நேற்று Newsclick தளத்தில் வெளியான ஒரு முக்கியமான பேட்டியை பார்த்தேன் . காஷ்மீரில் இன்று வாழும் மக்களில் 40% பேர் மனநோயால் (post-traumatic syndrome, மன அழுத்தம் ) பாதிக்கப்பட்டுள்ளதைப் பற்றி உளவியலாளர் மற்றும் பேராசிரியரான ஷோபனா சோன்பர் பேசுகிறார் . நான் இத்தனை நாள் கவனிக்காதிருந்த ஒரு விசயம் இது - காஷ்மீரின் தீவிரவாதம் , பொருளாதாரம் , தனிநாடு கோரிக்கை , சுதந்திரம் , கருத்துரிமை , ராணுவ அத்துமீறல் பற்றி பேசுமளவுக்கு அங்குள்ள மக்களின் மனநலம் பற்றி நாம் யோசிப்பதில்லை . மனநோய் என்பது உடல் காயத்தை விட ஆபத்தானது , அதிக வலி ஏற்படுத்துவது , சமூகத்தையும் அடுத்த தலைமுறையையும் தீவிரமாக பாதிப்பது . அதுவும் ஒரு சமூகத்தின் சுமார் நேர்பாதி மக்கள் மன அழுத்தத்திலும் இன்னபிற மனப்பிரச்சனைகளிலும் இருக்கும் போது அவர்களின் நடவடிக்கை , சமூக எதிர்வினைகள் எப்படி இருக்கும் என பேட்டியாளர் ஷோபனாவிடம் கேட்கிறார் . மக்கள் அப்படியே உறைந்து போயிருக்கிறார்கள் என அவர் பதிலளிக்கிறார் . அவர்கள் தம்மைச் சுற்றி நிலவ...