கடந்த ஐம்பதாண்டுகளில் தென்னிந்திய சினிமாவில் நடிப்பை பொறுத்த மட்டில் இரு தெளிவான பாணிகள் வெற்றி கண்டுள்ளன . ஒன்று ஆரவாரமான நாடகீயமான நடிப்பு . நமது கூத்து மற்றும் மேடை நாடக மரபில் இருந்து முகிழ்த்த சிவாஜி துவங்கி , அவர் பாணியில் கமல்ஹாசன் , பின் அவரைத் தொடர்ந்து பிரகாஷ்ராஜ் , விக்ரம் , சூர்யா ஆகியோர் இத்தடத்தில் வருகிறார்கள் . மலையாளத்தில் மம்முட்டி இதே மரபை சேர்ந்தவர் . ( இப்பாணி நடிகர்களுக்கு உடம்பை வருத்தி மாறுவேடங்களில் தோன்றவும் புதுப்புது விதங்களில் பேசவும் விருப்பம் இருக்கும் .)