் கட்டுரை கால்சுழல் பந்தாளர் அமித் மிஷ்ரா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு டெஸ்ட் ஆட்டத்தில் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தி வெற்றிக்கு வழி வகுத்த போது அஜெய் ஜெடேஜா இப்படி அவதானித்தார்: “இந்தியாவில் இப்படி யாரும் எதிர்பாராமல் ஒரு திறமை தோன்றி பிரகாசிக்கும். இந்திய கிரிக்கெட் எனும் பெருங்குழப்பமான ஒரு கட்டமைப்பில் எதேச்சையாகவே அற்புதங்கள் நிகழ வாய்ப்புள்ளது. அமித் மிஷ்ராவை பாருங்கள்! வாரியமோ, தேர்வாளர்களோ அவரை பயிற்றுவித்து, பாதுகாத்து வளர்த்தெடுக்கவில்லை. தனிப்பட்ட உழைப்பும் அதிர்ஷ்டகரமான திருப்பங்களும் காரணமாக அணிக்குள் வந்தார். சோபித்தார். ஆஸ்திரேலியாவைப் போன்ற கட்டுக்கோப்பான அமைப்புமுறை, திட்டவரைவை ஒட்டின செயல்பாடுகள் போன்றவை இந்தியாவில் பலன் தராது. இப்படி எதேச்சையாக திறமைகள் வெளிப்படுவதே இந்திய கிரிக்கெட்டின் வரலாறாக இருந்து வந்துள்ளது. இனிமேலும் அப்படியே இருக்கும்.” இந்தியாவில் வீரர்களை கையாள்வதும், தேர்வதும் தற்காலிக அவசியம் மற்றும் நட்சத்திர மதிப்பை பொறுத்தே உள்ளது. இதனாலேயே சில மூத்தவீரர்கள் விலகினாலோ ஓய்வுற்றாலோ நாம் அவ்விடத்தை நிரப்ப கடுமையாக தடுமாறுக...

கதை சொல்ல வாழ்கிறேன் (மார்க்வெஸ்): அத்தியாயம் 20

யுவான் வெசெண்டே கோமெஸ்ஸின் காட்டு மிராண்டி சர்வாதிகாரத்தில் இருந்து தப்பிக்க லா குவாஜிராவின் எல்லையை தாண்ட இயன்ற எண்ணற்ற வென்சில்வேனியர்களில் ஒருவராய் அவர் இந்நகரத்துக்கு நூற்றாண்டின் ஆரம்பத்தில் வந்திருந்தார். இரு முரண்சக்திகளால் செலுத்தப்பட்டவர்களில் முதல்வராய் அந்த மருத்துவர் இருந்தார்: சர்வாதிகாரியின் வெஞ்சினம் மற்றும் எங்களது வாழைப்பழ செல்வசெழிப்பு பற்றின மாயத்தோற்றம். வந்ததில் இருந்தே தனது நோய் கண்டறியும் பார்வைப்புலன் மற்றும் – அப்போது பரவலாய் சொல்லப்பட்டது போல் – ஆத்மாவுக்கான நன்னடத்தைகளுக்காக பேர் பெற்றார். எனது தாத்தாபாட்டியினரின் வீட்டுக்கு மிக அடிக்கடி வருகை தருபவர்களில் அவர் ஒருவர்.; புகைவண்டியில் யார் வரபோகிறார்கள் என்று தெரியாது என்பதால் விருந்து மேஜை எப்போதும் தயாராக வைக்கப்பட்டிருக்கும். அவரது மூத்த குழந்தைக்கு என் அம்மா ஞானஸ்தான அம்மா; தாத்தா அதற்கு தற்காப்பு கற்றுத் தந்தார். பின்னர் ஸ்பானிய உள்நாட்டு போரில் நாடு கடத்தப்பட்டவர்களுடன் தொடர்ந்து நான் வளர்ந்தது போலவே, இவர்களின் இடையே நான் வளர்ந்தேன்.

அரசு தூதுவர் - ஜேன் ஹெர்ஷ்பீல்டு

சொல்வனத்தில் வெளியாகி உள்ள எனது மொழியாக்க கவிதை நம் வாழ்வுகளில் நமக்கு ஒன்றுமே தெரியாத ஒருநாள் அறையில், ஒரு சிறு எலி. ரெண்டு நாள் கழித்து, ஒரு பாம்பு. அது, நான் நுழைவதை பார்த்து, தன் உடலின் நீள்வரியை படுக்கைக்கு கீழே உதறியது,

தர்மம் - பில்லி காலின்ஸ்

சொல்வனம் இணையதளத்தில் வெளியாகி உள்ள எனது மொழியாக்க கவிதை முன்கதவு வழியாக ஒவ்வொரு காலையும் தொப்பியின்றி குடையின்றி காசின்றி தனது நாய் கூண்டுக்கு சாவி இன்றி தளர்-ஓட்டத்தில் நாய் வெளியேறும் விதம் என் இதயத்தின் வட்டத்தட்டை பால் போன்ற பெருமிதத்தால் நிரப்ப ஒருபோதும் தவறுவதில்லை.

திருமண வரவேற்பு- கேதரின் மோக்ளர்

சொல்வனத்தில் வெளியாகி உள்ள எனது மொழிபெயர்ப்புக் கவிதை ஒரு தூரத்து உறவினரின் திருமணத்தின் போது கடவுளும் சாத்தானும் ஒரே மேசையில் அமர்ந்திருந்தனர்

செவ்ளி: பயமுறுத்தும் வசீகரிக்கும் இருண்மை

தமிழ்ஸ்டுடியோ இணைய இதழில் நான் எழுதி வரும் குறும்படங்கள் பற்றிய தொடரில் சமீபத்திய கட்டுரை இது. தயாரிப்பு, எழுத்து, இயக்கம்: த.அறிவழகன் ஒளிப்பதிவு: தினேஷ் ஸ்ரீனிவாஸ் இசை: கெ.திருமுருகன் படத்தொகுப்பு: மதன் குணதேவா சிறப்பொலிகள்: எம்.ஜெ.ராஜூ படைப்புலகின் மிக வசீகரமான படிமம் இருட்டுதான். அடர்ந்த வனத்தின், குகைகளின் இருட்டுக்குள் புழங்கி பரிணமித்தவன் என்பதாலோ ஏனோ மனிதனுக்குள் இருள் மாபெரும் கதைகளின் உலகமாக உள்ளது. நேரடியாகவோ மறைமுகமாகவோ அது மனிதக்கதையாடலில் தொடர்ந்து இடம் வகிக்கிறது. பட்டவர்த்தனமான வெளிச்சத்தை அன்றாட வாழ்விலோ கற்பனை எழுச்சியிலோ நாம் சில தருணங்கள் மட்டுமே சந்தித்து சட்டென்று விலகி விடவே எத்தனிக்கிறோம். மேற்கத்திய இலக்கியத்தில் கடவுள் பற்றி பேச வந்தவர்கள் சாத்தானில் பெரும் விருப்பு கொள்வதும் கீழைத்தேய மரபில் காலங்காலமாக பேய்க்கதைகள் உரையாடப்பட்டு ஆவேசமாக வளர்த்தெடுக்கப்படுவதற்கும் இந்த இருண்மை மீதான பிரேமையே காரணம். அறிவழகனின் “செவ்ளி” ஒரு இருபது நிமிட குறும்படம். தமிழில் இருட்டின் வசீகரத்தை மிரட்டலாக படம் பிடித்த முதல் படம்.

Accident - குறும்பட விமர்சனம்

தமிழ் ஸ்டுடியோ இணைய இதழில் தமிழ் குறும்படங்கள் பற்றி ஒரு அறிமுகத் தொடர் எழுதி வருகிறேன். இம்முறை சங்கர் நாராயணனின் படைப்பை விமர்சிக்கிறேன். சங்கர் நாராயணனின் Accident ஒரு தமிழ்ப்படம் தான். இப்படம் பட்டாசுக்கு திரி கொளுத்துவதை போன்று விரையும் திரைக்கதையை கொண்டது. அதாவது திரி எரிவதே இறுதியில் வெடிமருந்தை சென்றடையத்தான். சங்கர் நாராயணன் கடைசி காட்சி நோக்கி படத்தை மிக திறமையாக பார்வையாளனை கண்ணைக்கட்டி அழைத்துச் செல்கிறார். என்ன இரண்டே விதிகளை பின்பற்ற வேண்டும்.

சந்தேஷம்: வீட்டைத் துண்டாக்கும் அரசியல்

இந்த மாத உயிர்மையில் எழுதியுள்ள பத்தியில் சாரு கேரள முதலமைச்சருக்கு தான் எழுதிய திறந்த கடிதத்தை பற்றி குறிப்பிட்டிருந்தார். கேரளாவில் ஒரு முதலமைச்சரையே கேள்வி கேட்கும் சுதந்திரம் இருப்பதாய் சொல்லி இருந்தார். தமிழகத்தில் உள்ளது ஒரு மாபெரும் பொம்மலாட்ட மேடை மட்டுமே. இன்று மதியம் சத்தியன் அந்திக்காடு இயக்கிய ”சந்தேஷம்” என்றொரு மலையாளப்படம் பார்த்தேன். ஏஷியானெட்டில் ஒளிபரப்பானது. ஸ்ரீனிவாசன் திரைக்கதை எழுதிய இப்படம் எனக்கு சாருவின் மேற்சொன்ன கருத்தை நினைவூட்டியது.

கலையார்வம் கொண்டவர்கள் மந்தபுத்திக்காரர்கள்

இந்த மாத அகநாழிகை இதழில் வெளிவந்துள்ள எனது கட்டுரை மலையாள எழுத்தாளர் அக்பர் கக்கட்டில் ஒரு ஓணச் சிறப்பிதழுக்கு பெயரளவில் மட்டும் நாம் பெரும்பான்மையோர் அறிந்துள்ள அடூர் கோபால கிருஷ்ணனை பேட்டி கண்டு பிற்பாடு அந்த பேட்டியை விரிவு செய்து நூலாக வெளியிட்டுள்ளார். அதை "குமரி மாவட்டத்தின் கடற்கரை நகரான குளச்சலில் பிறந்த" மு. யூசுப் மொழிபெயர்ப்பு செய்ததற்கு ஒரு காரணம் உண்டு: "என் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு சுயதேவைகள் சார்ந்து உருவாக்கப்படும் சில கருத்தியல் போக்குகள் இடம் தரவில்லை. இதன் மாற்றுவடிவமாக ... அடூர் கோபாலகிருஷ்ணனைப் பற்றி அக்பர் கக்கட்டில் எழுதிய இந்நூலை தமிழில் மொழிபெயர்த்துள்ளேன்" இந்த சொற்றொடர்களை திரும்பத் திரும்ப படித்தேன். புரியவில்லை. யூசுப்பை இவ்வாறு பூடகமாக எழுதும்படி அச்சுறுத்தும் பயங்கரவாத சக்திகளை கடுமையாக கண்டிக்கிறேன்.