Skip to main content

Posts

Showing posts from October, 2018

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

சர்க்கார் சர்ச்சை: காப்பியும் தழுவலும் ஒன்றா?

  புதிய தலைமுறை இணையதளக் கட்டுரை ஒன்று - “கதைத் திருட்டில் தமிழ் சினிமா” – இதுவரை வெளிவந்த பல முக்கிய தமிழ்ப் படங்களின் கதைகள் தழுவல் என்கிறது. சமூக வலைதளங்களில் மேலும் பல தழுவல் படங்களின் பெயர்கள் தரப்படுகின்றன. ஒரு நண்பர் கமலின் அத்தனை நல்ல படங்களும் தழுவல் தானே எனச் சொல்லி ஒரு பட்டியல் அளித்திருந்தார். இதையே பாலு மகேந்திராவுக்கும் சொல்கிறவர்கள் உண்டு. மணிரத்னமும் விடுபடுவதில்லை. “இருவர்” படத்தில் சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு வெகுவாய் கொண்டாடப்பட்ட ஒன்று. ஆனால் இப்படத்திலும் மோகன் லால் தன் மனைவியின் இறுதிச் சடங்கில் பங்கு பெறும் காட்சியின் ஒளிப்பதிவு செவன் சாமுராய் படத்தின் இறுக்காட்சியை வெகுவாய் ஒத்திருக்கும். தமிழின் மகத்தான படங்களில் ஒன்றான “நந்தலாலா” “கிக்குஜீரோ” எனும் படத்தின் தழுவல் என சர்ச்சை அப்படம் வெளியிடப்பட்ட காலத்தில் எழுந்தது. இப்படியே, நுண்ணோக்கியை இப்படி அருகில் கொண்டு போய்ப் பார்த்தால் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட எந்த சாதனையாளர்களும் எஞ்ச மாட்டார்கள். ஆனால் இவ்வாறு காப்பியடிப்பவர்கள் எனும் முத்திரையை ஒரு படைப்பாளி மீது குத்துவதும் முழுக்க நியாயம் அல்ல. கா...

நிர்மலா தேவி வழக்கில் உண்மைக் குற்றவாளிகள் ஏன் தப்பிக்கிறார்கள்?

அதிகார வர்க்கத்துக்காக நிர்மலாதேவி செய்தது போன்ற குற்றங்களில் சம்மந்தப்பட்ட பிரமுகர்கள், ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து காப்பாற்றப்படுவது வாடிக்கை. யாரும் இதைத் தடுக்க முடியாது. இதற்கு முழுப்பொறுப்பை நம் அரசியல் சட்ட அமைப்பை எழுதினவர்கள் தாம் சுமக்க வேண்டும். நீதியை நிலை நாட்ட வேண்டும் என்பதை விட அதிகார ஓரிடத்தில் குவிய வேண்டும், ஆளும் கட்சி நிலையாக இருக்க வேண்டும், மாநிலங்கள் ஒற்றைப் புள்ளியில் திரள வேண்டும், அவர்களுக்குள் அதிகாரப் போட்டி ஏற்படக் கூடாது, பிரிவினை எண்ணம் வரக் கூடாது என்பதே நம் சட்டத் தந்தைகளின் நோக்கமாய் இருந்தது. ஆகையால் அதிகார பரவலாக்கத்தை ரத்து செய்து அதிகார குவிப்பை அவர்கள் ஆதரித்தார்கள்.

நிர்மலா தேவியின் காவல்துறை வாக்குமூலத்தில் ஏன் ஆளுநர் பெயர் இல்லை?

நிர்மலா தேவி ஆரம்பத்தில் மீடியாவிடம் அளித்த வாக்குமூலத்தில் இருந்து இப்போது சி.பி.சிஐடியிடம் அறித்துள்ள வாக்குமூலமும் பெருமளவில் மாறுபடுவது வெளிப்படை. கவர்னர், கவர்னரின் உதவியாளர், பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர், சில அதிமுக பிரமுகர்கள் உள்ளிட்டோரின் பெயர்கள் விடப்பட்டுள்ளன. தான் பொய்யாக அத்தகையோரின் பெயரை செல்வாக்குக்காக பயன்படுத்தியதாக இப்போது சொல்கிறார் நிர்மலா தேவி. தன் செல்வாக்கை காட்டும் பொருட்டு அதை மாணவிகளிடம் சொல்லியிருக்கலாம், மீடியாவிடம் ஏன் அத்தகைய பெயர்கள் வர வேண்டும்? இந்த முரண் முக்கியம்.

கருத்து சுதந்திரத்தின் மரணம்

இன்று MeToo குறித்து தமக்குள்ள விமர்சனங்களை வெளியே சொல்ல ஆண் எழுத்தாளர்கள் பலர் தயங்குகிறார்கள். எதையாவது சொல்லப் போய் விழுந்து பிறாண்டி விடுவார்களோ எனும் அச்சம். இதே அச்சம் இன்று பத்திரிகை எடிட்டர்களுக்கும் உள்ளது. MeToo இயக்கத்தின் மீதான என் விமர்சனங்களை படிக்கும் எடிட்டர்கள் “உங்கள் தரப்பை, வாதத்தை ஏற்கிறேன், முக்கியமான கருத்துக்கள் தாம், ஆனால் …. இதை வெளியிட்டால் திரித்து எங்களுக்கு எதிராய் கடும் பிரச்சாரம் செய்வார்கள்” என்று பின்வாங்குகிறார்கள். அப்படியான ஒரு பீதிச் சூழல். ஒரு அறிவுச்சூழலில் எந்த கருத்தின் மறுபக்கத்தையும் தர்க்கரீதியாய் விவாதிக்க சுதந்திரம் வேண்டுமல்லவா? அது இன்று இல்லை. கருத்து சுதந்திரம் செத்து விட்டதாய் நான் உண்மையில் உணர்வது இப்போது தான்.

உடல் சவால்கள் குறித்த “நீயா நானா”

உடல் சவால் கொண்ட கலைஞர்கள் பங்கேற்ற மிகவும் நெகிழச் செய்கிற, முக்கியமான கேள்விகளை எழுப்பிய சமீபத்திய “நீயா நானா” நிகழ்ச்சியில் ஒரு பார்வை சவால் கொண்ட ஆசிரியர் தன்னை ஒத்தோருக்கு வேலை கிடைப்பதில் உள்ள பிரதான சிக்கலைப் பற்றி குறிப்பிட்டார். தனியார் துறைகளில் பார்வை சவால் கொண்டோருக்கு வேலை கொடுக்கவே தயங்குகிறார்கள். குறிப்பாக ஆசிரிய வேலை எட்டாக்கனியாகவே இருக்கிறது, (ஆச்சரியமாக இந்த வேலையில் தான் நான் பார்வை சவால் கொண்டோரை அதிகமாய் பார்த்திருக்கவும் செய்கிறேன்.) எனக்கே இப்படியான அனுபவம் ஓன்று உள்ளது.

Metooவும் இஸ்லாமிய வெறுப்பும்: அந்த பெரிய மிருகம் நம்மை நோக்கி ஓடி வருது!

ஒரு பெண்ணியவாதி என்னிடம் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார் : “ நான் Metoo வுக்கு ஆதரவாய் டிவிட்டரில் நிறைய பகிர்ந்து கொள்கிறேன் . டிவியில் தோன்றி பேசுகிறேன் . அதனால் இப்போல்லாம் என் பொதுவான ஆண் நண்பர்கள் , இலக்கிய ஆண் நண்பர்கள் என்னைப் பார்த்தாலே தலையை திருப்பிக்கிட்டு அந்தப் பக்கமா போயிடறாங்க . ரொம்ப ஏமாற்றமா இருக்கு . ஆண்கள் ஏன் இவ்வளவு பிற்போக்கா இருக்காங்க ? ஏன் இந்த metoo இயக்கத்தை அவங்க ஆதரிக்க மாட்டேங்குறாங்க ?” நான் “ அதற்கு நீங்க பயன்படுத்துற மிகையான தொனி , நீங்க ஆண்களை “ ஜுராசிக் பார்க் ” டினோசர்களாக சித்தரிக்கும் விதமே காரணம் ” என்றேன் . பாலியல் குற்றத்தைப் பொறுத்தமட்டில் metoo பெண்ணியவாதிகள் அதை எங்கும் நிறை , முடிவிலியாக பார்க்கிறார்கள் . எப்படி தெய்வத்தை அழிக்க முடியாதோ அதே போல ஆண் செய்யும் பாலியல் குற்றத்தையும் தவிர்க்க முடியாது என்கிறார்கள் .

எல்லா ஆண்களும் தகாத உறவில் ஈடுபடுகிறவர்களா?

பெருந்தேவியின் “ பாலியியல் துன்புறுத்தல்...” என தலைப்பிட்ட, மின்னம்பலத்தில் வெளியான, இந்த கட்டுரை ஒரே மட்டையடி தடாலடியாக உள்ளது. https://minnambalam.com/k/2018/10/23/20?fbclid=IwAR3PC_b5uM56vF2hCRz9Z1U-2SuKtp2rSovzjnpDt7OUxj1dL1NVw7qheVg உதாரணமாக அவர் “சில நேரங்களில் சில மனிதர்கள்” நாவலை விவாதிக்கும் இந்த இடத்தைப் பாருங்கள்: //" எல்லா ஆம்பிளைகளுக்கும்… ஒருத்தன்கூட விதிவிலக்கு இல்லை. அப்பாவை நான் பார்த்ததில்லை. அண்ணா ? ஆமா , ரொம்ப யோக்கியன்தான். …

ஆசிரியர்-மாணவர் உறவில் நெருக்கம் தேவையா? (2)

இது தான் எதிர்காலமா?   1 ஆசிரியர்-மாணவர் உறவு அலுவலகத்தின் நான்கு சுவர்களைக் கடந்து செல்வது அவசியம். அப்போதே படைப்பூக்கமான செயல்பாடுகள் சாத்தியமாகும். உதாரணமாய், நான் கடந்த வருடம் என் மாணவர்களுடன் சேர்ந்து லக்கான் குறித்த ஒரு நூல் ஒன்றை எழுதி பிரசுரித்தேன். அதற்காய் அந்த மாணவர்களுக்கு கூடுதலாய் 20 மணிநேரங்கள் வகுப்பெடுத்தேன். வெளியேயும் அவர்களுடன் நிறைய நேரம் செலவிட்டேன். தொடர்ந்து அவர்களுடன் உரையாடி ஊக்கப்படுத்தி பாராட்டி திருத்தி எழுத செய்தேன். இதனாலே மொத்த நூலையும் எங்களால் ஆழமாகவும் விரைவாகவும் எழுதி முடித்திட முடிந்தது. அலுவலகத்தில் பத்து நிமிடம் சந்தித்து professionalஆக உரையாடினால் இப்படியான வேலைகளை யாரும் செய்ய முடியாது.

ஆசிரியர்-மாணவர் உறவில் நெருக்கம் தேவையா? (1)

பகவானும் அவர் மாணவ மாணவியரும் ஐரோப்பிய கார்ப்பரேட் சூழலில் என்னாவார்கள்? பெருந்தேவி தன் முகநூல் பக்கத்தில் மேற்கத்திய கல்வி நிலையங்களில் ஆசிரியர்-மாணவர் உறவு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்துள்ள வரைமுறைகள், நியதிகள் பற்றி எழுதியிருந்தார். பாலியல், இனவாத துன்புறுத்தல் நிகழக் கூடாது என்பதற்காக இரு சாராரும் ஒருவித இடைவெளியை தக்க வைக்க வேண்டும் என இத்தகைய நிறுவனங்கள் கோருகின்றன. Professional relationship (தொழில்முறை உறவு) என்பது வலியுறுத்தப்படுகிறது.