ஜெயமோகனின் ஜக்கி கட்டுரைகளுடன் எனக்கு பெரும்பாலும் உடன்பாடே. கார்ப்பரேட் சாமியார்கள் உருவாகி வந்ததன் வரலாற்றுவாத காரணங்களை சொல்கிறார். அவர்கள் சாமியார்கள் அல்ல, நவீன, எளிய உளவியலாளர்கள், ஒரு கலாச்சார தேவையை நிறைவேற்றுகிறாரக்ள் என்கிறார். அத்தகைய சாமியார்கள் ஏன் தனிப்பட்ட முறையில் தான் ஏற்பதில்லை என்பதையும் கடைசியில் சொல்கிறார். நான் இதை ஏற்கிறேன். ஏற்க முடியாதவை இவை: சூழலியல் குற்றச்சாட்டுகள் முக்கியமானவை என்று விட்டு அக்குற்றங்களை அரசியல் தலைவர்களும் கல்லூரி முதலாளிகளும் செய்யவில்லையா, அவர்கள் ஏன் நீங்கள் விமர்சிப்பதில்லை என கேட்கிறார். ஒரு குற்றத்தை எப்படி இன்னொரு குற்றம் நியாயமாக்கும்? மேலும் மீடியாவில் எப்போதும் ஒட்டுமொத்தமாய் எல்லாரது குற்றங்களையும் பேச இயலாது. ஒரு சந்தர்ப்பம் உருவாகும் போது தான் பேச இயலும்.