Skip to main content

Posts

Showing posts from April, 2020

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

இவன் வேற மாதிரி

பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள ஆபத்தான சாலைகளைப் பற்றி (மலைப்பகுதியில் உள்ள குறுகலான பாதைகள்) ஒரு காணொளியைப் பார்த்தேன். அடிக்கடி மண் இடிந்து விழும், கற்கள் உருண்டு விழும் இடுங்கலான பாதைகளில் ஒரு பேருந்தில் பயணித்து ஒரு கூட்டம் ஒரு கிராமத்துக்கு வருகிறது; அங்கிருந்து பயணித்து கல்லாலான மலைகளைக் குடைந்து உருவான தங்கச்சுரங்கம் ஒன்றுக்குப் போகிறார்கள். இதன் நடுவே முகாம்கள் எழுப்பி அமைக்கப்பட்ட ஒரு ஆன்மீகக் கூட்டத்துக்கு அவர்கள் செல்கிறார்கள். ஒரு கிறுத்துவ போதகர் அவர்கள் மத்தியில் நின்று பேசுகிறார். உடல் நலிவுற்றவர்கள், கர்பிணிப்பெண்கள், குழந்தைகள் எனப் பெருங்கூட்டம் அவரிடம் ஆசி பெற முந்தியடிக்கிறது. புனித நீர் எனச் சொல்லி கேனில் இருந்து தண்ணீரை மொண்டு மொண்டு பக்தர்களுக்குக் கொடுக்கிறார்கள். தலையிலும் உடம்பிலும் ஊற்றுகிறார்கள்.

அசோகமித்திரனை வாசித்தல் (2)

3) மினிமலிச எழுத்து என்றால் என்ன , நவீனத்துவ சிறுகதை , நாவலின் அழகியல் என்றால் என்ன , இருத்தலியல் என்றால் என்ன எனப் புரிந்து கொண்ட பின் அந்த சட்டகத்தில் வைத்துப் பார்த்தாலே அசோகமித்திரனின் தனித்துவமான பங்களிப்பு நமக்கு விளங்கும் . அடுத்து அவர் வலியுறுத்திய அன்பு , கருணை மற்றும் மானுடநேயம் . பெண்களுக்கு அவர் அளித்த முக்கியத்துவம் . அசோகமித்திரன் சொல்ல வந்த சேதி இதில் தான் இருக்கிறது என நினைக்கிறேன் . தன்னைப் பிறரிடத்தில் வைத்து பார்ப்பது , அன்றாட வாழ்வில் “ தான் ” அழிவது , “ தான் - மற்றமை ” என இருமையை கடப்பது - அவருடைய கணிசமான பாத்திரப் படைப்புகள் போய் சேர்வது இந்த இருமையற்ற , ஈகோவற்ற வெளியில் தான் . அது குடும்ப பாசப்போராட்டங்களில் , வேலைக்கான , உய்வுக்கான போராட்டங்களில் நடக்கலாம் . சின்னச்சின்ன அன்றாடத் தேவைகளுக்கான பெரிய அலைச்சல்களில் நடக்கலாம் . இந்த முதிர்ச்சியை அசோகமித்திரன் உருவகமாக சித்தரிப்பார் - தண்ணீருக்கான அன்றாடப் போராட்டம் வாழ்க்கையில் ஈரத்துக்கான தேடலாவது (“ தண்ணீர் ”), பிறரது தத்தளிப்புகள் ...

அசோகமித்திரனை வாசித்தல் (1)

இன்று வாசகசாலையின் ‘ முன்னோடிகள் வரிசையில் ’ இன்று பேஸ்புக் லைவ்வில் அசோகமித்திரனின் எழுத்தை அறிமுகப்படுத்திப் பேசினேன் . முதன்முதலில் லைவ்வில் பேசுவதால் நடுக்கமாய் இருந்தாலும் ( கண்ணாடியைப் பார்த்துப் பேசுவதை விட மோசம் ) ஓரளவுக்கு சமாளித்து விட்டேன் . அடுத்த முறை பேசும் போது இந்த அனுபவம் கைக்கொடுக்கும் . இந்த உரைக்கான என் குறிப்புகளை இங்கு பகிர்கிறேன் .  1) அசோகமித்திரனை இலக்கிய வாசகர்களும் படிக்கலாம் , பொழுதுபோக்கை நாடும் வாசகர்களும் படிக்கலாம் . இது அவருடைய ஒரு தனித்துவம் . அவருடைய பெரும்பாலான கதைகளுக்கு இது பொருந்தும் . இந்த இயல்பை நீங்கள் அவரை சு . ரா , நகுலன் , க , நா . சு , ஆதவன் , மௌனி போன்றோருடன் ஒப்பிட்டால் இது துல்லியமாக விளங்கும் . இலக்கிய எழுத்துக்கு என்று ஒரு தனி மொழி , தனி நுண்ணுணர்வு , வாழ்க்கை நோக்கு , நம்பிக்கைகள் இருந்தன . கதை என்பதை மொழிக்கும் மனத்துக்குமான ஒரு உறவாடல் என இலக்கியவாதிகள் பார்த்தனர் ; கலை என்றால் அது பயிற்சியை , வாசிப்பை , மனநுட்பத்தைக் கோரும் ஒரு செயல்பாடு என ந...

புத்தகங்கள் யாருக்கானவை?

இது யாரெனத் தெரிகிறதா? ‘படிக்காத மேதை’ நம் பாரதப் பிரதமர் இந்த புத்தக தினத்தில் கோகுல் பிரசாத்   தனது பேஸ்புக் பக்கத்தில் கலை என்பது காலங்காலமாக ஒரு மேற்தட்டு பொழுதுபோக்கு மட்டுமே , அதனால் மனித குலத்துக்கு எந்த மேன்மையும் இல்லை என ஒரு குறிப்பை மீள்பதிவு செய்திருந்தார் : “ விதிவிலக்குகளை ஒதுக்கி விட்டுப் பார்த்தால் அரிஸ்டாட்டில் காலத்தில் இருந்தே கலை என்பது மேட்டுக்குடியினரின் ஈடுபாடு / செயல்பாடாகவே இருந்து வந்துள்ளது . பொருளாதார கவலைகள் அற்றவர்கள் அல்லது தன்னிறைவு அடைந்தவர்கள் தத்தம் உபரி நேரத்தில் அனுபவித்து மகிழ , வாழ்வைப் பயனுள்ளவாறு கழிப்பதாக நம்பி மகிழ்ச்சியில் திளைக்க , கலைச் செயல்பாடுகள் ஊக்குவிக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்டன . அப்பட்டமாக சொல்வதென்றால் வெட்டியாக இருந்த பொழுதுகளில் உலகியல் அபத்தங்கள் பற்றிய கவலைகளில் தங்களை ஆழ்த்திக் கொண்டார்கள் . ஞான விழிப்புணர்வு இன்றி ஆட்டு மந்தைகளாக மக்கள் வாழ்ந்து மாண்டு போவது குறித்து வருத்தப்பட்டார்கள் . உயரிய நோக்கம் இல்லாமல் உழலும் கூட்டத்தை வழி ...

எது ஆபாசம், தமிழச்சி?

பிரான்ஸ் தமிழச்சியின் சமீபத்தைய சர்ச்சையைக் கேள்விப்பட்டிருப்பீர்கள் - அவர் மிக அருவருப்பான காரியம் ஒன்றைப் பண்ணிக் கொண்டிருக்கிறார் . அதற்குத் துணையாக பெரியாரையும் பெண்ணியத்தையும் வேறு இழுத்துக் கொள்கிறார் . முதலில் விசயம் தெரியாதவர்களுக்கு ஒரு விளக்கம் : லூலுவின் தோழிகள் ஒரு பேஸ்புக் குழு அமைத்து சில அந்தரங்க சமாச்சாரங்களை பகிர்கிறார்கள் . அக்குழுவில் இருந்து ஒருவர் ஏதோ உடன்பாடின்மை காரணமாய் வெளியேறி உள்விவகாரங்களை தமிழச்சி மூலமாய் அம்பலபடுத்த முயல்கிறார் . தமிழச்சியும் வெட்கமின்றி தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை ஏதோ சமூக சேவை எனும் பாவனையில் வெளியிடுகிறார் . பாலியல் பஞ்சாயத்துகளில் இறுதித் தீர்ப்பு எழுதும் உரிமையை அவருக்கு யார் அளித்தார் எனத் தெரியவில்லை . ஆனால் பெண்ணியவாதி என தன்னை அறிவித்துக் கொள்ளும் ஒருவர் பாலியல் உரிமையை விட , ஒரு பெண்ணுக்கான கண்ணியத்தை விட , சுயமரியாதையை பேணும் சுதந்திரத்தை விட குடும்ப அமைப்பை பாதுகாப்பதே மேல் எனும் இடத்தில் நின்று பேசுவது அதிர்ச்சியாகவும் கச...

சைவ உணவு உண்கிறவர்கள் யார்?

நான் அண்மையில் முகநூலில் பகிர்ந்திருந்த ஒரு EPW கட்டுரை (“Deepening Divides” - Suraj Jacob and Balmurli Natrajan) ரொம்ப சுவாரஸ்யமான ஒரு பதிலை இக்கேள்விக்கு அளிக்கிறது : குஜராத் , ராஜஸ்தான் , ஹரியானா , பஞ்சாப் , உத்தர பிரதேசம் , மத்திய பிரதேசம் என கடந்த இரு பத்தாண்டுகளில் எங்கெல்லாம் இந்துத்துவா எழுச்சி பெற்றுள்ளதோ அங்கெல்லாம் சைவப் பழக்கம் மக்களிடம் அதிகரித்திருக்கிறது . வழக்கம் போல தெற்கத்தி மாநிலங்களில் சைவப் பழக்கம் குறைவாக உள்ளது என அவர்கள் சொல்கிறார்கள் ( பெண்களுக்கு ஆண்களை விட அதிகமாய் சைவ உணவை விரும்புகிறார்கள் என்றும் இது சொல்கிறது ). ஆனால் ஒரு அரசியல் சித்தாந்த எழுச்சியையும் மக்களின் உணவுப் பழக்கங்களின் மாற்றங்களையும் நேரடியாக தொடர்புபடுத்தி விட முடியாது என்பதையும் ஏற்கிறேன் . அதே நேரம் இந்த இந்துத்துவ - சைவ உணவு லிப் - லாக்கையும் மறுத்திட முடியாது .