முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு ‘சாதியவாதியை’ வெறுக்க வேண்டுமா? - எழுத்தாளர்களை, கலைஞர்களை முன்வைத்து



வளையாத மூங்கிலில் ராகம்

வளைஞ்சு ஓடுதே

பழனிபாரதி


ஒரு ‘சாதியவாதியை’ வெறுத்து ஒதுக்க வேண்டுமா?


கூடாதுஏனென்று சொல்கிறேன்.


ஒரு கருத்து நிலையை எதிர்க்க வேண்டுமே ஒழிய அதைப் பேசுகிற தனிமனிதனை அல்ல என்பது என்நிலைப்பாடு (அரசியல்வாதிகள் மட்டுமே இதில் விதிவிலக்கு). .தா., ‘சாதியம்’, ‘மதவாதம்’ போன்றவைகருத்துநிலைகள்அவற்றை பேசுகிறபின்பற்றுகிறவர்கள் ‘சாதியவாதிகளோ’ ‘மதவாதிகளோ’ அல்லஅவர்களுடைய செயல்களைத் தொடர்ந்து கவனித்தால் அதற்கு முரணான பல கருத்துக்களையும் அவர்கள்கொண்டிருப்பதை நாம் அறிய முடியும்நான் முன்பு டிவி விவாதங்களில் கலந்து கொண்டிருந்த போதுதீவிரமான மதவாதிகளுடன் மேடையில் மோதியிருக்கிறேன்ஆனால் அதற்குப் பின் அவர்கள் மிகவும்இனிமையாக பழக்க கூடியவர்கள் கண்டிருக்கிறேன்விவாதத்தில் கோரைப்பல்லை காட்டினாலும்நடைமுறையில் வடிவேலுவின் புலிப்பாண்டி குழந்தைகளை நடத்துவதைப் போன்றே நம்மை நடத்துவார்கள்மிகவும் நட்பானவர்களாகசிரமப்படுபவர்களுக்கு உதவ முன்வருபவர்களாக இருப்பார்கள்அதனாலேஎல்லாதரப்பினரையும் (அவர்களுடைய உள்ளடிகுழு அரசியல்களையும் பொறுத்துக் கொண்டு அல்லது எதிர்த்தும்கொண்டுஏற்றுக் கொள்ள வேண்டும்அவர்களுடைய மக்கள் விரோத அரசியலை மட்டும் மறுத்து விமர்சிக்கவேண்டும் என்பதே என்றும் என் தரப்பு


மனிதர்களை எப்படி மதிப்பிடுவதுஅவர்களுடைய சொற்களை வைத்தாஅவர்களுடைய செயல்களைவைத்தாஅவர்களும் சொற்களும் செயல்களும் எப்போதும் பொருந்திப் போவதில்லையேஅவர்களுடையசொற்கள் எப்போதும் அவர்களுடையதாக இருப்பதில்லையேஅவர்களுடைய செயல்களும் ஒரேநேர்கோட்டில்கருத்தியல் ஒழுங்குடன் இருப்பதில்லையே?


கவிதையியல்” (Poetics) நூலில் மனித சுபாவம் பற்றி அரிஸ்டாட்டில் சொல்லும் போது மனிதர்களுக்குஉள்ளார்ந்தநிரந்தர சுபாவம் என ஒன்று இல்லை என்கிறார்ஒருவருடைய இயல்பை அவருடையசெயல்பாடுகள் வழியாக மட்டுமே நம்மால் ஓரளவுக்கு அனுமானிக்க முடிகிறதுஅதனால் செயலே மனிதஅடையாளம் என்கிறார்எனில் ஒருவர் தூங்கும் போது அவருடைய இயல்பு எங்கே போய் விடுகிறது என்று அவர்கேட்கிறார்தூங்கும் போது மட்டுமல்ல மரணத்தின் போதும் கெட்டவர்களும் நல்லவர்களும் ஒரே போன்றுதானே இருக்கிறார்கள்எனில் செயலைத் தான் நாம் விமர்சிக்க வேண்டும்செயல்படுகிறவரை அல்லஇரண்டும்வெவ்வேறு விசயங்கள்அச்செயலுக்கு அப்பால் ‘செயல்படுகிறவன்’ என்று ஒன்று இல்லை என்பதே உண்மைஒரு மனிதனை அந்தந்த கணத்துக்கு அப்பால் மதிப்பிடுவது தவறானது


இந்த கருத்து உங்களில் பலருக்கும் கடுப்பேற்றும் என்று அறிவேன்ஏனென்றால் சகமனிதரை அந்தந்தகணத்து செயலை வைத்து மட்டும் மதிப்பிடுகையில் அவர்கள் ஒரு நிலையில் இல்லாமல் வழுவிக் கொண்டேஇருப்பார்கள் தானேஇது அவரை என்னவாக அடையாளப்படுத்துவது எனும் சிக்கலை ஏற்படுத்தும் அல்லவாஅதனாலே நாம் ஒருவரைப் பற்றிய மரபுத்தொடர்ச்சியைகடந்தகால சித்திரத்தை (legacy) உருவாக்கிக்கொள்கிறோம் என்கிறார் அரிஸ்டாட்டில்ஒரு மீன் தொட்டிக்குள் மீன் தாவரங்களுக்குள் ஒளிந்து ஒளிந்துவிளையாடுவது போல மனிதன் இந்த மரபுத்தொடர்ச்சிக்குள் ஒளிந்து ஒளிந்து வெளிவருகிறான்நாம்முடிந்தவரையில் மனிதர்களை அவர்கள் அவ்வப்போது என்னவாக தம்மைக் காட்டிக்கொள்கிறார்களோஅதன்படி அவர்களுடன் உறவாடுகிறோம்இதுவே இயல்பாகமகிழ்ச்சியாகசுதந்திரமாகஇருக்கிறதுஆனால்பொதுவெளி என்று வந்து விட்டால் நாம் அவர்களை ஏதோ ஒரு கடந்த கால தொடர்ச்சியுடன் பிணைத்துவிமர்சிக்கவோ கொண்டாடவோ செய்கிறோம்நான் எப்போதும் முன்னதையே விரும்புவேன்.


பொதுவெளியில் நமக்கு நன்கு தெரிந்த ஒருவர் மீது சாதியபாலியல் குற்றச்சாட்டுகள் வரும் போது அவர்களைகாறி உமிழ்கிறோம்நான் அதை ஒரு கும்பல் மனநிலை என்றே கொள்வேன்ஏனென்றால் அவருடன் தினசரிபழகும் நிலை ஏற்பட்டால் அவ்வாறு காறி உமிழ மாட்டோம்


இன்னொரு கேள்விநமக்கு ஒத்த சிந்தனை கொண்டோர் மட்டுமே தான் நமக்கு நண்பர்களாக இருக்கமுடியுமாஒத்த அலைவரிசை கொண்டோர் நட்பாவது சுலபம்அதே நேரம் மாற்று சிந்தனை கொண்டோரும்அணுக்கமாகஅன்பாக இருக்க முடியும் என்றும் ஒரு பார்வை உள்ளது என “Nicomachean Ethics” நூலின்எட்டாவது பகுதியான “நட்பில்” அரிஸ்டாடில் சொல்லுகிறார்நட்பு என்பது அரிஸ்டாட்டிலின் காலத்தில்(குடும்பத்துக்கு வெளியே உள்ளஎல்லாவிதமான மனித உறவுகளுக்கும் பயன்படுத்தப்பட்டது என்பதால்இக்கருத்தை சற்று விரிவான தளத்தில் வைத்து நாம் யோசிக்க வேண்டும்.


 எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார்அவர் வலதுசாரி அரசியல் பேச ஆரம்பித்தாலே எனக்கு கோபம் பொத்துக்கொண்டு வரும்எங்களிடையே கடும் மோதல்கள் ஏற்பட்டதுண்டுஆனால் அவர் அரசியல் பேசாத போதுமிகுந்த பிரியமும் எங்களிடையே தழைக்கும்உணர்வளவில் இணக்கமாக இருப்போம்ஆனால் கருத்தளவில்சுத்தமாக ஒத்துப் போகாதுஅரசியல் தான் பிரச்சனை என்று ஒரு தத்துவக் கருத்தையோ கவிதையியல் பற்றிவிமர்சனத்தையோ எடுத்து கொண்டால் கூட “அக்னி நட்சத்திரம்” பிரபு-கார்த்திக் போல ஆகி விடுவோம்இந்தகருத்துமோதல்கள் எங்களிடையே ஒரு நாள் கூட எந்த பிளவையும் ஏற்படுத்தவில்லை என்பதே ஆச்சரியம்அதற்கு அவருடைய பிரியமானநட்பார்ந்ததளர்வான சுபாவம் ஒரு முக்கிய காரணம்கருத்து நிலையும்தனிமனிதனும் வேறுவேறு எனும் என்னுடைய நம்பிக்கையும் இன்னொரு காரணம்


இலக்கிய தளத்துக்கு வருகிறேன் - நான் என் பதின் வயதில் சந்தித்த நாள் முதலே ஜெயமோகனுடன் எனக்குகடுமையான கருத்துமுரண்கள் ஏற்பட்டதுண்டுஅவருடைய இலக்கியபண்பாட்டு அரசியல் கருத்துக்களுக்குஎதிராக நான் விரிவாக நிறைய எழுதியிருக்கிறேன்ஆனால் அவர் மீது எனக்கு துளியும் வெறுப்பு என்றுமேஇருந்ததில்லைஇப்போதும் இல்லைஅவருடைய இலக்கிய இடத்தை மறுத்ததோ அவர் ஒரு பாசிஸ்ட்ஏஜெண்ட் என்று சித்தரித்ததோ இல்லைஅவருடைய கலாச்சார அரசியலை மறுக்கும் போதும் அவரதுபடைப்புகளை வாசித்து சிலாகிப்பதில் / விமர்சிப்பதில் எந்த சிக்கலும் இல்லை.

 “ஒரு இலக்கியவாதியை அவனுடைய கருத்தில் இருந்து பிரித்துப் பார்க்கலாகாதுகருத்துநிலையும் படைப்பும்ஒன்று தான்” எனும் பார்வை முதிர்ச்சியற்றது என்று நினைக்கிறேன்ஆம்இலக்கியவாதியின் கருத்துநிலைஅவருடைய படைப்பில் வெளிப்படுவதுண்டுஅதைக் கடந்தும் அப்படைப்பு செல்வதுண்டுமேலும்தெரிதாசொல்வதைப் போலவாசிப்பானது கருத்துக்கள்உணர்வுகளின் முரண்களின் உச்சத்தில் மட்டுமே நிகழ்வதுஅல்லவாஅத்துடன்ஒரு படைப்பாளியை அவருடைய செயல்களை வைத்து மதிப்பிடுவது என்றால் நாம்அவருடைய எல்லா செயல்களையும் தானே உள்ளடக்க வேண்டும்நாம் அதை செய்கிறோமாஅதைசெய்யுமளவுக்கு நமக்கு அவரைத் தெரியுமாஇல்லையே.


ஒரு படைப்பாளி அவனுடைய சமூகத்தின்கலாச்சாரத்தின் பிரதிநிதி அல்லவாஆகையால் அவன் பொறுப்பாகபேச வேண்டாமாஆம்அவன் பிரதிநிதி தான்அவன் ஒரு பண்பாட்டுக் குறியீடு தான்அதே நேரம் அவனுடன்நாம் கொள்ளும் சமூக உறவானதுநட்பானதுவாசக உறவானது ஒரு குறியீட்டுடன் கொள்ளும் உறவு அல்லஒரு குறியீட்டுடன் நாம் கொள்ளும் உறவானது கடற்கரையில் நிற்கும் சிலைகளுடன் கொள்ளும் உறவுக்குஒப்பானதுஆனால் ஒரு மனிதன் என்பவன் ஒரு சிலை அல்லஅவனுடைய எழுத்தில் உயிர்கொள்ளும் குரலும்ஒரு குறியீட்டின் குரல் அல்ல.


ஒருவருடைய கட்டுரைகள்பேட்டிகளை வைத்து அவரை ஒரு அடையாளப் பட்டிக்குள் அடைப்பது தவறானதுதமிழின் முக்கிய படைப்பாளியான கண்மணி குணசேகரன் தற்போது “ஜெய் பீமை” எதிர்த்து பா..கவின்அரசியலை வெளிப்படையாக ஆதரித்து எழுதியுள்ள பேஸ்புக் பதிவு கடும் கண்டனங்களைப் பெற்று வருகிறதுகண்மணியின் புத்தகங்களை அவர் மீதான எதிர்ப்பின் முகமாக அவருக்கே திருப்பி அனுப்புவோமா என ஒருஇலக்கிய நண்பர் கேட்கிறார்அது ஒரு மிகத் தவறான முன்னுதாரணமாகி விடும்அதை ஒரு போதும் நாம்செய்யக் கூடாது எனக் கூறுகிறேன்தொடர்ந்து உயிர்த்திருப்பதில்எந்த அடையாளத்துக்குள்ளும்சிக்காதிருப்பதில் எழுத்தானது வாழ்க்கைக்கு நிகராக சில நேரம் இருக்கிறதுஆகையாலே ஒரு கருத்தைவைத்து கண்மணியின் படைப்புகளை கூட்டக நாம் நிராகரிப்பது கலையையும்வாழ்வையும் நிராகரிக்கும்பாசிச செயல்பாடாகி விடும்


 மாறாககண்மணி குணசேகரனை கண்டிப்பதும் அவரை தொடர்ந்து நேசிப்பதுமே நம் அணுகுமுறையாகஇருக்க வேண்டும்.


நன்றிசமயம் டாட் காம்

கருத்துகள்

Edwin Shijan Immatty இவ்வாறு கூறியுள்ளார்…
👍

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...