விடுமுறை வாசிப்புக் குறிப்புகள் (1) சரி , நாம் எடுத்துக் கொண்ட நாவலுக்கு வருகிறேன் - மேலே சொன்ன அத்தனை சங்கதிகளும் ( இழப்புணர்வு , மிகுபுனைவு , கவித்துவம் , மனசஞ்சாரம் , இல்லாத மனிதர்கள் இருப்பது , நடக்காத சம்பவங்கள் நடப்பது ) இந்நாவலிலும் உண்டு - ஸ்குரு தஸாகி ஒரு ரயில்நிலைய பொறியாளன் . முராகாமியின் பிற நாயகர்களைப் போல இவனும் எந்த தனித்திறனும் அற்ற , யாரும் பெரிதாய் பொருட்படுத்தாத , அதைக்குறித்த எந்த கவலையும் அற்ற சாதாரணன் ; அன்றாட வாழ்வை எந்திரத்தனமாக வாழ்பவன் . நாவல் துவங்கும் போது அவன் தன்னுடைய தற்கொலை விழைவைப் பற்றி , மரணத்தைக் குறித்து தியானிப்பதைப் பற்றி சொல்கிறான் . அதற்குக் காரணம் அவனது நான்கு நண்பர்கள் - இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் . அவர்கள் அவனை ஒருநாள் அழைத்து நட்பைத் துண்டிக்கிறார்கள் . அவர்கள் இன்றி அவன் தன் வாழ்க்கை...