Skip to main content

Posts

Showing posts from August, 2020

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

“நாயகனும்” “காலாவும்” - மீள்-சொல்லலின் அரசியல்

இன்று “நாயகன்” படத்தின் ஒரு பகுதியை சும்மா பார்த்துக்கொண்டிருந்தேன் - அப்போது தான் இதற்கும் “காலாவுக்குமான” ஒற்றுமை மீண்டும் நினைவுக்கு வந்தது. இப்போது இது வெறும் ஒற்றுமை அல்ல, ஒரு அரசியல், மீள்-சொல்லலின் அரசியல் எனப் பட்டது.  பின்நவீனக் கதையாடல்களில் இப்படி மீள்சொல்வதற்கு ஒரு தனி இடம் உண்டு - இரண்டிலுமே தாராவியை நவீனப்படுத்தி சேரிகளை அப்புறப்படுத்தி அடித்தட்டு மக்களை வெளியேற்ற முயலும் பண முதலைகளை நாயகன் எதிர்க்கிற காட்சி உண்டு; இரண்டு படங்களின் திரைக்கதையிலும் இதுவே மையக்காட்சி (key incident). ஒரு மத்திய சாதி ஆள் தாதாவாகி அங்கு அதிகமாய் வசிக்கும் தலித்துகளைக் காப்பாற்றுகிறார் என்பதில் ஒரு போலியான அரசியல் வருகிறது. அப்படி ஒரு மானுடநேயத்தை முன்னிறுத்தும் போது பாதிக்கப்பட்ட மக்களின் agencyஐ மணிரத்னம் “நாயகனில்” பறித்து விடுகிறார். அதை மீட்டெடுப்பதே “காலா”. அங்கு தலித்துகளுக்கு ஒரு தலித் தலைமை அமைகிறது. அவர்களின் விடுதலையும் சாதி ஒருங்கிணைப்பில், ஒற்றுமையில், சுயமரியாதையில் பிறக்கிறது. வேலு வேலுபாய், வேலு நாயக்கர் ஆகும் முன்பு அங்கு ஒரு லோக்கல் தலைவர் இருப்பார் (விஜயன்). அவர் பணம் வாங...

இலக்கியத்தில் அரசியல் உண்டா? - குறிப்புகள்

(“திரள்” அமைப்பு நடத்திய கலந்துரையாடலில் நான் நிகழ்த்திய உரையின் குறிப்புகள்) இலக்கியம் மக்களுக்கானதா அல்லது நுட்பமும் ஆழமும் மட்டுமே இலக்கியத்தின் நோக்கமா ? கலை மக்களுக்காகவா , அல்லது கலை கலைக்காகவா ? இந்த கேள்வி ரொம்ப பழையது - கடந்த ஒரு நூற்றாண்டில் இக்கேள்வி காலாவதியாகி குப்பைத்தொட்டிக்கு சென்று விட்டது . கலை என்பது ஒரு மறுக்க முடியாத , முழுமுதலான மானுட உண்மையைப் பேசுவது எனும் நம்பிக்கை அந்த காலத்தில் இருந்தது . இப்படி நம்பியவர்களில் இந்த உண்மையானது ஆன்மீக விடுதலைக்கு , மகிழ்ச்சிக்கானதா அல்லது மக்கள் விடுதலைக்கானதா ( அகவயமானதா புறவயமானதா ?) எனும் இரு முகாம்களாக பிரிந்து போரிட்டனர் . இது தத்துவத்தில் சாக்ரடீஸ் காலத்தில் இருந்தே இருந்து வரும் பஞ்சாயத்துதான் .  இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் இந்த பார்வை ஒரு முடிவுக்கு வந்தது ; உலகம் முழுமுதல் உண்மைகளை நிராகரிக்க ஆரம்பித்தது . அப்போது மொழியியல் , அமைப்பியல் அறிஞர்கள் அனைத்தும் மொழியாலானது என வாதிட்டனர் . எப்படி அர்த்தம் தோன்றுகிறது , அதன் அமைப்பு ...

இலக்கியத்தில் அரசியல்

  நேற்று திரள் அமைப்பு நடத்திய உரையாடலில் “இலக்கியத்தில் அரசியல்” எனும் தலைப்பில் எனது பேச்சு நல்ல கவனத்தையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இத்தனைக்கும் நிறைய பேர் கவனிக்க மாட்டார்கள் என நான் கருதும் அளவுக்கு ஒரு இலக்கிய கோட்பாட்டு விவாதமாகவே அது இருந்தது. ஆனால் நம்மவர்களுக்கு புதிய விசயங்களை அறிய ஆர்வம் எப்போதும் குன்றுவதில்லை எனும் என் நம்பிக்கை வலுப்பெற்றிருக்கிறது. “நன்றி அபிலாஷ்.  ஒரு சிறப்பான  உரையினை  வழங்கியிருந்தீர்கள். அமைப்பில் உள்ள தோழர்களும் உங்கள் பேச்சினைக் குறித்து பாராட்டு தெரிவித்தார்கள். இன்றய கலந்துரையாடல் குறித்தும் எல்லோருக்கும் நல்ல திருப்தி.   அத்துடன் அமைப்பினர்  ஒரு  You Tube Channel  இனை தொடக்கி பல உரைகளை (நூல் விமர்சனங்கள், அறிமுகங்கள் ) காணொளிகளாக இணைக்கும் எண்ணமும் உண்டு. தொடர்ந்தும் எம்மோடு இணைந்து பயணிப்பீர்கள் என்று நம்புகிறேன். மீண்டும், நன்றி அபிலாஷ்.. தொடர்ந்தும் பேசுவோம்.”  - ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான வாசன் என் உரையை கேட்க விரும்புவோர் இந்த பேஸ்புக் லிங்கை பயன்படுத்துங்கள்: https:/...

வள்ளுவர் ஏன் ஒரு பௌத்தர்?

“ தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர் நிலையின் இழிந்தக் கடை ” ( குறள் 964; பால் : பொருட்பால் ; அதிகாரம் : மானம் ) இது ஒரு எளிய குறள் - தலையில் இருக்கும் போது அழகாக கம்பீரமாகத் தோற்றம் தரும் மயிர் . ஆனால் அது உதிர்ந்தால் எந்த மதிப்பும் இல்லை . இந்த தலைமயிருடன் வாழ்வின் உயர்நிலையை இணையாக்கும் வள்ளுவர் , தாழ்வு நிலையை உதிர்ந்த மயிர் என்கிறார் . இதன் பொருள் என்ன ? “ மதிப்பில்லாத ஒன்றுக்கு நீங்கள் தான் அதிக மதிப்பை அளித்து தலையில் வளர்த்து அலங்கரித்து பெருமை கொள்கிறீர்கள் . ஆனால் அதன் மதிப்பும் பெருமையும் நிலையற்றது , பல விசயங்களை சார்ந்தது , அப்படியே தான் வாழ்க்கையில் அந்தஸ்து , சமூக மதிப்பு , சமூக அதிகாரம் எல்லாம் . அதைப் பெறுவதற்கு நீ செய்யும் முயற்சிகள் வீணானவை . அதை இழந்ததை நினைத்து இரங்கி நீ கொள்ளும் கவலைகள் அபத்தமானவை . நீ மட்டுமாக அதை உண்டு பண்ணவில்லை , நீ மட்டுமாக அதை இழக்கவில்லை , அது உருவானதற்கான பல்வேறு காரணிகளில் ஒன்றே நீ , அக்காரணிகள் சாரமானவை அல்ல , உண்மையை புரிந்து கொண்டால் நீ துக்கத்தில் ...