முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எல்லா ஆண்களும் தகாத உறவில் ஈடுபடுகிறவர்களா?


Image result for சில நேரங்களில் சில மனிதர்கள் + சிறுகதை

பெருந்தேவியின் பாலியியல் துன்புறுத்தல்...” என தலைப்பிட்ட, மின்னம்பலத்தில் வெளியான, இந்த கட்டுரை ஒரே மட்டையடி தடாலடியாக உள்ளது.
https://minnambalam.com/k/2018/10/23/20?fbclid=IwAR3PC_b5uM56vF2hCRz9Z1U-2SuKtp2rSovzjnpDt7OUxj1dL1NVw7qheVg

உதாரணமாக அவர் “சில நேரங்களில் சில மனிதர்கள்” நாவலை விவாதிக்கும் இந்த இடத்தைப் பாருங்கள்:
//"எல்லா ஆம்பிளைகளுக்கும்… ஒருத்தன்கூட விதிவிலக்கு இல்லை. அப்பாவை நான் பார்த்ததில்லை. அண்ணா? ஆமா, ரொம்ப யோக்கியன்தான். …



இந்த மாதிரி பஸ்ஸில வரும்போது அவனையும் பஸ்ஸில பார்த்திருக்கேன். - இதோ என் மேல சாயறானே அவன் எவ்வளவோ யோக்கியன் - அந்தக் கூடப் பொறந்த அண்ணனோட பார்வை இதைவிட அசிங்கமா இருக்கும். அவன் என்னென்ன நினைச்சுண்டு என்னைப் பார்க்கறானோ?”

ஊறுபடத்தக்க நிலையில் இருக்கும் பெண்ணின் தன்னிலை இந்த வரிகளில் காட்டப்படுகிறது. ஊறு உண்டாக்கக்கூடியவர்களில் சொந்தம் / அந்நியம், வீடு / வெளி என்ற பேதமேயில்லை.//

ஒரு அப்பா தன் மகளிடமும் அண்ணன் தன் தங்கையிடமும் பாலியல் அத்துமீறலில் ஈடுபடலாம். ஏனென்றால் அதுவே ஆணின் அடிப்படை இயல்பாம்.
இதை மேலும் நீட்டிக்கொண்டு போனால் எல்லாம் தகப்பன்களும் அண்ணன்களும் potential abusers என ஆகிறது. சரி உண்மை எனில் இதற்கு ஒரே தீர்வு தான்: ஹிட்லர் பாணியில் நம்மூரின் எல்லா ஆண்களையும் கேஸ் சேம்பரில் வைத்து கொன்று விடலாம். ஒரு வருடத்துக்கு ஒரு கோடி ஆண்கள் என கணக்கு வைத்துக் கொண்டால் விரைவில் ஆணினத்தையே அழித்து விடலாம். அதோடு பெண்களும் சுதந்திரம் அடைந்து விடுவார்கள்.
நம் பெண்ணியவாதிகளின் எதிர்மறை மனோபாவத்தை, tunneled visionஐப் பார்த்தால் எனக்கு இதைத் தவிர வேறொன்றுமே தோன்றவில்லை.
ஜெயகாந்தனின் மேற்சொன்ன நாவலில் தன்னை பலாத்காரம் செய்தவனை நோக்கி அப்பெண் ஈர்க்கப்படுவதைப் பற்றி, இதை ஒத்த மற்றொரு கதையான “அக்னி பிரவேசத்தில்” அவள் தாய் அந்த குற்ற நிகழ்வைப் பற்றி விசாரிக்கும் போது அவள் பபிள் கம் மெல்லுவதைப் பற்றி ஏன் பெருந்தேவி எழுதவில்லை?

பெண் தன்னிலை என்பது ஒற்றை பட்டையானது தானா? பெண் என்பவள் தொடர்ந்து உருமாறும் தன்னிலை இல்லையா? ஆண்-பெண் எனும் பால்நிலைகளை உடலாக மட்டுமே காண வேண்டுமா?
இக்கேள்விகள் இன்றைய பின்நவீன சுழலில் முக்கியமானவை. தன் பிரச்சார வசதிக்காக பெருந்தேவி காலாவதியான ஆரம்ப கால பெண்ணியத்தின் ஆண்-பெண் இருமை கதையாடலை இன்று பயன்படுத்தலாமா? பெண்ணாய் பிறந்தவள் ஒடுக்கப்படுபவள், ஆணாய் பிறந்தவன் என்றால் அவன் நிச்சயம் அப்பெண்ணை ஒடுக்குவான் என யோசிப்பது ஒரு தட்டையான பிற்போக்கு சிந்தனை அல்லவா?
தன் metoo பிரச்சார தேவைக்காக பெருந்தேவி ஆரம்பகால பெண்ணியவாதிகளின் பாணியை கையில் எடுப்பது வருந்தத்தக்கது. ஆண்-பெண் உறவாடல்கள் நுணுக்கங்களும் சிக்கல்களும் நிறைந்தவை, தொடர்ந்து உருமாறுபவை, ஒரு துன்புறுத்தலான உறவில் கூட துன்புறுத்துபவனும் பாதிக்கப்படுபவரும் ஒரே தன்னிலையில் தொடர்ந்து இருப்பதில்லை. இதையே ஜெயகாந்தனின் மேற்சொன்ன நாவலும் காட்டுகிறது. ஆனால் அந்நாவலின் ஒரு பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு அதை இவ்வளவு தட்டையாக பெருந்தேவி தன் பிரச்சாரத்துக்கு பயன்படுத்துவது நியாயமல்ல.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

சினிமாவும் சர்வாதிகாரமும்: யோசா சொல்வதென்ன?

  காட்சி ஊடகம் நமக்குப் பொழுதுபோக்க உதவுகிறது என்றாலும் அது அடிப்படையில் மனிதரைச் சிந்திக்க விடாமல் செய்து செயலூக்கத்தை ஒழிக்கிறது, இது சர்வாதிகாரத்தை நோக்கி இட்டுச் செல்கிறது என்று சில மாதங்களுக்கு முன் நான் விஜய்யின் வருகையை ஒட்டி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். இன்று தற்செயலாக மரியோ பார்கஸ் யோசாவின் ஒரு கட்டுரையைப் படித்தால் அதில் அவர் கிட்டத்தட்ட அதே கருத்தைத்தான் சொல்கிறார். காட்சி ஊடகங்களின் ஆதிக்கம் உள்ள சமூகம் சர்வாதிகாரத்துக்கு எதிராகச் செயல்பட முடியாமல் முடங்கும் என்கிறார்: (...) making the present unreal, turning actual history into fiction has the effect of demobilising the citizen, making him or her feel exempt from any civic responsibility, encouraging the conviction that it is beyond anyone's reach to intervene in a history whose screenplay is already written. Along this path we may well slide into a world where there are no citizens, only spectators, a world where, although formal democracy may be preserved, we will be resigned to the kind of lethargy dictatorships asp...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...