கல்லுமேலே நின்னுகினு கன்னிகுறை சொன்னாக்கா கல்லும் கிடுகிடென்னும் கல்லில் இருக்கும் கருநாகம் கண்ணீர்விடும் ! புத்துமேலே நின்னுகினு பொண்ணு குறை சொன்னாக்கா புத்தும் கிடுகிடென்னும் புத்தில் இருக்கும் புதர்நாகம் கண்ணீர்விடும் ! ( ஒப்பாரிப் பாடல் ) தற்போது நடந்து முடிந்துள்ள பிக்பாஸில் பங்கேற்ற ஒருவரைக் குறித்து கடந்த ஆண்டு ஒரு பாலியல் குற்றச்சாட்டு வந்தது - அவர் சினிமா வாய்ப்பு வாங்கித் தருவதாக சொல்லி ஒரு இளைஞரை வீட்டுக்கு அழைத்து வந்து அங்கு அவரை பலவந்தப்படுத்தியதுடன் , அவரை வெளியேற அனுமதிக்காமல் நிர்வாணப்படுத்தி வீட்டுக்குள்ளே பூட்டி வைத்ததாகவும் , மிகவும் கெஞ்சிய பிறகே நீண்ட நேரத்திற்குப் பின்னர் விட்டிருக்கிறார் என்று . இந்த குற்றத்தை வெளியே சொன்னால் தான் ஒரு ஹோமோ என அம்பலப்படுவோம் என்றெண்ணி அந்த பாதிக்கப்பட்டவர் போலிஸில் புகார் அளிக்கவில்லை , சமூகவலைதளம் ஒன்றில் மட்டும் வெளிப்படுத்தினார் . மேலும் தன்னை பலாத்காரம் பண்ணினவரின் போலீஸ் , அரசியல் தொடர்புகள் குறித்து அவருக்கு அச்சம் இருந்ததால் அவர் ...