முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நிர்மலா தேவி வழக்கில் உண்மைக் குற்றவாளிகள் ஏன் தப்பிக்கிறார்கள்?


Image result for நிர்மலா தேவி
அதிகார வர்க்கத்துக்காக நிர்மலாதேவி செய்தது போன்ற குற்றங்களில் சம்மந்தப்பட்ட பிரமுகர்கள், ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து காப்பாற்றப்படுவது வாடிக்கை. யாரும் இதைத் தடுக்க முடியாது. இதற்கு முழுப்பொறுப்பை நம் அரசியல் சட்ட அமைப்பை எழுதினவர்கள் தாம் சுமக்க வேண்டும். நீதியை நிலை நாட்ட வேண்டும் என்பதை விட அதிகார ஓரிடத்தில் குவிய வேண்டும், ஆளும் கட்சி நிலையாக இருக்க வேண்டும், மாநிலங்கள் ஒற்றைப் புள்ளியில் திரள வேண்டும், அவர்களுக்குள் அதிகாரப் போட்டி ஏற்படக் கூடாது, பிரிவினை எண்ணம் வரக் கூடாது என்பதே நம் சட்டத் தந்தைகளின் நோக்கமாய் இருந்தது. ஆகையால் அதிகார பரவலாக்கத்தை ரத்து செய்து அதிகார குவிப்பை அவர்கள் ஆதரித்தார்கள்.

 முழுக்க முழுக்க அதிகார வர்க்கத்துக்கு சாதகமான, பொதுமக்களுக்கு விரோதமான அரசியல் சட்டம் நமது. மக்களுக்கு தண்டிக்க கிடைக்கும் ஒரே வாய்ப்பு தேர்தலே. அப்போதும் எதிர்க்கட்சி வந்து முந்தின ஆட்சியாளர்களை தண்டிப்பார்கள் என்பதில் எந்த உறுதியும் இல்லை. அது மட்டுமல்ல, ஊழல்களில் சரிபங்கை வகிக்கும் நம் அதிகாரிகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க முடியாது. அதிகாரிகளே தம்மைத் தாமே விசாரித்து நடவடிக்கை எடுக்க முடியாதில்லையா?
இந்த அவல நிலைக்கு ஒரு தீர்வு, இத்தகைய ஆளும் வர்க்கத்துக்கு எதிரான வழக்குகள் வரும் போது நீதிமன்றத்தின் கீழ் சமூக ஆர்வலர், எதிர்க் கட்சி தலைவர், நிபுணர் ஆகியோர் கொண்ட ஒரு குழுவை நிர்மாணித்து அதன் கீழ் வழக்கை விசாரிக்கும் சி.பி.சி.ஐடி போன்ற அமைப்புகளை கொண்டு வருவது; இந்த அமைப்பில் உள்ள விசாரணை அதிகாரிகளை பதவி நீக்கம் செய்யவும் அவர்களின் பதவி உயர்வுக்கு தடை விதிப்பதற்குமான அதிகாரத்தை இந்த நீதிமன்றக் குழுவுக்கு கொடுப்பது – சுருக்கமாய் ஆளும் கட்சியின் கையை சற்றே கட்டிப் போடுவது.
அதுவரை நீதி என்பதே சாத்தியமில்லை.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.